To search this blog

Friday, July 5, 2024

Aani Amavasai 2024 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

நகரங்களில் பலர் நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.  பிரச்னைகள் எனும் பூதம் அவர்கள் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் ஒருவருக்கும் உண்மையாக இல்லை !  ஏன் தனக்கே கூட !!  சரித்திரம் பலப்பல சாம்ராஜ்யங்களையும், நதிகளின் தீரத்திலே நகரகங்களையும் கண்டுள்ளது. நம் போன்ற ஸ்ரீவைணவர்களுக்கு பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை சேவித்து, கைங்கர்யங்கள் செய்து, அவன் புகழ் பாடி திளைப்பதே பேரின்பம்.   வாழ்க்கையின் பரம பலன் :  அதிகார போதை, ஆத்திரம், தீய எண்ணங்கள் இல்லாமல் - நான் சாதாரணன், நான் பக்தன், எனது பணி எம்பெருமானுக்கு, அவர்தம் அடியாருக்கு பணி செய்வதே என்பதை உணர்ந்து வாழ்தலே !

 


Today 5th July 2024  is Thiruvathirai in the month of  Aani  – masa thirunakshathiram of our Swami Emperumanar Ramanujar. Today is Amavasai too.. .. ..

When someone asks you – ‘How are you ?’ – what would be the answer – is it simply ‘fine’ or factual ‘not so fine’.  How willing are you to  genuinely listen to people ? How often would you interrupt to say – what I do, how I would have handled this ! or in my personal experience and .. .. ..

நம்மில் பலர் பல பிரச்னைகளிடையே உழல்கிறோம்.  மனா நிம்மதி இல்லை.  தினசரி வாழ்க்கையில் எப்போதும் பலப்பல  பிரச்னைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ! சரியான இடமில்லை, நல்ல உடைகளில்லை  (அதாவது எவ்வளவு இருந்தும் போதும் என்ற மனதில்லை); அலுவலக வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்னை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்னை, சக  பணியாளர்களுடன் பிரச்னை,  மற்றவர்களுக்கு எல்லாமே எளிதில் நடப்பதாகவும் தமக்கு சாதாரண விஷயங்கள் கூட பல இடர்பாடுகள் நேர்வதாகவும் உண்மையாகவோ மனத்திலோ சிந்தனை;  குடும்பங்களில்  பிரச்னை;  பணமுடை; போதாக்குறைக்கு கொரோனா வேறு உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டது. 

Glory, or difficulty – nothing is permanent.  In this World, there have been mighty Kings –  not exactly those  who ruled the entire Universe but many lesser mortals with valour who ruled over a piece of land and were proud -  history has it that they have fallen biting the dust – that what can lesser humans who possess broken pots as their asset dream of …. Alwar directs us to fall at the feet of Lord Sriman Narayana  .. ..

We think, speak and surround ourselves with Self !!  .. .. .. the  ego (Latin for "I") acts according to the reality principle; i.e., it seeks to please the id's drive in realistic ways that, in the long term, bring benefit, rather than grief.  At the same time, Freud concedes that as the ego "attempts to mediate between id and reality, it is often obliged to cloak the unconscious commands of the id with its own preconscious rationalizations, to conceal the id's conflicts with reality, to profess...to be taking notice of reality even when the id has remained rigid and unyielding." The reality principle that operates the ego is a regulating mechanism that enables the individual to delay gratifying immediate needs and function effectively in the real world.  

மனித இனத்தை, எண்ணங்களும், கவலைகளும் - என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகளும், எவ்வளவு நாட்கள் இவை தொடருமோ போன்ற மனப்பிராந்திகளும் கலக்குகின்றன.  இது போன்ற ஸ்திரமற்ற கலங்கிய நிலைக்கு முக்கிய காரணம்   மனிதரிடையே காணப்படும் அகவிருளான கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். "அகங்கார மமகாரங்கள்" கவுரவர்கள் அழிவுக்கு காரணமானது ! எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் நான், எனது என்ற  மனநிலையை விலக்க கீதோபதேசம் செய்தார்.  - அது என்ன "அஹங்காரமமகாரம்" -  நான்’ என்ற முனைப்பு அகங்காரம் - 'எனது' என்ற 'பற்று' மமகாரம்.

மமதை என்ற சொல்லுக்கு செருக்கு, ஆணவம், திமிர் போன்ற பொருள்கள் கொள்ளலாம்.  self-conceit, vanity, haughtiness.  வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை.

அஹங்காரம் என்பது ஏதோ துர்யோதனனிடம் மட்டுமே இருந்த கெட்ட குணமல்ல.  நமக்கு நம் குணங்கள் அழகானவையாக, நம் மனதில் படலாம் !  ஆனால் நாம் ஒவ்வொருவரிடமும் துர்யோதனாதிகளின் செருக்கு ஆழ்ந்த மனத்தில்  அருவறுப்பான கரையாக படர்ந்துள்ளது.  நமக்கு மற்றவர்கள் பலர் திமிர் பிடித்து நடந்து கொள்வதாக படுகிறது !  .. .. ஆனால்  நம்மிடம் எவ்வளவு பேர் அணுகி தங்களை கஷ்டங்களை, நம் குறைகளை சொல்லிவிட முடியும்.   நாம் நமது அருவறுப்பான பகுதிகளை பார்க்க விரும்புவதில்லை..  நான் என்னும் சொல்லுக்கு இலக்காக இருக்கிற மனிதன் தன்னை மற்றவர்களிடத்திருந்து பிரித்து வைத்துத் தன்னை உயர்ந்தவனாகக் கருதினால் அது அஹங்காரம். நான் என்னும் சொல்லை உபயோகப்படுத்துவதற்கிடையில் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்து வைத்துத் தனிப்பெருமை நாடாதிருந்து பழகினால் அது அஹங்காரமற்ற நிலை.

மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னை தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அகங்காரமும் மமகாரமும் இருப்பதை அவர்களால் உணர முடியாது. அடுத்தவர் உணர்த்தினால்தான் உண்டு.

அஹங்காரம்  மமகாரம்  ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவைகளாம்.  தன்னை பற்றி என்றென்றும் நினைக்காமல் எம்பெருமானையே நினைத்து உள்கசிந்த  ஸ்வாமி நம்மாழ்வாரே - நெடுநாளாக  அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதாபிக்கிறார். நான் உனக்கு அடிமைப்பட்டவன்; எனக்கென்று தனியே ஒரு பொருள் கிடையாது என்றபடி அவர் உரைக்கும் திருவாய்மொழி பாசுரம் இங்கே :

யானேயென்னை அறியகிலாதே,

யானேயென் தனதேயென்ரூ  இருந்தேன்,

யானேநீ  யென்னுடைமையும்  நீயே,

வானேயேத்தும்  எம்வானவரேறே.

விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள நித்யஸூரிநாதனான எம்பெருமானே!  இதுகாறும் என்னை  - நான் எப்படி உனக்கு அடிமைப்பட்டவன், எவ்வாறு எல்லாம் உன் அருளாலே நடைபெறுகிறது என்பதையெல்லாம் அறியமாட்டாமல் 'யானே என் தனதே'  என்று அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன்.  வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து,  அவற்றை தவிர்த்து  நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில் -   எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் என்பதே, என தெள்ளத்தெளிவாக  உரைக்கின்றார் சுவாமி  நம்மாழ்வார்.

சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பணிச்சை, துஞ்சை என ஐந்து வகையாக ஒப்பனை செய்து கொண்டார்கள் என, மதுரைக்காஞ்சி நூல் கூறுகின்றது. கூந்தல் மீது அணிகின்ற பொருட்களை, தலை அணிகலன்கள் என்கின்றனர். இவற்றில் மகுடம் எனும் அணிகலனும் ஒன்றாகும்.  நவீன கால இளம் பெண்கள், நவீன காலத்துக்கு ஏற்றதுபோல டிரெண்டியாகவும், எளிமையாகவும் இருக்கும் கூந்தல் அணிகலன்களை  செய்து கொள்கிறார்கள்.  கூந்தலை அலங்கரிக்கும் பாரம்பரிய அணிகலன்களை, சிறப்பு நாட்களில் அணிவதை, இன்றும் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  

இலக்கியங்களில் பெண்களின் கூந்தல் மயில்தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. பூங்குழலி, வண்டார்குழலி என்றெல்லாம் கூந்தலை மையப்படுத்திப் பெண்களுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன.

சிவபுராணத்திலும் சிவனின் ஜடாமுடி பற்றிய தகவல்கள் வருகின்றன. ஜடாதரன் என்றே அவர் அழைக்கப்படுகிறார். பகீரதன்  ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டு வர சிவபெருமான் தன் ஜடை முடியில் கங்கையைத் தாங்குகிறார். 

சூடாமணி, திருகுப்பூ, சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, ராக்கொடி போன்றவை சில, குற்றாலக் குறவஞ்சியில் பெண்கள் அணியும் தலை அணிகலன்கள்.   இன்று திருவல்லிக்கேணி எம்பெருமானின் விசேஷ சிகை அலங்காரத்தையும், அதில் சூட்டிக்கொண்ட பூக்களையும், ஆபரணங்களையும் இங்கே கண்டு இன்புறலாம்.





Here are some photos of Sri Parthasarathi Emperuman taken during Aani Amavasai purappadu today.   Falling at the feet of Emperuman praying to remove all my ignorance and bless me with a stable mind that is attached to His lotus feet and encourages in doing kainkaryam to Emperuman and His followers

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5th July 2024.  









No comments:

Post a Comment