To search this blog

Sunday, September 1, 2019

Celebrating birth of Sri Krishna ~ Sri Kannan Kalinga Narthana purappadu 2019



Sri Kannan Kalinga Narthana purappadu 2019
(கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*)  


On  24th Aug 2019,   birth of Lord Krishna was grandly celebrated as ‘Sri Jayanthi’ -functions were on at Thiruvallikkeni divyadesam, at many other divyadesangal; at every home -  in the manner of Lord Krishna being born at every home – devotees were elated.  The next morning 4.9.18  there was the purappadu of Sri Krishna.  At Thiruvallikkeni, the presiding deity is Sri Parthasarathi ~ Lord Krishna Himself, as He volunteered to drive the chariot of Arjuna and offer to the World, the great Bhagwad Gita. 

24.8.2019  அன்று 'ஸ்ரீ ஜெயந்தி'  சிறப்புற கொண்டாடப்பட்டது.   இன்றைய கால கட்டத்தில், 'ஜெயந்தி' என்பது 'பிறந்த தினத்தை'  குறிப்பது என்பது போல - பல'ஜெயந்திகள்' மக்களால் கொண்டாடப்படுகின்றன !  ஆனால் 'ஸ்ரீஜெயந்தி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினத்தை மட்டுமே குறிக்க வல்லது. 

பெரியாழ்வார் கண்ணன் பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடி மகிழ்கிறார். ஓரிடத்தில் "செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்" என -  செந்நெல்லரிசியும்சிறு பயற்றம்பருப்பும்காய்ச்சித்திரட்டி நன்றாகச் செய்த அக்காரம் என்கிற கருப்புக்கட்டியும்மணம் மிக்க நெய்யும்;  பால் ஆகிய இவற்றாலேயும் ("கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை"எனவும் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து என்பதாகவும் சிறந்த சிற்றுண்டிகளை பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்.  தவிர பெருமாளுக்கு சிறந்த பழங்கள் பல சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுள் நாவற்பழமும் சிறப்பிடம் பெறுகிறது. 


~celebrating birth of Sri Krishna at home
pic - @ home of Prof Madusudhan Kalaichelvan.

"ஜெயந்தி" என்பது ஒரு முகூர்த்தம். அஷ்டமியும் நவமியும் சேரும்ரோஹிணி நக்ஷத்திரத்தில்  [மிருகசீர்ஷம் வரும் சமயம்] உள்ள ஒரு சிறப்பான 'ஜெயந்திஎன்கிற முஹூர்த்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வடமதுரையில் அவதரித்தார்.  கண்ணன் பிறந்த நாள் என்பதால் அதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 'ஸ்ரீஜெயந்தி' ஆனது. எனவே எப்படி 'ஸ்ரீராமநவமிஎன்பது ஸ்ரீராமர் அவதரித்த நந்நாள் என கொண்டாடுகிறோமோ அதே போல ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள் 'கோகுலாஷ்டமிஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீஜெயந்தி'.  மற்றைய பிறந்த நாள்களை 'ஜெயந்திஎன கொண்டாடுதல் தகா!!    [முனைவர் ம அ வேங்கட கிருஷ்ணன் சுவாமி சொல்லக் கேட்டது]


In the morning of  25th Aug 2019  – the day after His birth, occurs purappadu of beautiful Bala Krishnan in Sesha vahanam. This  birthday purappadu enters Nagoji rao street and Yadava chathiram – traditional places where those who tendered to cows live, much to the happiness of Sree Krishna.



ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான். பெரியாழ்வார்  கண்ணனிடத்திலே அளவு கடந்த பிரேமையாலே வடமதுரையிலே பிறந்த கண்ணபிரானை திருக்கோட்டியூரிலே பிறந்ததாக கொண்டாடுகிறார். 
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே.

திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தவளவில் அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்துஎண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக ஆக்கிவிட்டன என கண்ணனது பிறந்த நேர கொண்டாட்டங்களை பாடுகிறார் நம் பட்டர்பிரான். [திராவிட வேதா எனும் அற்புத இணையத்தில் இருந்து - சுவாமி அண்ணங்கராச்சாரியார் உரை.]
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று காலை (25.8.2019) ஸ்ரீகிருஷ்ணர் சேஷ வாஹனத்தில் புறப்பாடு  கண்டு அருளினார்.  தள்ளித்தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலாவிநோதங்களை நினைவுகூறும் விதமாக காளிங்க நர்த்தனம் புரியும் அழகான குட்டிகண்ணன் சேஷவாஹனத்தில் பக்தர்களுக்கு அருள்செய்தார்.  பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து,  வாழ்ந்துநாம் அறிவுபெற நல்லமுதமாம் 'ஸ்ரீபகவத்கீதையைஅருளிய கண்ணபிரானின் திருவடிகளைபற்றியவருக்குநிர்ஹேதுக  க்ருபை  உடையவனான எம்பெருமான் எல்லாநலன்களையும் தானேஅளித்து,  நம்மை பாதுகாப்பார். 

"வடமதுரைப் பிறந்த தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே."  : வடமதுரையிலே அவதவதரித்த,   மாலையணிந்ததோள்களையுடைய கண்ணனைத் தவிர நமக்கு வேறொரு  புகலில்லை. அவன்தாள்களே சரணம்.

Here are some photos taken during this purappadu.

எம்பெருமான் திருவடிகளேசரணம்ஜீயர் திருவடிகளே சரணம்
ஆச்சார்யன் திருவடிகளேசரணம் !!!

~ adiyen Srinivasadhasan














No comments:

Post a Comment