To search this blog

Friday, February 2, 2018

தையில் மகம் இன்று : Thirumazhisai Aazhwaar Sarrumurai 2018

 Thirumazhisai Aazhwaar Sarrumurai 2018    திருமழிசை ஆழ்வார் அவதரித்த நன்னாள்   

தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.


என நம் ஆசார்யரான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள்  இந்நாள். சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) வழியாக திருவள்ளூர்திருப்பதி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் "திருமழிசை". - உலகு மழிசையும் உள்ளுணர்ந்துஉலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மாநீர் மழிசை வலிது என பிரசித்தி பெற்ற இத்தலத்தில்   துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம் தை மாசம்  கிருஷ்ண பக்ஷம் பிரதமை திதி கூடிய மகம் நட்சத்திரத்தில்பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக  திருமழிசைப்பிரான் அவதரித்தார். இவர் ஸுதர்சனமென்னும் சக்கரதாழ்வாரின் திரு அம்சம். 


A great day today  ~ Friday 2nd Feb 2018 happens to be Magam in the month of Thai marking the birth anniversary of Sri Thirumazhisai Azhwar.  For Srivaishnavaites, Azhwaars and their birthdays  are of great significance.    Bhakthisarar,  well known as Thirumazhisai Azhwar was born in Thirumazhisai and hence is hailed as Thirumazhisai Piran.  This  place is near Poonamallee around 20 kms away from Chennai on the Bangalore High Road.

Thirumazhisaippiran’s  works are : Naanmukhan Thiruvanthathi (96) and Thiruchanda Virutham (120).  He was born in the Magam nakshathiram of Thai month.  


முக்கண் மூர்த்தியான சிவபெருமான் இவருக்கு பக்திசாரர் என திருநாமம் சாற்றினார். இவர் பல இடங்களுக்கு சென்று பல மதங்களையும் பரிசோதித்தவர். பேயாழ்வார் இவரை திருத்தி பணி கொண்டார்.    இவர் திருக்கச்சி யதோத்தகாரி சன்னதியில் சில காலம் எழுந்து அருளி இருந்தார்.  அப்போது பல்லவ மன்னன் இவரது சீடரான கனிகண்ணன் என்பாரிடம் தனக்கு அழியாத இளமை தருமாறு கவி பாட  ஆணையிட்டார். "நாம் மானிடம் பாடோம்" என கனிக்கண்ணன் மறுக்கவே இனி நீ இவ்வூரில் வசிக்கலாகாது என அரசன் சொல்ல - ஆழ்வார் பெருமாளிடம் "நீயும் உந்தன் பை நாக பாய் சுருட்டிக்கொள்" என பாடி ஊரை விட்டே அகன்றனராம்.   பிறகு மன்னன் தனது தவறு உணர்ந்து வேண்டிக்கொள்ள சீடனும்ஆழ்வாரும்பெருமாளும் திரும்பி வந்தனர். பெருமாளுக்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்ற திருநாமமும் இவர்கள் இரவு தங்கி இருந்த ஊர் ஓரிருக்கை எனவும் வழங்கபடுகிறது. 

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 -  நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை "துய்ய மதி பெற்ற" என ஸ்ரீமணவாளமாமுனிகள் கொண்டாடுகிறார். நான்முகன் திருவந்தாதியில்   தாளால் உலகம் என்ற பாசுரத்தில் "நீளோதம் வந்து அலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்" என திருவல்லிக்கேணியை மங்களா சாசனம் செய்துள்ளார்.

தனது நான்முகன் திருவந்தாதியில் சக்கரத்தைக் கையில் கொண்ட திருமால் ஒருவன்தான் தேவன். அவன் பெருமையை  வேதம் முதலிய நூல்களால் ஆராயப்படும் பொருள்அவன் திருவடி தொழுவதே எல்லா அருளும் தர வல்லது என :

தேருங்கால்  தேவன் ஒருவனே என்று உரைப்பர்;
ஆரும் அறியார் அவன் பெருமை; - ஓரும்
பொருள்முடிவும் இத்தனையேஎத் தவம் செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான் பால்


என்று பாடிய திருமழிசை செல்வன் பக்திசாரர்  அவதரித்த நன்னாளை கொண்டாடுவோம்.  Here are some photos taken on day 5 at Thirumazhisai in Azhwar thiruvavathara uthsavam ~  Thirumazhisaippiran with Sri Jagannatha Perumal


அடியேன் : ஸ்ரீனிவாச தாசன் (S. Sampathkumar)









2 comments:

  1. மிக அழகிய தரிசனம்....

    திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!

    ReplyDelete
  2. In India, there are actually three foremost film industries which are Bollywood, Tollywood and Kollywood. tamil lyricists 2020

    ReplyDelete