To search this blog

Tuesday, February 6, 2024

Thai Ekadasi 2024 - Ylang-ylang, (Cananga odorata) - கருமுகைப் பூச்சூட்ட வாராய்

Ylang-ylang, (Cananga odorata), may  not exactly ring a bell, and what could be its relevance in a post on Sri Parthasarathi Perumal Ekadasi purappadu at Thiruvallikkeni this evening !!  Greek literature and poetry often represent human life as plant life.

 


Flora is all the plant life present in a particular region or time, generally the naturally occurring (indigenous) native plants. The corresponding term for animals is fauna.  The word "flora" comes from the Latin name of Flora, the goddess of plants, flowers, and fertility in Roman mythology.  The Greek term for flora is chloris. It is derived from the name of the Chloris, the goddess of vegetation.

 


Evanescence comes from the Latin evanescere meaning "disappear, vanish." Something that possesses qualities of evanescence, has a quality of disappearing or vanishing. Spring flowers are brightly colored, but they only last a short time, so they reminded the Greeks of the beauty and promise of youth and the tragedy of young lives cut short. 

Ever wondered why the rose, of all flowers, is symbolic of romance?  If you  jumble up the letters of 'rose' =  the  anagram of 'Eros', the god of love. Legend has it that Chloris, the goddess of flowers, stumbled upon a lifeless nymph while walking through the woods one day. Saddened by its death, she turned it into a flower so beautiful that all the gods would consider it the Queen of Flowers. Indeed, Aphrodite, the goddess of love, was so struck by its beauty that she named it 'rose' in honor of her son, Eros. 

Greek myths tell the story of Narcissus, a young hunter who was so beautiful that he fell in love with his own image reflected in a pool. He couldn’t tear himself away, so he eventually withered on that spot and gave his name to a pale white and yellow flower, the narcissus, which is called daffodil in English.  The beautiful Adonis, beloved of the goddess Aphrodite, died in a boar hunting accident, the goddess turned his blood into the red anemone flower, the “wind-flower” – Anemone coronoria – named for its fragile stem tossed in the wind. 

Ylang-ylang, (Cananga odorata), South Asian tree of the custard apple family (Annonaceae), known for its intensely fragrant flowers. It is the source of a penetrating but evanescent perfume.  Cananga odorata is a tall tree growing typically up to a height of 30–70 feet.  The fruit is greenish-black in color initially turning to yellow on maturity. It produces a  highly fragrant flower, greenish-yellow initially turning to deep yellow/yellowish-brown on maturity. The flowers are axillary and umbellate in shape with three sepals and six petals of about 8 cm in length.  The tree is  valued for the essential oils extracted from its flowers (also called "ylang-ylang"), which has a strong floral fragrance. In India, it is grown in gardens and is known by different local names such as Karumugai, Chettu sampangi, and Apurvachampaka !!  the name ylang–ylang is a translation of the Philippine expression “Along-Ilang” which means hanging or fluttering item. This flower finds a mention in Sangam literature and in Divyaprabandham too. 

 

In our Sampradhayam, more than the beauty of a flower or its fragrance, the bakthi with which it is to be submitted to Emperuman matters. 





பூக்கள் அழகானவை; அழகானவை; நறுமணம் தர வல்லன !  எம்பெருமானுக்கு நல்ல மணம் தரும் பூக்களை மாலையாக கோர்த்து சமர்பிக்கின்றனர்.  பெரியாழ்வார் தமது பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார் - கானகமெல்லாம் திரிந்த கரிய திருமேனி வாட திரியும் தேனிலினிய பிரானுக்கு -செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பச்சை தமனகம், மரு, தமனகம், செங்கழுநீர்ப்பூ, புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ, கருமுகைப்பூ  - என பற்பல மலர்களை ஆயர்கோனுக்கு பட்டர்பிரான் சமர்பிக்கின்றார்.  

முகை என்ற பெயர்ச்சொல்லுக்கு : மொட்டு, அரும்பு என பொருள்.  மலர்களின் பருவநிலையை பைந்தமிழில் :

·         அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை

·         நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை

·         முகை - நனை முத்தாகும் நிலை

·         மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)

·         முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்

·         போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

·         மலர் - மலரும் பூ

·         பூ - பூத்த மலர்

·         வீ - உதிரும் பூ

·         பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை

·         பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்

·         செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை என விளக்குகின்றனர் [விக்கிப்பீடியாவில் இருந்து] 

இதோ இங்கே நம் பெரியாழ்வாரின் ஒரு அற்புத பாசுரம் :

அண்டத்தமரர்கள் சூழ அத்தாணி  உள்ளங்கிருந்தாய்

தொண்டர்கள் நெஞ்சிலுறைவாய் தூமலராள்  மண வாளா

உண்டிட்டு உலகினை யேழும்   ஓராலிலையில் துயில்கொண்டாய்

கண்டு  நான் உன்னையுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய். 

மிக உயர்ந்த பரமபதத்திலே  தேவர்கள் சூழ்ந்திருக்க மிக சிறந்த அரியாசனத்தில் வீற்றிருப்பவனே! உந்தம் அடியார்களுடைய ஹ்ருதயத்தில் அதைவிட சிறப்பாக வசிப்பவனே!; பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாகவுடைய பிராட்டிக்கு கொழுநனே!   ஏழு உலகங்களையும் உண்டுவிட்டு  ஓர் ஆல் இலையில் யோக நித்திரை கொண்டவனே!  நான் நீ பூச்சூடி வரும் அழகை ரசித்து  மகிழும்படி 'கருமுகைப்பூ' சூட்டவாராய் என பலக்கண்ணனை பரிவன்புடன் அழைக்கின்றார் நம் பெரியாழ்வார்.

கருமுகை என்பது அனங்கம் என்றும் அழைக்கப்படும் ஒருவகை  மல்லிகை. காட்டு சம்பகம் அல்லது கருமுகை  என்பது இந்த வகையான மலரை குறிக்கும். இம்மலரை வைத்துக் கொண்டு எந்த நறுமணத்தை மனதில் நினைத்தாலும் அந்த நறுமணம் வீசும்.  மலர்களுக்கே உரிய வண்ணங்களில் இல்லாமல், இலைகளைப் போலவே பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மனோரஞ்சித மலர்கள் அதன் நிறத்தால் அல்லாமல் மணத்தாலே பூச்சிகளைக் கவருகின்றன. இம்மலர்க்கொடியில் பச்சைப் பாம்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

இன்று 6.2.2024  திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்   சூடியுள்ள பல மலர்களையும் முக்கியமாக மஞ்சள் வண்ணத்தில் திகழும் கருமுகை பூக்களாலான மாலையும் கண்டு களியுங்கோள்.  இன்று மாலை தை  ஏகாதசி  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட படங்கள் சில இங்கே. 

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
6.2.2024 









No comments:

Post a Comment