To search this blog

Friday, September 13, 2019

Thiruvallikkeni Thiru Pavithrothsavam 6 - 2019


Ever wondered what is the purpose of life ? ~ why were we born .. why did Emperuman bless us with good hands, legs and tongue ? – what are we to do with the members of the body ??

To the Western World, there are many insignificant happenings .. today is a Full moon day.  In the Northern Hemisphere, the full moon closest to the autumn equinox is known as the Harvest Moon. Depending on the  time zone, 2019’s autumn equinox for the Northern Hemisphere comes on Sept 22 or 23 ~ and the September full moon comes today, on the night of Friday, Sept 13, for the most of North America, and on September 14 for much of the rest of the world. Thus, for the Northern Hemisphere, this upcoming full moon – the full moon closest to  autumn equinox – is our Harvest Moon. For the Southern Hemisphere, the Harvest Moon always comes in March or early April.

Harvest Moon is just a name. In some ways, it’s like any other full moon name. But these autumn full moons do have special characteristics, related to the time of moonrise.  A Full Moon on Friday the 13th only happens once every 20 years on average. Stargazers were last treated to a Full Moon on the spooky date in October 2000. The next Full Moon on Friday the 13th will take even longer and will not appear until August 13, 2049.

For us such mundane things do not worry .. ..  we are blessed with the good heart supported by strong and good faculty of hands, legs, mouth, tongue  with its faculty of speech – all provided for the purpose of praising our Emperuman Sriman Narayanan all the time and to those who do not indulge in such practices despite have strong limbs, we should feel sad for such people  who make no effort to praise the Lord  get to accrue further Karmas by their act of non-performance !.

‘நம்மை எம்பெருமானான ஈச்வரன் படைத்தது எதற்கு ? நமக்குக் கைகால், வாய், மூக்கு, நாக்கு போன்ற அங்க அவயங்களை நல்லபடி தந்தது எதற்கு ??   ~  எந்த  ஆராய்ச்சியும்  தேவையில்லை.  பகவத் விஷயத்திலே பல்லாண்டு பாடி எம்பெருமானை துதிப்பதே நம் வாழ்க்கை வழிமுறை என்கிறார் சுவாமி நம்மாழ்வார் தமது 'பெரிய திருவந்தாதியில்". 

வகைசேர்ந்த நல் நெஞ்சும் நாவுடைய வாயும்*
மிகவாய்ந்து வீழா எனிலும்* -மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தாதிருப்பர் இதுவன்றே?
மேலைத்தாம் செய்யும் வினை*

                         ஞானத்தினால் எம்பெருமானை அடைந்து உய்வதற்கு  மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும், எம்பெருமானை  நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும்,  இப்புவியில்  சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள், நன்றாக ஆராய்ச்சி பண்ணி எம்பெருமானைப் போற்றிப்  பேசுவதற்கு இயல்பான  நாவோடு கூடிய வாக்கும் கிடைக்கப்பெற்றும், எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை  வாழ்த்தாமல் வெறுமனே இருப்பவர்கள், இனி எஞ்சி இருக்கக்கூடிய  காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது - என அங்கலாய்க்கிறார் சுவாமி நம்மாழ்வார் தமது பெரிய திருவந்தாதி பாசுரத்திலே !

.. .. திருவல்லிக்கேணி திவ்யக்ஷேத்திரத்தில்  இன்று பவித்ரோத்சவத்தின் ஆறாம் நாள். பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.   இன்று மாலை நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், பெரிய  அழகு மலர் மாலையுடன், கிரீடம்,  புதுப்பூணூல் சாற்றிக்கொண்டு அற்புத புறப்பாடு கண்டு அருளினார். இன்றைய படங்களிலே பெருமாள் பல வண்ணப் பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம். இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை. 

Here are some photos of Sri Parthasarathi Perumal taken during 6th day of Thiru Pavithra Uthsava purappadu at Thiruvallikkeni in the evening of today.

            ~adiyen Srinivasadhasan.   13.09.2019.











Sunday, September 8, 2019

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருப்பவித்ரோத்சவம் 2019 (Thiru Pavithrothsavam)


நம் எம்பெருமானுடைய  கடாக்ஷம் பெறப்பெறின்  எத்தகைய மனக்களிப்பு உண்டாகும் ? முத்துக்களோ, வைரங்களோ, நன்பொன்னோ  ~ வேறு ஏதும் விலை மிக அதிகமான பொருளோ ? - நமக்கு எதிலே நாட்டம் ?? ஐயம் கிஞ்சித்தும் உளதோ ??  :  சுவாமி நம்மாழ்வாரின் வைர வரிகள் :

*பெருங்கேழலார் தம்  பெருங்கண் மலர்ப்புண்டரீகம்  நம்மேல் ஒருங்கே பிறழுவதே **   ~  அன்று  பிரளய  வெள்ளத்திலழுந்தின பூமியை மீட்டு எடுத்த மஹாவராஹ ரூபாய மயமானவர்,  எம்பெருமான் தம்முடைய பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை, தன்னை குளிர நோக்கினமை நம்மாழ்வார் கூறியவாறு,  நம்மேல் வைத்த கடாக்ஷத்தை பற்றி மட்டுமே பேருவகை கொள்தல் நலம்.

Today (8th Sept 2019) is  day 1  of Thirupavithrothsavam at Thiruvallikkeni –  and Sri Parthasarathi had grand purappadu at Thiruvallikkeni.  Apart from the beautiful crown, the big garlands and His most attractive face, one can worship the silken threads (pavithram) adorning Him.


.. .. திருவல்லிக்கேணி திவ்யக்ஷேத்திரத்தில்  இன்று பவித்ரோத்சவத்தின் முதல் நாள்..  இன்று மாலை நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், சங்கு சக்கரங்கள் மறைந்தவாறு சாற்றப்பட்ட பெரிய மாலையுடன், அழகு கிரீடம்,  புதுப்பூணூல் சாற்றிக்கொண்டு அற்புத புறப்பாடு கண்டு அருளினார். இன்றைய படங்களிலே பெருமாள் பல வண்ணப் பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம். இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை.  பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.


திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாகசாலை அமைத்து ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்;  அத்யாபகர்கள் மற்றும் திவ்யபிரபந்த கோஷ்டியினரால் அருளிச்செயல் - திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது. 


திருவுடம்பு வான்சுடர் செந்தாமரை கண்கைகமலம்,
திருவிடமே மார்வம் அயனிடமே  கொப்பூழ்,
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,
ஒருவிடமொன்றின்றி என்னுள்  கலந்தானுக்கே


சுவாமி நம்மாழ்வார் ~ எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தம்மிடம் வந்தடைந்ததை - 'ஒருவு இடம் ஒன்று இன்றி' -  நீங்கின இடம் ஒன்றுமில் வாதபடி (ஸகல அவயவங்களிலும்) தன்னோடு சேர்ந்தவனாய் உள்ள எந்தை என அதிசயிக்கிறார். அதிஅத்புதமான நம் எம்பெருமான் - திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது.  திருக்கண்கள் செந்தாமரை மலர்களாயிரா நின்றன; திருக்ககைகள் - தாமரை மலர்களாயின ; அவரது திருமார்பு - பிராட்டிக்கு இருப்பிடயாயிற்று; திருநாபியோ ப்ரம்மதேவனுக்கு  உறைவிடமாயிற்று;  அத்தகைய சிறந்த எம்பெருமானே நாம் அனுதினமும் வணங்கும், நம்மை உய்விக்கும் ஸ்ரீமன் நாராயணன்.

Pavithrotsavam is an annual ritual - the word itself is a derivative from the combination of two words - 'Pavithram (holy) and Uthsavam (Festivity).    This Uthsavam is penitential as also propitiatory  ~ for sure, there is nothing good or bad for the Ultimate Benefactor, the Lord who gracefully blesses in all our endeavours.  It is our own attempt to get rid of the evils that might have been caused by the omissions and commissions in the performance of various rituals throughout the year.  

Sriman Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and cannot in any manner be having anything in short. The festivals are only intended to be error correction [dosha nirvana] of the rituals that we, the humans conduct and fail in some manner.  Lord only accepts them with Divine Grace, blessing us all the time beyond what we deserve.  For a Srivaishnavaite, nothing needs to be done by self as Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide us to do kainkaryam to Him.  



During this Thiru Pavithrothsavam, yaga salai is constructed and vedic chants made by Thirukovil Battars; alongside homam – there would be arulicheyal as also veda parayanam by Adyapaka goshti.  In the sacred maha Yagnam - aswaththa samith, cow ghee, bilvapatrams - vilva ilai, lotus are used.     Let us all have darshan of Sri Parthasarathi, Thirupavithorthsava yagnam and have the Divine Blessings. 


திருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி படித்தது " எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப்படுகிறது. திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திரலோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. " (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ) 

முடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்த எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம் அளவிட முடியாதது.  ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும்  தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவ எம்பெருமான் பரிபூர்ணன்.  சௌலப்யம், சௌசீல்யம், ஆர்ஜவம், வாத்சல்யம், சுவாமித்வம் என எல்லா கல்யாண குணங்களையும்  தன்னகத்தே கொண்டவன். எம்பெருமானுக்கு குறை என்பதே இல்லை.  எம்பெருமானின் திருவடிகளையே சரணாய் கொண்டு கைங்கர்யம் செய்யும் அவனடியார்கள் இது போன்ற உத்சவங்களை சிறப்புற நடத்தி, ஆனந்தம் கொள்கிறோம்.  

திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம் முதல் நாள் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :   

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன் – [ Srinivasan Sampathkumar]
8.9.2019.








Monday, September 2, 2019

Avani Hastham Sri Varadharajar purappadu @ thiruvallikkeni 2019


Today 2nd Sept 2019 is Vinayaka Chathurthi ~ today is Hastham Thirunakshathiram in the month of Avani.  Hastham is the nakshathiram of our reverrred scholar Swami Kurathazhwan.  Hastham is the thirunakshathiram of Sri Varadharajar.



At Kanchipuram,  the  48-day Athi Varadar festival took the World by storm – with lakhs of devotees joining the queue every day to have a glimpse of the great Lord.   Now Thirukachi is back to normal and today there would have been celebrations for Sri Devathi Rajar.  At Thiruvallikkeni, there was chinna mada veethi purappadu of Sri Varadha Rajar.

இன்றைய கோஷ்டியில் ஸ்ரீ பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி சேவிக்கப்பெற்றது. பேயாழ்வாரின் பக்தி சுரக்கும் வார்த்தைகளில் இங்கே ஒரு பாசுரம் :

மருந்தும் பொருளும் அமுதமும் தானே,*
திருந்திய செங்கண்மாலாங்கே, - பொருந்தியும்
நின்றுலகமுண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி.

For us, the lotus(red) eyed Sriman Narayana Himself is the medicine; its innate healing power; the Sweet Nectar – the power of wellbeing as well.  He is one who made the Universe, swallowed, remade,  and went on to measure it, by seeking a gift of three feet of land …..  and to Him we offer obeisance.

Some photos taken during today’s purappadu are here.. ..


~adiyen Srinivasa dhasan.
2nd Sept 2019.










Sunday, September 1, 2019

Celebrating birth of Sri Krishna ~ Sri Kannan Kalinga Narthana purappadu 2019



Sri Kannan Kalinga Narthana purappadu 2019
(கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*)  


On  24th Aug 2019,   birth of Lord Krishna was grandly celebrated as ‘Sri Jayanthi’ -functions were on at Thiruvallikkeni divyadesam, at many other divyadesangal; at every home -  in the manner of Lord Krishna being born at every home – devotees were elated.  The next morning 4.9.18  there was the purappadu of Sri Krishna.  At Thiruvallikkeni, the presiding deity is Sri Parthasarathi ~ Lord Krishna Himself, as He volunteered to drive the chariot of Arjuna and offer to the World, the great Bhagwad Gita. 

24.8.2019  அன்று 'ஸ்ரீ ஜெயந்தி'  சிறப்புற கொண்டாடப்பட்டது.   இன்றைய கால கட்டத்தில், 'ஜெயந்தி' என்பது 'பிறந்த தினத்தை'  குறிப்பது என்பது போல - பல'ஜெயந்திகள்' மக்களால் கொண்டாடப்படுகின்றன !  ஆனால் 'ஸ்ரீஜெயந்தி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினத்தை மட்டுமே குறிக்க வல்லது. 

பெரியாழ்வார் கண்ணன் பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடி மகிழ்கிறார். ஓரிடத்தில் "செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்" என -  செந்நெல்லரிசியும், சிறு பயற்றம்பருப்பும்; காய்ச்சித்திரட்டி நன்றாகச் செய்த அக்காரம் என்கிற கருப்புக்கட்டியும்; மணம் மிக்க நெய்யும்;  பால் ஆகிய இவற்றாலேயும் ("கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை") எனவும் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து என்பதாகவும் சிறந்த சிற்றுண்டிகளை பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்.  தவிர பெருமாளுக்கு சிறந்த பழங்கள் பல சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுள் நாவற்பழமும் சிறப்பிடம் பெறுகிறது. 


~celebrating birth of Sri Krishna at home
pic - @ home of Prof Madusudhan Kalaichelvan.

"ஜெயந்தி" என்பது ஒரு முகூர்த்தம். அஷ்டமியும் நவமியும் சேரும்; ரோஹிணி நக்ஷத்திரத்தில்  [மிருகசீர்ஷம் வரும் சமயம்] உள்ள ஒரு சிறப்பான 'ஜெயந்தி' என்கிற முஹூர்த்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வடமதுரையில் அவதரித்தார்.  கண்ணன் பிறந்த நாள் என்பதால் அதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 'ஸ்ரீஜெயந்தி' ஆனது. எனவே எப்படி 'ஸ்ரீராமநவமி'  என்பது ஸ்ரீராமர் அவதரித்த நந்நாள் என கொண்டாடுகிறோமோ அதே போல ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள் 'கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீஜெயந்தி'.  மற்றைய பிறந்த நாள்களை 'ஜெயந்தி' என கொண்டாடுதல் தகா!!    [முனைவர் ம அ வேங்கட கிருஷ்ணன் சுவாமி சொல்லக் கேட்டது]


In the morning of  25th Aug 2019  – the day after His birth, occurs purappadu of beautiful Bala Krishnan in Sesha vahanam. This  birthday purappadu enters Nagoji rao street and Yadava chathiram – traditional places where those who tendered to cows live, much to the happiness of Sree Krishna.



ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான். பெரியாழ்வார்  கண்ணனிடத்திலே அளவு கடந்த பிரேமையாலே வடமதுரையிலே பிறந்த கண்ணபிரானை திருக்கோட்டியூரிலே பிறந்ததாக கொண்டாடுகிறார். 
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே.

திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தவளவில் அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக ஆக்கிவிட்டன ~ என கண்ணனது பிறந்த நேர கொண்டாட்டங்களை பாடுகிறார் நம் பட்டர்பிரான். [திராவிட வேதா எனும் அற்புத இணையத்தில் இருந்து - சுவாமி அண்ணங்கராச்சாரியார் உரை.]
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று காலை (25.8.2019) ஸ்ரீகிருஷ்ணர் சேஷ வாஹனத்தில் புறப்பாடு  கண்டு அருளினார்.  தள்ளித்தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலாவிநோதங்களை நினைவுகூறும் விதமாக காளிங்க நர்த்தனம் புரியும் அழகான குட்டிகண்ணன் சேஷவாஹனத்தில் பக்தர்களுக்கு அருள்செய்தார்.  பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து,  வாழ்ந்து, நாம் அறிவுபெற நல்லமுதமாம் 'ஸ்ரீபகவத்கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளைபற்றியவருக்கு, நிர்ஹேதுக  க்ருபை  உடையவனான எம்பெருமான் எல்லாநலன்களையும் தானேஅளித்து,  நம்மை பாதுகாப்பார். 

"வடமதுரைப் பிறந்த தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே."  : வடமதுரையிலே அவதவதரித்த,   மாலையணிந்த, தோள்களையுடைய கண்ணனைத் தவிர நமக்கு வேறொரு  புகலில்லை. அவன்தாள்களே சரணம்.

Here are some photos taken during this purappadu.

எம்பெருமான் திருவடிகளேசரணம்; ஜீயர் திருவடிகளே சரணம்; 
ஆச்சார்யன் திருவடிகளேசரணம் !!!

~ adiyen Srinivasadhasan