To search this blog

Saturday, July 13, 2024

Kodai Uthsavam 7 - 2024 sarrumurai ~ பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே!!

Kodai Uthsavam 2024 sarrumurai ~ பலபலவே  பரணம் பேரும் பலபலவே!!






 நம் சத்சம்ப்ரதாயத்திற்கு பெருமை  யாதெனில் - - மிகப்பெரிய திருக்கோவில்களும், அவற்றில் அர்ச்சாவதார திருமேனியாம் அழகு எம்பெருமான்களும்  - அவர்தமை புகழ்ந்த ஆழ்வார் பாசுரங்களும், திருவாபரணங்களும், பட்டர்கள் அற்புத சாற்றுப்படிகளும், மணமிக்க பூக்களும், அருளிச்செயல் கோஷ்டிகளும், பக்தர்களும், எம்பெருமானை திருவீதிகளில் ஏளப்பண்ணும்  ஸ்ரீபாதம் தாங்கிகளும், - அனைத்தையும் அனுபவிக்கும் பக்தர்கள், பாகவதர்களும் - அவர்கள் செய்யும் கைங்கர்யங்களுமே !  இவற்றை தவிர ஆழ்வார் பாசுரங்களுக்கு அற்புத வியாக்கியானம் அருளிச்செய்த பூர்வர்களும், இந்நாளில் காலக்ஷேபம் சாதித்து நம்மை பாசுரங்களின் அற்புத ஆழ்ந்த அர்த்தங்களை உணர்ந்து அனுபவிக்க வைக்கும் அதிகாரிகளும்.  இவற்றில் கச்சி ஸ்வாமி எனும் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி நமக்கு இட்டுச்சென்ற அமுதங்கள் மிக மிக இனிப்பானவை.

Today  12th July 2024  is day 7 – the concluding day of Kodai Uthsavam – today is day 1 of Acaryar Alavanthar uthsavam too.  During Kodai Uthsavam, Sri Parthasarathi and Ubaya Nachimar have purappadu in separate kedayams… and  on day 7  it was exceptionally grand… in every sense –  He adorned a predominantly ornate white dress ~ the floral alankaram was exceptional… first it was the most fragrant  one made of mullai buds [jasmine];  then a beautiful garland made of – jasmine, vrutchi, kathambam; and a beautiful pathakkam in the posterior too.

As the Emperor, He had a wonderful Crown called ‘sigathadai’ – tightly woven around with reams of fresh  jasmine flowers with white robe and a kingly ornament atop that. 

ஆழ்வார்கள் தங்கள் பக்தியினால் எம்பெருமானிடத்திலே ஆழ்ந்து மையலுற்று அற்புத பாசுரங்களை நமக்கு அளித்தவர்கள்.  ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழியோ எக்காலத்துக்கும் ஒரு ஒப்பற்ற களஞ்சியம்.  இரண்டாம் பத்து  ஐந்தாம் திருமொழியில் ஆழ்வார் தம்மோடே எம்பெருமான் கலக்கும்போது ஒரு வடிவோடே கலந்து த்ருப்தி பெற மாட்டாதே பல வடிவுகள் கொண்டு கலந்து அநுபவிக்கும் படியை அருளிச்செய்கிறார்.  

“செங்கமலக்கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திகழாழிகளும் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன்மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமுங்கிறியும் மங்கல வைம்படையுந் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்கிறபடியே திருவாபரணங்கள் எண்ணிறந்தவை.  எம்பெருமானுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபலவாயிருக்கும்.  அநுபவிக்குங் காலத்தில் நாமக்ரஹணத்திற்கு இழிந்தவிடமெல்லாம் துறையாகும்.  சீலப்பேர்கள் வீரப்பேர்கள் என்று அநேகமாயிருக்குமே.  இதையே ஸ்வாமி நம்மாழ்வார் தம் பாசுரத்திலே : 

பலபலவேயாபரணம் பேரும் பலபலவே,

பலபலவே சோதி வடிவு பண்பெண்ணில்,

பலபல கண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,

பலபலவே ஞானமும்  பாம்பணைமேலாற்கேயோ. 

என சாதிக்கின்றார்.  திருப்பாற்கடலிலே ஆதிசேஷனைப் பள்ளியாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு  பண்பு  எது என எண்ணில், ஆழ்வார் தம் கலவியாலுண்டான அழகை  நிரூபித்துப் பார்க்குமிடத்து, திருவாபரணங்கள் மிகப் பலவாயிருக்கும்;  ஒளியுருவான திருமேனி  மிகப் பலவாயிருக்கும்;  பார்த்தும் உண்டும் கேட்டும் ஸ்பர்சித்தும் முகர்ந்து  உண்டாகிற  சுகங்களும்  மிகப்பலவாயிருக்கும்;  ஞானங்களும் மிக மிகவாம்.  அவ்வளவு உயர்ந்த ஸ்ரீமந்நாரணனின் திருத்தாள்களை பற்றுவோர்க்கு  என்றென்றும் எந்த குறையுமே இராது.  

Here  are some photos of day 7  Kodai Uthsava Purappadu at Thiruvallikkeni divyadesam on 12.7.2014. 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar









No comments:

Post a Comment