For Sri Vaishnavaites,
‘Acharyas’ occupy the most pre-eminent position ~ and in our Samprathayam it is
‘Swami Manavala Maamunigal’ known by various titles as ‘Sowmya Jamathru
Yogi’ ; ‘Varavara Muni’; Visada-Vak-Sikhamani; Yathindrapravanar, Varayogi,
and more is Most Reverred. Swami Maamunigal considered to to be last of
the Poorvacharyas, the early religious preceptors of Srivaishnavism, occupied
the pontific seat at Srirangam after Sri Ramanuja. Varavaramuni is the
reincarnation of Sri Ramanuja who was himself an incarnation of Adisesha. AchArya's mercy is the
ultimate benediction for our upliftment. ..
सुधानिधिम् इव स्वैर
स्वीक्रुतो दग्र विग्रहम् ।
प्रसन्नार्क प्रतीकाश
प्रकाश परिवेष्टितम् ॥
ஸுதாநிதிமிவஸ்வைர ஸ்வீக்ருதோ
தக்ர விக்ரஹம்|
ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் ||
தமது இஷ்டப்படி தாம் ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,
திருப்பாற்கடல் போன்று வெண்மை நிறமுடையவராய் இருப்பவரும், மிக்க ஒளி படைத்தவர்
ஆயினும், கண்கூசாமல் காணும்படியாகத் தெளிந்தும் குளிர்ந்துமிருக்கும் கதிரவன்
என சொல்லக்கூடிய திவ்யமான காந்தியினால் சூழப்பட்டவருமாகிய எங்கள் ஆசார்யன் ஸ்வாமி
மணவாள மாமுனிகள் திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே சேவை சாதிக்கும் அழகு. …
ஆசார்யன் மணவாள மாமுனிகள் சிறப்பு - பூர்வ திநசர்யை
- ஸ்வாமி எறும்பியப்பா.
This year during our
Acharyan Uthsavam it did not so heavily
– though Karthigai is a month of monsoon and there were many predictions of
heavy rainfall.
நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல்
தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்
நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை. .
Sri Manavala Mamunigal, is
the most reverred matchless Acharyar of our Srivaishnavaite philosophy,
practised by Thennacharya Srivaishnavas
நமது பைந்தமிழ் ஒரு அற்புத மொழி. ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. கிழக்குத் திசையில் உதிக்கின்ற சூரியன்
மேற்குத் திசையில் மறைகிறது, இந்த மறைதல் நேரத்தை,பொன் மாலை என கவிஞர்கள் சிலாகிப்பர். ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பல
பாவகைகள் கொண்டு பாடுவதை மாலை என்ற சிற்றிலக்கியம் என்கிறார்கள். உழிஞை மாலை என்பது சிற்றிலக்கியங்களில் ஒன்று. மாற்றரசன் மதிலை
முற்றுகையிடல் உழிஞை. ஆற்றின் குறுக்கே கற்களைப் போட்டுக் கலிங்கு செய்து தடுப்பது போலக்
கோட்டைக்குள் இருக்கும் மக்களைத் தடுத்தலால் இதனை இச்சொல்லால் குறிப்பிடலாயினர்
என்கிறது தமிழ் விக்கிபீடியா.
கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும். மலர்கள்
சில நறுமணம் கமழ்பவை. திருமங்கை மன்னன் : - *
பைந்துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் * எனுமிடத்தில்
'மாலை' என்பது சர்வேஸ்வரனான எம்பெருமானையே குறிக்கிறது. கலியன் அருளிச்
செய்தது போல : அருமையான அமிருதம் போன்றவனும், பசுமைதங்கிய திருத்துழாயை உடையவனுமான,
இவ்வுலகோர்களாலே தியானிக்கப்படுபவனுமான மாலை (ஸர்வேச்வரனை) திருவாலி மற்றும்
அணைத்து திவ்யதேசங்களில் சென்று சேவித்து உய்வோமாக*.
Monday 4.11.2024
அன்று திருவல்லிக்கேணியில் பொய்யிலாத மணவாள மாமுனிகள் மாலை நேரத்தில்
அழகான நறுமணம் தரும் மலர்களாலான புஷ்ப பல்லக்கில் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டு அருளினார்.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
No comments:
Post a Comment