To search this blog

Monday, April 20, 2026

Iramanusa muni Vezham ......... elephants of Triplicane

 

இராமானுஜ முனி வேழம், வெள்ளி யானை வாஹனமும் 

வரவேற்கும்  கீதாச்சார்யன் இல்ல யானை வரைபடமும்.

 


பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் –

விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம்

திருவரங்கத்து அமுதனார் தம் இராமாநுச நூற்றந்தாதி பாசுரம். 

நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்னும் செந்தமிழ் மகிழ்ச்சி, மதநீராகப் பெருக,  எம்பெருமானார் (இராமானுசர்) எனும் ஞான மத்தகஜம், சத்தியமான வேதமாகிய பெரிய தடியைத் தாங்கி  இப்புவியில் வந்து, மற்ற சமயவாதிகளை வென்றது.  நம் ஸ்ரீவைஷ்ணவ  சம்பிரதாயத்தில், இராமானுஜரை "மதயானை" (அஞ்ஞானத்தை அழிக்கும்) எனக் கூறிப் போற்றுவது இந்த பாசுரத்தின் சிறப்பு. 

 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.

அக்ஷய திரிதியை நன்னாள் - உடையவர் உத்சவம் 8 - 20.4.2026

No comments:

Post a Comment