To search this blog

Tuesday, January 7, 2025

Sri Andal Neeratta Uthsavam 3 2025 - மாரி மலை முழைஞ்சில் - சீரிய சிங்கம்

1993 தீபாவளி அன்று - பிரபு, ரம்பா, பானுபிரியா நடித்த உழவன் என்றொரு படம் வெளிவந்தது. !!!

 

மாரி,  என்ற பெயர்ச்சொல்லுக்கு :  மழை; பூராடம்; கள்; புள்வகை; மரணம்; பெரியம்மை என்று பல பொருட்கள் இருந்தாலும் - இன்றைய பதிவில் மாரி என்றால் மழை !!! மாரிகாலம் அல்லது மழைக்காலம் என்பது ஒரு பருவ காலம் -  குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு நாடு, ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி மழைவீழ்ச்சியை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது.

 


பக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக்கொண்டது.  ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அபரிமிதமான காதல், மிக அழகான சொல்லாடல், எளிய நடை, ஒரே தடவை படித்தவுடன் புரியக்கூடிய அர்த்தம் எனினும் பல்லாயிரக்கணக்கான வியாக்கியானங்கள்  ~  எல்லாம் கோதைப்பிராட்டியின் திருப்பாவைக்கே உரியன.  ஆண்டாள் நீராட்ட உத்சவத்தில் மூன்றாம் நாள் இன்று - 7.1.2025 .. இன்றைய நாள் பாசுரம் ~  திருப்பாவையில் 'மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்து  உறங்கும்' !!

 

Rains  -  the northeast monsoon has come to an end, after recording 33 per cent excess rain with 590 mm of rainfall from October to December. The withdrawal of the monsoon is likely to be announced after January 15, said weather officials. With 1,179 mm of rainfall in 2024, Tamil Nadu  recorded excess spells throughout the year, with no district recording deficit rainfall, unlike the previous years. Tirunelveli topped the list with 100 per cent increase. Chennai, too, had a beneficial year, continuing the run for the fifth consecutive year. 

"The easterly wind was more active in the State in 2024, which was one of the reasons for the above-average rainfall. Four  cyclones were formed compared to six during the monsoon seasons in the previous year, State  received excess rainfall under the influence of low-pressure areas and depressions prevailed over the sea. During the northeast and southwest monsoons, Tamil Nadu recorded 33 per cent and 18 per cent excess rainfall, respectively, whereas the overall rainfall has increased by 28 per cent," said, Deputy Director-General of Meteorology, Regional Meteorological Centre (RMC), Chennai.    

2024 was another year of record-breaking temperatures, driving the global water cycle to new climate extremes and contributing to ferocious floods and crippling droughts, a new report led by The Australian National University (ANU) shows.  The Atlantic hurricane season started early, external, and with a record-breaking bang. At the end of June, Beryl became the first major hurricane of the 2024 season. It swept through the Caribbean before making landfall on the Gulf coast of the US. It was the earliest Category 5 hurricane to form in recorded history.  

In early May, days of heavy rain brought severe flooding and mudslides to Rio Grande do Sul in southern Brazil leading to the collapse of a hydroelectric dam. Almost half the average annual rainfall for the area fell in just over a week. However, in other parts of Brazil the story was very different.  Earlier, in  April the United Arab Emirates also received almost a year's rainfall, this time in 24 hours. Roads were submerged in Dubai, at least one metro station was ankle-deep in water and flights from the international airport were grounded.

At the same time a deadly heatwave took hold across West Africa and the Sahel region of the continent, which scientists said would have been "impossible" without human-induced climate change. Namibia declared a state of emergency in May as the country grappled with its worst drought in a century. The Government planned to kill wild animals and distribute the meat to those people who had no food. It was one of several countries across southern Africa struggling with devastating drought driven by El Niño.  By contrast later in the year, seasonal rains across Africa were displaced much further north bringing flooding to the Sahara for the first time in half a century.  No rain /weather report this !  

இந்த வருஷம்   சென்னையில் நல்ல மழை பெய்ந்துள்ளது  - இப்படி மார்கழி மாதத்தில் மழை பெய்யுமா என்ற ஒரு ஐயம் நம் மனதிலே உள்ளது !! மழை காலம் ஒரு இனிய காலம். மரங்களிலும், செடிகளிலும் தளிர் இலைகள் முளைக்கும். வர்ஷா காலத்தில் எல்லாவிடங்களும் ஒரு நீர்க்கோப்பாகும்படி மழைபெய்து வழியெல்லாம் தூறாகி ஸஞ்சாரத்திற்கு அயோக்யமாயிருக்குமாதலால்  அரசர்களும் தத்தம் பகைவரிடத்துள்ள பகையையும் மறந்து, சேனைகளைத் திரட்டிக் கொண்டு போர்புரியப் புறப்படுவதைத் தவிர்ப்பாராம். இன்றைய 'work from home' போல,  இக்காலங்களில், மன்னர்களும் வீரர்களும் தந்தம் குடும்பத்தினருடன் ஆனந்தமாக பொழுதினை கழிப்பனராம்.      சிங்கங்களும் அக்காலத்தில் பர்வத குகைகளில்  கிடந்துறங்குமாம்.  அவை அப்படி உறங்கி பொழுது கழிக்கும் பொது  அவற்றின் குகை வாசலில் களிறுகள் வந்தடைந்து பிளிறினாலும் அவ்வொலி செவிப்படாதவாறாகவே அவை கிடந்துறங்கும்’ மாரிகாலங் கழிந்தவாறே அவை உறக்கத்தை விட்டெழுந்து, ‘நம் எல்லைக்குள் புகுந்தாரார்? எனச்சீறி நோக்குவதுபோற் கண்களில் நெருப்புப் பொறி பறக்கும்படி விழித்து நாற்புறமும் நோக்கி, உளைமயிர்கள் சிலம்பு மாறு சுற்றும் அசைந்து, உறங்கும்போது அவயவங்களை முடக்கிக்கொண்டு கிடந்தமை யாலுண்டான திமிர்ப்பு தீரும்படி அவயவங்களைத் முறுக்கேறி கிளம்பினாற்போலே நம் எம்பெருமான் வெளிப்பட்டதாக கோதை பிராட்டி தம் திருப்பாவை பாசுரத்திலே உரைக்கின்றார். 



Lions are the second-largest cats in the world, after tigers. Known as the "king of beasts" or "king of the jungle," these regal felines once roamed Africa, Asia and Europe, but now only live in parts of Africa and India.  Experts have long recognized two subspecies of lion, Panthera leo leo (the African lion) and Panthera leo persica (the Asiatic lion).  Lions have strong, compact bodies and powerful forelegs, teeth and jaws for pulling down and killing prey. Their coats are yellow-gold, and adult males have shaggy manes that range in color from blond to reddish-brown to black. The length and color of a lion's mane is likely determined by age, genetics and hormones. Young lions have light spotting on their coats that disappears as they grow. Without their coats, lion and tiger bodies are so similar that only experts can tell them apart.

சிங்கம் பிறக்கும்போதே “மருகேந்திரன்” என்றும் “ம்ருகராஜன்” என்றும் சிறப்புப் பெயரைப் பெறுதல் பற்றிச் சீரியசிங்கமெனப்பட்டது. கண்ணபிரானும் நரஸிம்ஹாவதாரத்திலே போற்றப்பட்டதாக  சிலபாகஞ் சிங்கமாயும் சிலபாகம் மானிடமாயுமிருக்கையன்றியே “சிற்றாயர் சிங்கம்” “யசோதையிளஞ்சிங்கம்” என்றபடி பூர்ண ஸிம்ஹமாயிருத்தலால், சீரிய எனும் அடைமொழி இவனுக்கு ஒக்குமென்க. (கச்சி சுவாமி ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் உரை) 





At Thiruvallikkeni it was day 3 of Andal Neeratta uthsavam – [by  sheer coincidence 7th Jan 2014 too  was day 3 of Sri Andal Neeratta uthsavam] and here are some photos of Andal taken this morning.

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய

சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய் ! 

மழைகாலத்தில் மலையிலுள்ள குகைகளில் தனது பேடையுடன் உறங்கின  சீர்மையையுடைய சிங்கமானது, உணர்ந்தெழுந்து, நெருப்புப்பொறி பறக்கும்படி கண்களை விழித்து, தனது பிடரி சிலிர்த்து, உடம்பை உதறி - ஏனைய மிருகங்கள் நடுங்க, நாற்புறங்களிலும் புடைபெயர்ந்து  தனது சரீரத்தை  உதறி, சோம்பல் முறித்து, கர்ஜனை பண்ணி வெளிப்புறப்பட்டு வருவது போல, பூவை பூ வண்ணனான எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்  தனிஉடைய திருக்கோயிலினின்றும் எழுந்தருளி இவ்விடத்திலே  எழுந்தருளி கோப்பு உடைய அழகிய ஸந்நிவேசத்தையுடைய  சீரிய லோகோத்தரமான சிங்காசனத்து எழுந்தருளியிருந்து  நாங்கள் மநோரதித்துக் கொண்டு வந்த காரியத்தை ஆராய்ந்து கிருபை செய்ய வேணும்’ என கோதை பிராட்டி எம்பெருமானிடத்திலே  பிரார்த்திக்கின்றார்.

பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் படித்த உழவன் படத்தில் இருந்து ஒரு பாடல் இங்கே :

மாரி மழை பெய்யாதோ ! மக்க பஞ்சம் தீர

சார மழை பெய்யாதோ !! சனங்க பஞ்சம் மாற

மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்  !  மானங் கருக்கலியே

குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்  !  சோலை தான் இங்கில்லையே

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
7.1.2025
 Pranams to Sri Kachi Swami PB Annangarachar and dravidaveda.org.







No comments:

Post a Comment