To search this blog

Sunday, June 14, 2020

Thirukkatkarai Divyadesam ~ தெருவெல்லாம் காவிகமழ் * திருக்காட்கரை*


உற்பலம்  என்ற வார்த்தை கேள்விப்பட்டு இருக்கீறீர்களா ?  .. ..  உற்பலம்  என்பது குவளை -  நீலோற்பலம், கருநெய்தல் என சங்க பாடல்களில் படித்து இருக்கலாம்.  இதில் குவளை செங்குவளை எனவும், நீலோற்பலமெனவும், செங்கழுநீர்ப்பூ எனவும் வழங்கியுள்ளமை அறியலாம்.   ஸ்வாமி நம்மாழ்வார் - 'தெருவெல்லாங் காவிகமழென்று தொடங்கி,   தெருவோடு வாசியற எங்கும் செங்கழுநீரின் நறுமணம் கமழப்பெற்ற திவ்யதேசம்' அறிவீர்களா ?


As we travel in the State known as God’s own Country, there are 13 divyadesam known as Malai Nattu divyadesangal.  Of them 2 – Thiruvattaru and Thiruvanparisaram are in Tamil Nadu  - the rest are spread in Kerala.  The general perception is it is tough to locate and reach these Divyadesams and have darshan – perhaps the easiest and most accessible of them all is this divaydesam, which books may tell as lying between Thrissur and Ernakulam near Irinjalakuda – tough !

Onam brings together a multitude of colours and flavours from across God’s Own Country, and the celebrations reach their apex on the auspicious day of Thiruvonam. Onam commemorates the return of  King Mahabali and brings together communities across the landscape in unified revelry.   Households are adorned with exquisite floral carpets (Pookkalam), traditional art forms and games are seen everywhere and homes are cleaned and impeccably maintained. One can see elaborate sumptuous feasts (Onasadya) served in every single home, with the feast ending with delicious payasam (Kerala dessert), which ensures that the message of oneness and hope is spread far and wide.    Onam is celebrated in Chingam month on Malayalam Solar Calendar. Chingam month is known as Simha month in other solar calendars and Avani month in Tamil Calendar. The day when Nakshatra Thiruvonam prevails in month of Chingam is considered for Onam celebrations.

The festival commemorates the appearance of Vamana avatar of Sriman Narayana  and the subsequent home coming of the legendary Emperor Mahabali. Onam celebrates the Asura King Mahabali's annual visit from Patala (the underworld). On Thiruvonam day, Asura King Mahabali is believed to visit every Malayali home and meet his people. 

Cochin University of Science and Technology (CUSAT) is a government-owned autonomous science and technology university in Kochi, Kerala.   It was founded in 1971.  Cochin University is a station of Kochi Metro. The station is located between Kalamassery and Pathadipalam. It was inaugurated by the Prime Minister of India Shri Narendra Modiji  in  2017 as a part of the first stretch of the metro system, between Aluva and Palarivattom.

Edappally in English literally translates as Eda, short for edaykku (Malayalam term for "in-between") and Pallykollunna Sthalam (Malayalam term for "the place or palace where Kings(Rajas) used to take rest ). The name is connected with Edappally Palace and Edappally rajas. Edappally is said to be one of the fastest-growing areas in the city of Kochi. Edappally was a Panchayath before getting included in Cochin Corporation. The Cochin corporation limits start from the traffic signal (Lulu Mall signal) towards Ernakulam and Palarivattom .   Edappalli Rajas  were the rulers of the late medieval feudal kingdom of Edappally (Elangallur Swarupam), which also included parts of Kallooppara, Karthikapally, Haripad, Cherthala, Vazhakulam,(muvattupuzha) in the present day state of Kerala.  According to local legends,  the last king of the Later Chera dynasty divided his kingdom among his various chieftains and governors. At the last minute, he realized that he had not given any land to his royal priests- the Elangallur Namboothiris. He then took back some land from the other lords and gave it to the royal priest family. A new dynasty was created - the Elangalllur swaroopam or the Kingdom of the Elangallur family in Edappally.

Such a long description of Edapally and Metro Railway – for it is a landmark for us – easily identifiable.  Just get down here – take an auto to the Divyadesam situate around 3 km – ‘Thirukkatkarai’ Temple. 

மலைநாட்டு திவ்யதேசங்கள் 13 - அவற்றில் திருவட்டாறு மற்றும் திருவண்பரிசாரம் தமிழகத்திலே அமைந்துள்ளன.  ஏனைய திவ்யதேசங்கள் சென்று சேவிப்பது  சற்று கடினம் என்கிற கருத்து பவரலாக உள்ளது.  மிக எளிதில் சேவிக்கக்கூடிய ஒரு அற்புத திவ்யதேசம் - திருக்காட்கரை.   கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் [பிரபலமான  கொச்சிதான் இது !]  திருக்காட்கரை எனுமிடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூர் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது.   இத்திருத்தலத்தில் வாமன அம்சமாக எழுந்தருளி இருக்கும் திருமால் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் புரிகிறார். திருக்காட்கரை அப்பன் என்னும் திருநாமத்தால் அழைக்கப்படும் இந்த பெருமாள் தனது நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி இருக்கிறார். தாயார் பெருஞ்செல்வ நாயகி, வாத்சல்வல்லி என்று பல குறிப்புகள் சொல்லப்பட்டாலும் இங்கும், பல கேரளா கோவில்களிலும் தாயார் சன்னதி கிடையாது.  திருநாவாய் திவ்யதேசத்தில் தனி சன்னதி தாயாருக்கு உள்ளது.


கேரளா திருக்கோவில்களின் சிறப்பு - கோவில் அமைப்பு - சன்னதி - மூலவர் சிறிய பெருமாளாய் எழுந்து அருளி இருப்பர்.  உத்சவர் சீவேலி புறப்பட்டு கண்டருள்வார்.  காலை, மதியம், சாயந்தரம், வாத்தியங்கள் முழங்க திருக்கோவில் நம்பூதிரிகள் தங்கள் கரங்களிலோ அல்லது குருவாயூர் போன்ற கோவில்களில் யானை மீதோ இந்த புறப்பட்டு நடக்கும்.  திவ்யதேசம் பெயர்: திருக்காக்கரா  எனும் திருகாட்கரை -  திருக்காட்கரையப்பன் கோயில் -  வாமனமூர்த்தி கோயில்  என பிரசித்தம்.   இப்பெருமாளை வாமனன் என்று கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையன்று இக்கோவிலில் பெரிய உத்ஸவம் நடக்கின்றது.  கேரளா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா,  திருக்காட்கரையப்பன் கோவிலில்தான் முதன் முதலாகத் தொடங்கியது என்கின்றனர்.  மகாவிஷ்ணு ஒரு கையில் ஓலைக்குடையும், மற்றொரு கையில் கமண்டலமும் தாங்கி, மூன்று அடி உயரத்திலான வாமனத் தோற்றத்தில் பூலோகம் வந்தார். பின்னர் மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்கு சென்று, அங்கு தானம் பெறச்சென்று மஹாபலியை முடித்து தர்மத்தை நிலை நாட்டினார்.   வாமனர் அவனிடம், தனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டினார். சுக்ராச்சாரியார்,  மகாபலியை எச்சரித்தார்.  வாமனர் தோற்றம் மிகப்பெரும் தோற்றமாக விஸ்வரூபம் எடுத்து  ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார்.  ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே?’ என்று மகாபலியிடம் கேட்டார். மகாபலி, வாமனராக வந்த மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘தங்களது மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலியை நிலத்தினுள் அழுத்தினார்.  இந்த வைபவம் நடந்த இடம் இவ்விடமே என மக்கள் கொண்டாடுகின்றனர்.  மகாபலி, ‘இறைவா! என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கொருமுறை என் நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினான். வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார். அந்நாளை திருவோணமாக கொண்டாடுகின்றனர்.இத்தலத்தில் ஒரு தனிகன் வாழைத்தோட்டங்கள் ஏற்படுத்தி குலை தள்ளாமலே பலமுறை அழிந்துபோய் அந்த  வாணிபன்  பொன் வாழைக்குலை செய்து திருக்காட்கரை அப்பனுக்கு  ஸமர்ப்பிக்க, பகவான் அநுக்ரஹத்தால் தோட்டங்களில் வாழை மரங்கள் உயர்ந்து வாழைக் குலைகள் இட்டதாகவும், அவையே, 'நேந்திரம் வாழை' என்று பிரஸித்தமாக இருப்பதாகவும், ஐதீஹம்.  இதைத்  தவிர பொன்வாழைக்குலை ஒருசமயம் காணாமல் போனதாகவும்,  அவ்வமயம் நடந்த தவற்றினால் ப்ருஹ்மராக்ஸ் உருவாகி  ஊரில் திரிந்ததாகவும், இங்கே அடங்கியதாகவும் தல வரலாறு உள்ளது.Thrikkakara Temple (also Thirukatkarai) is a beautiful temple where Sriman Narayana is worshipped as Vamana.     Located around 10 km north-east of the city center between Thrissur-Ernakulam highway (NH 47), Seaport-Airport Road, Cochin University of Science and Technology and Model Engineering College, it is the center of celebrations and place of origin for the popular Onam festival of Kerala.  The temple is thousands of year old.   The etymology of the name Thrikkakara ('Thiru-kaal-kara' meaning 'place of the holy foot') is also derived this way.

The main temple festival is during the Onam season, which falls on the month of August or September and is the most important event of the religious calendar here. The Onasadya or the Onam feast is held in a grand manner in the temple with lakhs of people belonging to all religions  participating in it. In earlier times the Onam festival was jointly organized by the 61 Naduvazhis (local rulers) under the leadership of the Maharaja of Travancore. Communal harmony continues to be the hallmark of the celebrations, with people belonging to different faiths and religions turning out in large numbers for the Sadya in keeping with the spirit of the festival.

ஸ்வாமி நம்மாழ்வார் 11 பாசுரங்கள் மங்களாசாசனம் செய்த திருத்தலம் இது. 

உருகுமால் நெஞ்சம்*  உயிரின் பரமன்றி*
பெருகுமால் வேட்கையும்*  என்செய்கேன் தொண்டனேன்*
தெருவெல்லாம்   காவிகமழ்*  திருக்காட்கரை*
மருவிய மாயன்தன்*  மாயம் நினைதொறே.

திருக்காட்கரையென்னுந் திருப்பதியிலே உள்ள  தெருக்கள்தோறும் செங்கழு நீர்ப்பூக்கள் மலர்ந்து மணம்  பரப்புகின்றன.    இவ்வாறு   சிறந்து விளங்கும் தலத்திலே  பொருந்தி வர்த்திக்கிற எம்பெருமானுடைய ஆச்சரியமான ஸெளந்தர்யசீலாதிகளை நினைக்கிறபோதெல்லாம்  நெஞ்சு கட்டுக்குலைந்து உருகாநின்றது !   ஆத்மாவுக்குத் தாங்கக்கூடிய அளவல்லாமல்  ஆசை கரைபுரண்டு செல்லா நின்றது,  ஸ்ரீமந்நாரணனின் திருத்தாள்களை எப்போதும் வணங்கும் தொண்டனான நான் என் செய்யக்கடவன் என உருகுகிறார் சடகோபன்.The temple complex, which is enclosed in a large area with picturesque surroundings, holds the main sanctum dedicated to Lord Vamana. The sanctum sanctorum of the main shrine houses small beautiful idol of Sriman Narayana.   Lord Parashurama is believed to have established the temple.  The temple  houses records containing the earliest mention of the celebration of the Onam festival dating to 861 A.D.   The temple is under the administration of the Travancore Devaswom Board.

Apart from the main sannathi, there are sannathies of - Bhagavati, Sastha, Gopalakrishna, Nāga, Brahmarakshasa and Yakshi. The Brahmarakshasa shrine is located in the outer complex, along with a Banyan-tree god.   Surrounding the inner complex walls is a series of thousands of lamps called Chuttuvilakku which translates to 'surrounding lamps'. There are two ponds associated with the temple, one is the Kapilatheertham located closer to the temple on the Northern side of the sanctum sanctorum, and is accessible only to priests. The other pond is located on the Northern side outside the temple walls, and is used regularly during the Aaraattu ceremonial bath of the idol during Onam celebrations.

There is also a Shiva temple beside the main Vamanamoorthy temple, housing  Shiva, Ganesha, Karthikeya and Durga.  Apart from the shrines and ponds, the temple complex houses three stages or halls for cultural performances called Naimishaaranyam, and a temple auditorium at the South-west corner. The auditorium is regularly used for weddings and meeting, and for conducting the Onam feast during the festival.

If you happen to visit and stay in Cochin, (say from  Ernakulam Railway station area) – the temple should be reachable in around 45 mins time.  Every auto driver / cab driver knows this Thirukkakkara temple and is so easily reached from Edapally metro railway station also.

Let us pray to the Great Emperuman who with His divine feet measured the Universe and sky for the safety of all of us and for keeping mankind safe from the crutches of cruel Corona.  Let Covid 19 be  eradicated sooner and let us all have great darshan of Sriman Narayana in all His Divaydesams and other important temples.

adiyen Srinivasadhasan]
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.6.2020.

No comments:

Post a Comment