To search this blog

Saturday, November 9, 2024

கடன்மல்லை பூதத்தார் பொன்னங்கழல் - Sri Boothathazhwar Sarrumurai 2024 : Periplus !?!?

 

கடன்மல்லை பூதத்தார் பொன்னங்கழல்  - Sri Boothathazhwar Sarrumurai 2024

மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் 'ஆஷோன்... ஆஷோன்...' என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக் கொள்ள... சென்னை-103-ஐச் சேர்ந்த 'அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப் பள்ளி'யின் ஆசிரியைகள் டீசல் வேனிலிருந்து ஆரவாரத்துடன் உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்தை விளக்கும் வகையில், ''இங்கதாண்டி 'சிலை எடுத்தான் ஒரு சினைப் பெண்ணுக்கு' ஷூட்டிங் எடுத்தாங்க...'' என்று வியக்க, கற்சிற்பிகளின் உளி சத்தம் எதிரொலிக்க, பிள்ளையர்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்டுகளுக்குக் காத்திருந்தார்கள். 'கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?'

இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன், கரைக்கோயிலின் அருகில் வந்து கடற்கரைப்பக்கம் சென்றான். ஆயிரத்து இருநூறு வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான். ''காமிரா வேணுங்களா... நிக்கான், ஜப்பான்... அப்புறம் ரேபான் கண்ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?" அவன் மௌனமாக இருக்க,  .. .. …  what could be the link to today and its significance to Srivaishnavas.




International tourists flock here - though it is often mentioned as ‘Mahabalipuram’ the connection is more with the Pallavas as the name Mamallapuram is derived  from Mamallan, or “great warrior”, a title by which the Pallava King Narasimhavarman I (630-668 AD) was known. It was during his reign that Hiuen Tsang, the Chinese Buddhist monk-traveller, visited the Pallava capital at Kanchipuram.  

பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவர்கள் - எம்பெருமானின் புகழ் பாடி அவரை அடைவதை தவிர வேறொன்றும் நினையாதவர்கள்  - ஆழ்வார்கள்.  ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே ஒரே உயர்ந்த  தெய்வம் என்று  எம்பெருமானிடத்திலே அடிமை செய்து இருந்தவர்கள், மயர்வற மதிநலம் அருள்பெற்ற ஆழ்வார்கள்.  இவர்களில் பொய்கை, பூதம், பேய் எனும் மூவர் முதல் ஆழ்வார்கள் என போற்றப்படுவர்கள்.  இவர்கள் சம காலத்தவர் ~ மூவரும் மதிட்கோவல்  இடைகழி என திருக்கோவலூரிலே ஒரு மழை காலத்திலே இருந்து, எம்பெருமானது பரம போக்கியதாலே அவனை போற்றி மூன்று திருவந்தாதிகளை நமக்கு அளித்தனர்.  

 


 ~  have you had darshan at Thirukkadanmallai (most probably you have  visited this place as a tourist); in case, you had darshan, have you travelled to this place with the prime purpose of worshipping Emperuman at this divyadesam  and the Azhwar who was born at this sthalam  ?? Sri Sthalasayana Perumal Thirukovil is at Thirukkadanmallai ~ in case the name does not ring a bell – it is the  more famous  Mahabalipuram (simply Mamallapuram) known for its great architecture.   It is at this divyadesam our Boothathazhwar was born.  Thiru avathara uthsavam of Bootath Alwar gets celebrated in the month of Aippasi (Oct-Nov) on Avittam nakshathiram day.  The temple is one of the 32 Group of Monuments at Mahabalipuram that are declared as UN world heritage sites, but unlike others that are maintained by the Archaeological Survey of India, the temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.

நாம் எதற்கெல்லாம் பெருமை கொள்வோம் ??  ~  பட்டியல் நீளலாம்.. ..  .. தம்மைப் போல் தவம் செய்தவர் யாரும் இல்லையென்று பெருமை கொண்டவர் நம் நாயகன் .. .. பெருமானின் இணையடிகளுக்குப் பெருமை வாய்ந்த தமிழால் தொடுத்த மாலையை அணிவித்தமையால் தாம் பெருந்தமிழனான பெருமையினை உடையவன் - : "பெருந்தமிழன் நல்லேன் பெரிது" என்றும்  பெருமிதம் அடைந்தவர் இவர் .. ..  

முதலாழ்வார் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் நம் பூதத்தாழ்வார். இவரும் தொண்டை நாட்டில் பிறந்தவரே. கடல்மல்லை ஸ்தலத்தில்,  குருக்கத்திப் பந்தலில், ஒரு குருக்கத்தி மலரில் ஐப்பசித் திங்களில் அவிட்ட நக்ஷத்திரத்திலே,  எம்பெருமானின்  கதையின் திருவம்சமமாய்  அவதரித்தவர். அவரது திருவவதார சிறப்பு நாள் இன்று  !!  (9.11.2o24) 

 



வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள். எம்பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்   பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது.  அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமைசெய்யப்பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் நம் ஸம்ப்ரதாய பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை. 

ஆழ்வார் அவதாரஸ்தல மண்டபம் - திருக்கடன்மல்லை ஸ்தலசயனத்துறையவர் திருக்கோயிலுக்கு எதிரே உள்ளது.  சாற்றுமுறை அன்று பெருமாள் கைத்தல சேவை பிறகு, ஆழ்வார், அவதாரஸ்தல மண்டபத்துக்கும் - ஞானப்பிரான் சன்னதியான திருவலவெந்தைக்கும் எழுந்தருள்வது விசேஷம்.   

                          Let us fall at the feet of Sri Boothath Azhwar and reach Emperuman by singing His glories and more specifically his prabandham ‘Irandam thiruvanthathi’ part of Iyarpa.  Here are some photos of Boothath Alwar and Sri Parthasarathi Emperuman taken today at  Thiruvallikkeni.    

புகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668)   ஆட்சிக்கு வந்தான்.  இவரது ஆட்சி காலத்தில் பல்லவ இராச்சியம்  வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து காணப்பட்டது. இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. மாமல்லபுரத்து அற்புத சிற்பங்கள் இவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. 

இந்த பதிவின் ஆரம்ப வரிகள் :  ஆனந்த விகடனில் வந்த  -  மஹாபலி ( சிறுகதை) - நம் ஆசான் சுஜாதா எழுதியது.  அந்த இளைஞனுக்கும் ஒரு பேராசிரியருக்கு நடக்கும் சம்பாஷணை : 

"இவர்களுக்கா பல்லவச் சிற்பக்கலை பற்றிச் சொல்லப் போகிறீர்கள்?"  -  "ஏன்?"

"பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகத்திலும், ஹ்யுவான் சுவாங்கிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடத்துக்கு அசைவ உணவகத்தில் புரோட்டா தின்று, பிக்னிக் பெண்களைத் துரத்த வந்திருக்கும் இந்தத் தலைமுறை கலாசார மற்றது..."

"நீயும் இந்தத் தலைமுறைதானே?"-   -  "ஆம்... ஆனால், வேறு ஜாதி..."

அவர் அவனை நிமிர்ந்து பார்த்து, ''பெரிப்ளுஸ் பற்றி உனக்குத் தெரியுமா?"

"கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து இருக்கும் இந்தத் துறைமுகம் என்பதும், பல்லவக் கட்டடக்கலை பற்றியும் தெரியும்.."

 

That Sujatha reference made me search something and ended up with :  A periplus (lit. "a sailing-around") is a logbook recording sailing itineraries and commercial, political, and ethnological details about the ports visited. In an era before maps were in general use, it functioned as a combination of atlas and traveller's handbook.

 


The Erythraean Sea ("the Red Sea") was an ancient geographical designation that always included the Gulf of Aden between Arabia Felix and the Horn of Africa and was often extended (as in this periplus) to include the present-day Red Sea, Persian Gulf, and Indian Ocean as a single maritime area.  The Periplus of the Erythraean Sea  is a Greco-Roman periplus written in Koine Greek that describes navigation and trading opportunities from Roman Egyptian ports like Berenice Troglodytica along the coast of the Red Sea and others along the Horn of Africa, the Persian Gulf, Arabian Sea and the Indian Ocean, including the modern-day Sindh region of Pakistan and southwestern regions of India.   The lost port city of Muziris (near present day Kodungallur) in the Chera kingdom, as well as the Early Pandyan Kingdom are mentioned in the Periplus as major centres of trade, pepper and other spices, metal work and semiprecious stones, between Damirica and the Roman Empire. 

              According to the Periplus, numerous Greek seamen managed an intense trade with Muziris:  Then come Naura (Kannur) and Tyndis, the first markets of Damirica or Limyrike, and then Muziris and Nelcynda, which are now of leading importance. Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river (River Periyar), distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia.  The Periplus of the Erythraean Sea, 53–54

 
Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam !!  

~adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
9th Nov. 2024.











 

No comments:

Post a Comment