To search this blog

Monday, July 8, 2024

Thiruthanka - Sri Vilakkoli Permual sannithi maha Samprokshanam 2024

 Thirukachi (Kanchipuram) is a beautiful place with so many temples.  Thiruthanka is one of the 108 Divya Desams of Sriman Narayana  situated in Kanchipuram, this temple is just ½ kms away from Ashtabuyakaram divyadesam. More  significantly, this is the birth place of Sri Vedantachar.  


Today 8.7.2024 is Jeernotharana Samprokshanam at this holy Temple  built centuries ago and  expanded during the Medieval Cholas and Vijayanagar kings. The temple has inscriptions on its walls dating from the period of Rajaraja Chola III (1223 CE).  



திருக்கோவில்கள்  நூற்றுக்கணக்காக அமைந்துள்ள திருக்கச்சியிலே  திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த  ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசமாம் விளக்கொளி பெருமாள் (திருத்தண்கா) சந்நிதியில் இன்று ஜீர்ணோத்தாரன மஹா ஸம்ப்ரோக்ஷணம்.  விஷ்ணு காஞ்சியில் ரங்கசாமி குளம் அருகே, திரு அஷ்டபுஜகரம் சன்னதியின்  மேற்குத் திக்கில் சுமார் அரை மைல் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. காஞ்சியில் திருத்தண்கா   திவ்யதேசம் உண்டு. 'கண்ணன் வெஃக்கா' எனப்படுகிற ஸ்ரீயதோக்தகாரி எம்பெருமான் ஸன்னிதிக்குச் சமீபத்தில் உள்ள ' தேனிளஞ்சோலையே' தண்கா (குளிர் சோலை) என்பர் பெரியோர். அதற்கருகில் இருக்கும் அக்ரஹாரத்தில்   முன்பு, உத்தமமான புரட்டாசித் திருவோண நன்னாளில் உதித்தவர் குருவான வேதாந்தாசாரியார்   எனும் வேதாந்த தேசிகன் !    

முன்பொரு சமயம், உலகமே இருளில் மூழ்கியது.  அந்தகாரத்தில் பிரம்மன் தன் யக்ஞத்தை தொடர அங்கே ஒளி வீச அருள் பாலித்தார் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்.   ஜோதிமயமான வெளிச்சத்தில் தனது யாகத்தை தொடர்ந்த,   பிரம்மன் விஸ்வகர்மாவை ஆணையிட்டு,  யாகசாலையை  மிக நுட்பம் வாய்ந்ததாக அமைத்துக் கொடுத்தான். விஸ்வகர்மாவுடன்   அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால்  எம்பெருமான்  தீபப்பிரகாசர் ஆனார். தூய தமிழில் விளக்கொளிப் பெருமாள் ஆனார். திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில், தூப்புல்  எனவும் சிறப்புற அழைக்கப்படுகின்றது.

 





திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற இத்தலம்  ஆச்சாரியர் " வேதாந்த தேசிகன்" அவதாரம் செய்த புனித இடம். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தீபப்பிரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப் பிரகாசர், எனும் பெயர்களைக் கொண்டு விளங்குகிறார். தாயார் திருநாமம்  மரகதவல்லி. இத்தலத் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம். விமானம் ஸ்ரீகர விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. அருகில் வேதாந்தச்சார் அவதாரஸ்தலம் தூப்புல் சன்னதி - இங்கே ஸ்வாமி தேசிகன் வெள்ளி சிம்ஹ பீடத்தில் சிறப்புற எழுந்தருளி உள்ளார். 

 

விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில்

வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு 

என திருமங்கை மன்னன் கலியன் பாசுரம்.   பிள்ளைப் பெருமாளய்யங்கார் தமது அஷ்ட பிரபந்தத்தில்,  

ஆட்பட்டேன்  ஐம்பொறியால் ஆசைப்பட்டே னறிவும்

கோட்பட்டு நாளும் குறை பட்டேன் - சேட்பட்ட

வண்காவை வண்துவரை வைத்து விளக்கொளிக்குத்

தண்காவைச் சேர்ந்தான் தனக்கு. 

 'தூப்புல்’ தூய்மையான புல். வைதிகர்கள் உபயோகிக்கும் தர்ப்பத்தை குறிக்கும்.   உபய வேதாந்தத்துக்கும், [தமிழ், ஸம்ஸ்க்ருதம்]  என்ற இரண்டிலும் சிறந்து விளங்கியதால்  'வேதாந்தாச்சார்யர்’.  நமக்கு நல்வழி காட்டிடும் ஆசானை நாம் குரு, ஆசாரியன், தேசிகன் என்று பல பெயர்களால் குறிப்பிடுகின்றோம்.  தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள்.   

Swami Venkatanathan travelled to Thiruvahindirapuram and did “mangalasasnam” to Lord Deivanayagan and his consort. He then went to Lord Nrusimha’s sannidhi in Oushadagiri, sat under an “Ashwattha” tree and recited the Garuda Mantram.    He also composed  Hayagreeva Sthotra, Garuda-dhandakam, Devanayaga-panchasath, Achyutha-sadakam, and many more literary gems in future.  Swami was well versed in Sanskrit, Prakritham, Tamil and was great in debate earning the title  “Kavitarkikasimham”(A lion among poets).   

Here are some photos of Emperuman and Acaryan at Thiruthanka Thoopul divyadesam taken on 6.7.2024 thanks to Sri Thathachar Sudarshan swami.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
8th July 2024.   











No comments:

Post a Comment