To search this blog

Saturday, January 22, 2011

Thirumazhisai Aazhwaar Satrumurai - Thaiyil magam indru


திருமழிசை ஆழ்வார் அவதரித்த நன்னாள்  


For Srivaishnavaites, Azhwaars are of great significance.  The hymns sung by the Twelve great Saints, collectively are known as Naalayira Divya Prabandham.    Bhakthisarar,  well known as Thirumazhisai Azhwar was born in Thirumazhisai.  This is place is near Poonamallee around 20 kms away from Chennai on the Bangalore High Road.   From there as you take a right turn in the road towards Thiruvallur, Tirupathi, this place is located  a few hundred meters away. 
The legend of the temple at Thiruvegha in Kanchipuram is associated with Thirumazhisai azhwaar.  The King insisted on the disciple of Azhwaar by name Kanikannan to sing in his praise.  He refused and promptly was banished outside the kingdom.  Azhwaar followed his disciple and sang to Lord that they are moving out of the town.  The Lord transgressing the immobile idol form, also went following the azhwaar plunging the kingdom in darkness.  The King realizing his folly, then prostrated before the disciple and  azhwaar requesting them to return.  The saint returned and so did the Perumal.  Even now this God is affectionately called “Yathokthakari” – the one who did as told by his devotee. 
His works are : Naanmukhan Thiruvanthathi (96) and Thiruchanda Virutham (120). He was born in the Magam nakshathiram of Thai month.  22nd Jan happened to be His annual celebrations.   Here is a small write up on the Azhwaar with photo of Thirumazhisai temple, Azhwaar at Thirumazhisai’ ; azhwaar and Gajendra Varadhar purappadu in Triplicane.


தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்ய மதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.
என நம் ஆச்சர்யனான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள் இந்நாள். சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) வழியாக திருவள்ளூர், திருப்பதி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் "திருமழிசை".


- உலகு மழிசையும் உள்ளுணர்ந்து, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மாநீர் மழிசை வலிது என பிரசித்தி பெற்ற இத்தலத்தில்   துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம் தை மாசம்  கிருஷ்ண பக்ஷம் பிரதமை திதி ஞாயிற்றுக்கிழமை கூடிய மகம் நட்சத்திரத்தில், பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக  திருமழிசைப் பிரான் அவதரித்தார். இவர் ஸுதர்சனமென்னும் சக்கரதாழ்வாரின் திரு அம்சம். 

முக்கண் மூர்த்தியான சிவபெருமான் இவருக்கு பக்தி சாரர் என திருநாமம் சாற்றினார். இவர் பல இடங்களுக்கு சென்று பல மதங்களையும் பரிசோதித்தவர்.  பேயாழ்வார் இவரை திருத்தி பணி கொண்டார்.    இவர் திருக்கச்சி யதோத்தகாரி சன்னதியில் சில காலம் எழுந்து அருளி இருந்தார்.  அப்போது பல்லவ மன்னன் இவரது சீடரான கனிகண்ணன் என்பாரிடம் தனக்கு அழியாத இளமை தருமாறு கவி பாட  ஆணையிட்டார். கனிகண்ணன் மறுக்கவே இனி நீ இவ்வூரில் வசிக்கலாகாது என அரசன் சொல்ல - ஆழ்வார் பெருமாளிடம் "நீயும் உந்தன் பை நாக பாய் சுருட்டிக்கொள்" என பாடி ஊரை விட்டே அகன்றனராம்.   பிறகு மன்னன் தனது தவறு உணர்ந்து வேண்டிக் கொள்ள சீடனும், ஆழ்வாரும், பெருமாளும் திரும்பி வந்தனர். பெருமாளுக்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்ற திருநாமமும் இவர்கள் இரவு தங்கி இருந்த ஊர் , ஓரிருக்கை எனவும் வழங்கபடுகிறது. 

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். தனது நான்முகன் திருவந்தாதியில் சக்கரத்தைக் கையில் கொண்ட திருமால் ஒருவன்தான் தேவன். அவன் பெருமையை  வேதம் முதலிய நூல்களால் ஆராயப்படும் பொருள், அவன் திருவடி தொழுவதே எல்லா அருளும் தர வல்லது என :
தேருங்கால்  தேவன் ஒருவனே என்று உரைப்பர்;
ஆரும் அறியார் அவன் பெருமை; - ஓரும்
பொருள்முடிவும் இத்தனையே; எத் தவம் செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான் பால்
தாளால் உலகம் என்ற பாசுரத்தில் "நீளோதம் வந்து அலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்" என திருவல்லிக்கேணியை மங்களா சாசனம் செய்துள்ளார். .
திருத்துழாய் மாலை சூடிய திருமுடி  உடையவனான  திருமாலை, விடாது கைகள் கூப்பித் தொழுது, தியானித்து, தலை சாய்த்து வணங்கி, குளிர்ந்த பூக்கள் கொண்டு வழிபடுங்கள். உங்கள் வாய் அவனைத் துதிக்கட்டும். கண்கள் அவனையே நோக்கட்டும். காதுகள் அவனைப் பற்றியே கேட்கட்டும் - என்று 
"வாழ்த்துக -வாய்; காண்க கண்; கேட்க செவி; மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால்- - சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை
வழாவண் கைகூப்பி மதித்து"
என்று பாடிய திருமழிசை செல்வன் பக்திசாரர்  அவதரித்த நன்னாளை கொண்டாடுவோம். 
அடியேன் : ஸ்ரீனிவாச தாசன் 
அவதார ஸ்தலத்தில் உத்சவர் திருமழிசைப்பிரான் 


திருவல்லிக்கேணி திருமழிசைப்பிரான் புறப்பாட்டில் ஆழ்வாரும்

 கஜேந்திர வரதரும் 
1948 இல் திருமழிசை ஆழ்வாரின் கதை  சி கண்ணன் பிள்ளை தயாரிப்பில்  எம் எம் தண்டபாணி, பி வி ரங்காச்சாரி  நடித்து திருமழிசை ஆழ்வார் என்ற பெயரில் வெளியிடப்பட்டதாம். 

1 comment: