To search this blog

Thursday, November 28, 2024

Karthigai Krishna paksha Ekadasi purappadu 2024 ~ மானிடர்களுக்கு யார் அரண் ?

Karthigai Krishna paksha Ekadasi purappadu 2024 ~ மானிடர்களுக்கு யார் அரண் ?

 


இப்புவியில் பலப்பல கடினங்களை எதிர்கொள்கிறோம் ! .. பிரச்னைகள் நிறைந்த இவ்வுலகத்தில், மானிடர்களுக்கு யார் தான் அரண் ?  

Rachel Marron, an Academy Award-nominated actress and music superstar, is being sent death threats by a stalker. After a bomb explodes in her dressing room, her manager seeks out professional bodyguard Frank Farmer, a former Secret Service agent who served on the Jimmy Carter and Ronald Reagan presidential details, to protect her. Frank reluctantly accepts the offer;  he feels Rachel is a spoiled diva who is oblivious to the threats against her life. 

That was the storyline of ‘Bodyguard’ – American thriller of 1992  directed by Mick Jackson, written by Lawrence Kasdan, and starring Kevin Costner, Whitney Houston (in her movie acting debut) & others. The film follows a former United States Secret Service agent turned bodyguard who is hired to protect a famous actress and singer from an unknown stalker. Kasdan wrote the film in the mid-1970s, originally as a vehicle for Steve McQueen and Diana Ross. The Bodyguard was theatrically released by Warner Bros.   

Today –  27th Nov 2924  is Karthigai  Krishna paksha  Ekadasi.  Next Ekadasi on Dec 11, is Kaisika Ekadasi.   There has been continuous and hyped predictions on a cyclone hitting the coast.  Amidst overcast sky and cool breeze, at Thiruvallikkeni divyadesam there was grand periya veethi  purappadu of Sri Parthasarathi Emperuman ..

 

இன்று கார்த்திகை மாச ஏகாதசி.  திருவல்லிக்கேணியிலே ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் பெரியவீதி புறப்பாடு கண்டருளினார்.  இன்று எம்பெருமான் மிக சிறப்பாக பல வண்ண மாலைகள், திருவாபரணங்கள் அணிந்து சேவை சாதித்தார் மாலை பெருமாள் புறப்பாடு கண்டருளும் சமயம்  வானம் இருண்டு, மழை மேகங்களுடன் ரம்மியமிக்க காட்சியாக இருந்தது; மழை பொழியவில்லை.

 





 

Cyclone Fengal, intensifying in the Bay of Bengal, is projected to hit Tamil Nadu's coast after grazing Sri Lanka. Heavy rainfall  is forecast to  impact crops, prompting school closures in several districts. The name 'Fengal' coming from Arabic language  was given by Saudi Arabia.   The India Meteorological Department has stated that a deep depression over the southwest Bay of Bengal is expected to strengthen into a cyclone and move towards Tamil Nadu, passing near the Sri Lankan coast over the next two days.   

 

திருவள்ளுவரின் வார்த்தைகளில் "அரண்" :

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்.

அதாவது, மணிபோல் தெளிந்த நீர்நிலையுடைய அகழியும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் உடையதே நாட்டுக்கு  அரணாகும். மனிதர்களுக்கு ?

 

நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என அரண் பலவகைப்படும்.  ஒரு நாட்டில் பகைவர்கள் நுழையாத வகையில் நீர், நிலம், காடு, அகழி, மதில்கள், கோட்டை கொத்தளங்கள், என அரண்கள் அமைக்கப்படும்.  இவ்வரணில் மூன்று மதில்கள் இருக்கும்.இவை புற மதில், இடை மதி, அகமதில் எனப்படும்.ஒவ்வொரு மதிலின் வெளியேயும் ஆழமான அகழியும் (அதில் முதலை போன்ற கொடிய விலங்குகளும்) காவற்காட்டில் முள் மரமும், முட்செடி கொடிகளும் அடர்ந்திருக்கும். பகைவர்கள் காலில் தைப்பதற்காக நெருஞ்சி முள் போன்ற இரும்பு முட்கள் காவற்காட்டில் எங்கும் பரப்பப்பட்டு இருக்குமாம்.   

நாமடைந்த நல்லரண் எம்பெருமான்தானே ! அருள்மிகு பேயாழ்வார் நமக்கு உரைக்கிறார்.

அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,

முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல்

ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப்பென்னாதே,

ஓதுகதி மாயனையே ஓர்த்து.

 

திருவாழியாழ்வானை (சக்கரத்தை) வலத்திருக்கையிலுடையவனும், முராஸுரன் என்னும் கொடிய அரக்கனின்  ஆயுளையும் வலிமையையும் போக்கினை மிடுக்கையுடையவனுமான எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன்,  நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில் - நமக்கு எந்த பயமுமில்லை ! எந்த குறையும் இல்லை.  அப்பழுக்கில்லாத தூயவனான நாரணன் மட்டுமே - நாம் தகுதியானவனா ?,  நம்முடைய  ஞானமென்ன!, ஆசாரமென்ன!,  பிறப்பென்ன!! - என எவ்வித  தாழ்வுகளையும்  பாராமல் - தன்னிடத்தில் சரணம் என வந்தவர்கள் அனைவரையும்  எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே  இருந்து காப்பவன்.  இந்த உண்மையை நன்றாக  உணர்ந்து,  ஆச்சரியமான குண சேஷ்டிதங்களையுடையனான அப்பெருமானையே, என்றென்றும் கதி (உபாயம்) என நாம் ஓதி  அநுஸந்திப்போமாக !! 

 

ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே  ஸர்வரக்ஷகன்.   இருகையும் தூக்கி அவனிடத்தில்  ‘நீயே சரண்‘ என்று ஸர்வபாரங்களையும்  அவன் மேலேறிட்டு, தம் தலையாலே ஒரு முயற்சியும்  செய்யாதவரையும் கூட அவனே ரக்ஷித்தருள்வன்.  

To the Q on – ‘Who is our SAviour’ – Sri Peyalwar offers a simple and direct answer.  All that we need to do is - repose one’s faith totally in Him.  Just surrender at the lotus feet of Sriman Narayana, the God who holds the discuss in His right hand, He who killed Asura by name Mura.  He saves everyone surrendering unto HIM without asking any Questions, without looking into those people’s knowledge, following, birth or anything else.  He saves and protects everyone of Us who have sought refuge in Him.   

Here are some photos of Ekadasi purappadu of Sri Parthasarathi Perumal at Thiruvallikkeni divyadesam.

 

~adiyen Srinivasadhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]











No comments:

Post a Comment