*கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்*
கறவை, என்ற பெயர்ச்சொல்லுக்கு
: பால் கறக்கை; பால் கறக்கும் நிலையில் உள்ள பசு (lactating cow) என பொருள்.
எல்லா இடர்களிடமிருந்தும்
நம்மை என்றென்றும் காப்பாற்ற வல்லன் நம் எம்பெருமான்
ஸ்ரீமன் நாரணன் ஒருவனே. எண்ணற்ற லீலைகளை
நிகழ்த்தும் எம்பெருமானுக்கு எண்ணற்ற திருநாமங்கள் உள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் தெய்வீகமானவை,
இவற்றை உச்சரிப்பதால் அடையும் பலன்களும் தெய்வீகமானவை. அளப்பரிய திருமலை வேங்கடவனை
நாம் சென்று சேவித்து நம் பாவங்களை தொலைப்போம். திருமலை - ஒன்றுமே தொழ நம் வினை
ஓயுமே !! .. ..
திருப்பதி திருமலை
என்றாலே "கோவிந்தா, கோவிந்தா,
கோவிந்தா” கோஷமும் நினைவுக்கு
வரும். வைணவத் தலங்கள் எங்கு சென்றாலும் அங்கு "கோவிந்தா' என கேட்கும் முழக்கம்
நமக்கு அளவில்லா ஆனந்தத்தைத் தருகின்றது.
Milch !
Werner Milch was a German lawyer, born in Wilhelmshaven,
a Jewish pharmacist who served in the Imperial German Navy, and
Clara, née Vetter. During World War II, he served in the Wehrmacht and was a
recipient of the Knight's Cross of the Iron Cross of Nazi Germany.
Milch is the German word for milk, and an old English word for a milk-producing
cow.
The concept of milking in Western World is different – No sentiments, no attachments – Cows are more like
factory machines not something to life ! Dairy cattle are bred for the ability to
produce large quantities of milk, from which milk and dairy products are made.
Dairy cattle generally are of the species Bos taurus. Dairy cows are
required to give birth to one calf annually in order to produce milk for 10
months of the year. They are usually artificially inseminated within three
months of giving birth. Dairy cows can often only produce very high milk
yields for an average of 3 years, after which they are slaughtered and the meat
is normally used for beef. Cattle are
great source of wealth not only in advanced economies – elsewhere too.
Cattle are creatures
of the Anthropocene. Cattle were of great importance for the Neolithic farmers
of southeastern Europe, in particular as farming expanded towards the well-watered
regions of Džuljunica (ca. 6200–5500 cal. BCE), one of the earliest known
Neolithic settlements in northeastern Bulgaria.
Elsewhere African
countries have problems plenty ! Somalia
is classified by the United Nations as a least developed country, with the
majority of its population being dependent on agriculture and livestock for
their livelihood. The livestock sector
is central to the economic and cultural life of the Somali people. The sector
provides food and income to over 60 percent of the country’s population. Burao
and Galkayo are the largest livestock markets in the Horn of Africa especially
for export sheep and goats from the Somali region of Ethiopia and parts of
southern Somalia. The majority of the livestock exported through Berbera and
Bosasso seaports transit or pass through these markets.
நகரங்களில் சில வருடங்கள்
முன்னர் வைக்கோல் கன்றுக்குட்டி கண்டு இருப்பீர்கள் ! இறந்த கன்றின் தோல் மேலே, உள்ளே
வைக்கோல் அடைத்து, மாட்டுக்கு முன்னர் காட்டி அதை ஏமாற்றி பால் கறப்பார்கள்.
நூறாசிரியம், என்ற நூலில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் - மணந்து கொள்வதாகக்
கூறி தன் தலைவியிடத்துக் களவுப் புணர்ச்சி மேற்கொண்டொழுகும் தலைவன் காதுகளிற் படுமாறு
தோழி தலைவிக்குக் கூறியதாக சொல்லும் பாட்டில் :
ஆயுங் காலை நாண்மிக வுடைத்தே
ஈனாக் கன்றைக் காட்டுநர் கொள்ளும்
ஆமடிச் சிறுபயன் போல
நாமவற் கிளமை நலமழிப்பதுவே!
ஆய்ந்து பார்க்குமிடத்து
மிகுந்த நாணமாக விருக்கின்றது; தான் ஈனாத ஒரு செய்கன்றைக் காட்டி ஆவின் மடியினின்று
கொள்ளுகின்ற சிறிய அளவினதாகிய பாலைப் போல, நம்மை மணந்து கொள்ளாத அவனுக்கு நம் இளமை
நலத்தைத் தந்து நம்மை அழித்துக் கொள்வது. கறத்தல் என்பது கறவை விலங்கிடமிருந்து
அதன் பாலை கறத்தல். ஈன்றகன்று இறந்த விடத்து, வைக்கோல் முதலிய செய்பொருள்களைக்
கொண்டு கன்று போல் செய்வித்து அதனைக் காட்டி ஆமடி கறப்பர். மெய்க் கன்றையன்றிப் பொய்க்கன்றைக்
காட்டிக் கறத்தல் ஆவை ஏமாற்றிக் கறத்தல்! மெய்க்கன்றை யூட்டிக் கறக்கும் பாலினது
அளவினும் பொய்க் கன்றைக் காட்டிக்கறக்கும் பாலினது அளவு குறைவுபடும் ஆகையால் அதனைச்
சிறுபயன் என்பர். நாம் வேண்டுவது பெரும்பயன்
- அதனை அருள வல்லோன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே !
ஹிந்து தர்மம் ~
வேத இதிஹாச புராணங்களினாலே கட்டமைக்கப்பட்ட அநாதியான மதம். நாம் மென்மையானவர்கள்,
ஆண்டவனிடத்திலே ஈடுபடுத்திக் கொண்டவர்கள். நமக்கு கைங்கர்யமே பிரதானம். எம்பெருமானிடத்திலே
அடிமை செய்து இருத்தல் ~ அதையும் ஒரு தர்மமாக, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்தல்
- நமக்கு அமைந்தது. நமது ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள்.
ஸ்ரீமந்நாராயனை கண்டவுடன் அவனுக்கு ஒருகுறையும், எவ்வித கண் த்ருஷ்டியும் படலாகாதே
என திருப்பல்லாண்டு பாடியவர் நம் பெரியாழ்வார். அவருக்கு மகளாய் பூமி பிராட்டியாய்
அவதரித்து, மிக எளிய பாடல்கள் மூலம் நமக்கு பக்தி இலக்கியத்தை, தீந்தமிழில் நாம் அனுதினமும்
அனுசந்திக்கப்பண்ணியவர் நம் கோதைப்பிராட்டி.
கோவிந்தன் என்றால் உலகையெல்லாம் உலகில் உள்ள ஜீவராசிகளையெல்லாம் காக்கும் கடவுள்
என்று பொருள். கோவிந்தன் என்றால் பசுக்கள் பின்னே செல்பவன். கலியுகத்தில் கண்கண்ட
தெய்வம் திருவேங்கடமுடையான். திருமலை திருப்பதியில் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கங்களை
கேட்டு இன்புறுகிறான். "கோ" என்ற சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு.
: அவற்றுள் சில : அந்தரம், குலிசம், பார், அத்திரம், நீர், திசை, மலை,
வேல், மன்னவன், விழி, பசு.
கோ என்றால் பூமி எனக்கொண்டால்,
படைப்பின் தொடக்கத்தில் சென்ற இடமறியாதபடி கடலில் ஆழ்ந்து மறைந்துவிட்ட பூமியை வராஹமாக
சென்று தேடிப் பெற்றவர். கோ என்றால் பசு, ஆவினம் எனக்கொண்டால் பசுக்களுக்குத்
தலைவர்; முல்லை நிலத்தவர் - ஆயர்; ஆநிரை மேய்த்தோன்; கோ என்றால் புலன்கள் என
கொண்டால், . புலன்களை அடக்கி ஆள்பவன் கோவிந்தன். இங்கே இந்திரியம் பசு. கோவிந்தன்
- வேதமோதுவதால் அடையக்கூடியவர்; மந்திரங்களால் உணரத்தக்கவர்; உபநிடத வாக்கியங்களால்
அறியப்படுபவர், அல்லது அடையப்படுபவர். பக்தியுடன் பெயரிட்டுக் கூப்பிடுதலால் அடையக்கூடியவர்;
கூப்பிடுதூரத்தில் இருப்பவர். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடோடி வருபவர்.
பக்தி இலக்கியத்தில்
அதி உன்னதமான திருப்பாவையில் அவர் ஸ்ரீமன் நாராயணனை விளிப்பது '**குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!**'
~ அக்கண்ணனிடத்திலே விழைந்தது எப்பேர்ப்பட்ட உறவு ? என்றென்றும் பிரிவில்லாத,
எக்காரணத்தை கொண்டும் விலகாத ஆத்ம உறவு. ஏதோ கோவத்தில் விலக்கும் சாதாரணமான
பந்தம் அல்ல. எம்பெருமானிடத்திலே மையல் கொண்டு, அவனிடம் கலந்த பின், அவ்வுறவு
என்றென்றும் அழிக்கவே இயலாதது. 'உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது'
~ எம்பெருமான் கூட அவ்வுறவை மாற்றவல்லனல்லன்.
இதுவல்லவோ உன்னத உயர்ந்த பக்தி நிலை.
Lord Sri
Krishna took the avathar with birth among those who graze cattle in dense
forests, grew among cowherd folks – when we dedicate ourselves to our mighty
Lord, the bond with the faultless Govindha
is irrevocable – eternal and ever lasting – a bond, even God cannot
separate. Thiruppavai and Nachiyar thirumozhi glitter with simple yet
most powerful words that lift us and make us surrender to the eternal Sriman
Naryaana.
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம் *
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் *
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம் *
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
*
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது *
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை*
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே*
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
எம்பெருமான்
மாசற்றவன். குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் * காடுகளிலே கறவையினங்கள் மேய்த்த ஆயரிடையே வந்து உதித்த
நம் கோவிந்தனை நமக்கு அருளுபவனாய் பெற்றது நமது பெரும் பாக்கியம். ஸ்வாமியான
கண்ணபிரானோடு எங்களுக்குண்டான உறவானது, யாராலும், (உன்னாலும் எம்மாலும்) ஒழிக்க
ஒழியமாட்டாது. ஞானமும் மார்க்கமும் அறியாத சாதாரணர்களான நாங்கள் மிகுந்த
அனுப்பினால் பல்வேறு நாமங்களால் அழைத்ததைக் குறித்தும், ஆச்ரிதவத்ஸலனான நீ கோபித்தருளாமல்,
எல்லா அருள்களையும் தந்து, எங்களை காத்து அருள வேண்டும்.
Today
~ 12..01.2025 (Sun) is 28th day of the Tamil
month of Margazhi and day 8 of Andal Neeratta Uthsavam. Here are some
photos of Thiruvallikkeni Sri Andal
**ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் **
**ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் **
~ அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
(மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
12.1.2025
No comments:
Post a Comment