On the evening of day 1 of Brahmothsavam-
31stJan 2016, – it is Punnai Kilai Vahanam with Sri Parthasarathi
in His avatar as Sri Krishna, the Divine Flautist.
Unlike Ramavathara, Lord Krishna exhibited glimpses of
divinity many a times... as he grew up
in Vrindavanam, people were attracted to Him with boundless devotion longing
for the Lord, longing to hear His melodious flute; yearning to get near and be
with Him. It was not the earthly love but the infinite devotion to the
Lord ~ the Punnaikilaivahanam depicts his iraasaleelai with gopikas.
ஸ்ரீ
பார்த்தசாரதி - கிருஷ்ணாவதாரம் - ப்ரம்மோத்சவத்தில், முதல் நாள்
மாலை புன்னை கிளை வாஹனம். வேய்ங்குழல் ஊதும் கண்ணனாக 'புன்னை கிளை வாஹனத்தில் " குரவை
ஆய்ச்சியர்களோடு விளையாடும் திருக்கோலம்." புன்னை மிகவும் அழகிய தோற்றம்
கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள்
சற்று பெரியதாகவும், பளபளப்பாகவும் இருக்கும். புன்னைமரத்தின்
அறிவியற் பெயர்: calophyllum inophyllum : calophyllum என்பதன் பொருள்அழகான இலை.
பெரியாழ்வார்
தனது பாசுரங்களில், கண்ணனின் குழலோசையை
"தூவலம்புரியுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே" எனவும் ........
மதுசூதனன் வாயில் குழலி னோசை
செவியைப்பற்றி வாங்க*
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை
மறந்து*
கின்னரமிதுனங்களும் தம்தம் கின்னரம்
தொடுகிலோமென்றனரே." ~ என்றெல்லாம்
சிறப்புற அனுபவிக்கிறார்.
கண்ணபிரானுடைய வாயில் (வைத்து ஊதப்பெற்ற)
வேய்ங்குழலினுடைய ஸ்வரமானது, செவிகளை கவர்ந்திழுக்க, நல்ல வீணையைக்
கையிலுடைய தும்புருமுனிவனும், நாரதமஹர்ஷியும் தங்கள் தங்களுடைய
வாத்தியங்களை இனி தொடவும் மாட்டோம் என்றனராம்.
Here are some photos of Sri Parthasarathi in Punnai Kilai
vahanam taken this evening.
No comments:
Post a Comment