To search this blog

Monday, February 26, 2024

கொற்றப்புள் - Periya Thiruvadi Garudazhwar 2024

கொற்றப்புள்  என்ற அழகு தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா ?? 

Bondol eagle (Haliastur indus) is a species of bird of prey from the Accipitridae family.  It is Brahminy Kite.  Garuda is a legendary bird   in Hindu, Buddhist and Jain mythology.  Garuda is often portrayed in  anthropomorphic form (man with wings and some bird features). Garuda is a protector with power to swiftly go anywhere, ever watchful and an enemy of the serpent. Garuda is a part of state insignia in India, Myanmar, Thailand, Cambodia and Indonesia. The Indonesian official coat of arms is centered on the Garuda. The national emblem of Indonesia is called Garuda Pancasila. The Indian Air Force also uses the Garuda in their coat of arms and even named their special operations unit after it as Garud Commando Force. 



ஸ்ரீவைஷ்ணவ திவ்யதலங்களில் பிரம்மோத்சவத்தின் முக்கிய விழா - கருட சேவை.  திருவல்லிக்கேணியில் ப்ரஹ்மோத்சவத்தில் மூன்றாம் நாள் காலை - எம்பெருமான்  கருட வாகனத்தில் எழுந்து அருள்கிறார்.  மாசி மகம் அன்றும் காலை கருட சேவை தான்.   ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற சிறந்த  குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.  எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ்வாரை ஏ,[இரு,ஆம் சன்னதி முன்பே காணலாம்.  திருவரங்கம் பெரிய கோவிலில் மிக பெரியவராக கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார்.  திருக்கண்ணங்குடி திவ்ய தேசத்தில்  கருடாழ்வார்   இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு நின்ற கோலத்தில்  தரிசனம்  அளிக்கினார்.  

கருடன் ஸ்ரீமன் நாரணனின்  வாஹனம், நித்யஸூரி, எப்போதும் அவருடனே இருப்பவர். இவருக்கு  ‘பெரிய திருவடி’ என திருநாமம். .  கருடன் பெரிய திருவடி. அனுமன் சிறிய திருவடி. ஆற்றலிலும் அளவிலும் கருடனுக்கு அனுமன்   எந்தவிதத்திலும் குறைவுடையதாகச் சொல்லும் அடைமொழி இல்லை இது. முதல் வாகனம் கருடன். இரண்டாம் வாகனம் அனுமன். காலத்தால் பிற்பட்டு வந்த வாகனம். அதனால் இவர் சின்னவர். திருவடி சுமந்ததிலோ, போர்க்காலத்தில் தகுந்த நேரத்தில் தகுந்தபடி எதிரியைத் தாக்குவதற்கு ஏதுவான எல்லா விதத்திலும் அதி விரைவாகவும், பொருத்தமாகவும், மிகுந்த உறுதியோடும் அனுமன் நின்ற விதத்தை மற்றவர்கள் எல்லாம் பாராட்டியது பெருமை தான்; பகைவனான இராவணனே கூட வர பெருமையை  எண்ணி எண்ணி வியந்தான்.  



ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதியில் கருடாழ்வார் காஸ்யப முனிவருக்கும், வினதைக்கும் மகனாக அவதரித்தார்.   வசீகரிக்கக் கூடிய பார்வையும், முக அழகும் உடையவர் கருடன் என்பதால் இவரை ‘செம்பருந்து’ என்று அழைக்கின்றனர்.  கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பக்ஷிராஜன்,   மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்று பல பெயர்கள். பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர், கருட வியூக யுத்தமாக நடந்தது - இந்த வியூகத்துடன் வென்ற பாண்டவர்கள் போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர். 

தமிழ் இலக்கணத்தில் கொற்ற வள்ளை என்பது புறப்பொருள்.   திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "கொற்றம்" என்பது வெற்றியைக் குறிக்கும். "வள்ளை" என்பது ஒரு பாடல் வகை, பெண்கள் நெல் குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடுவது. எனவே, போரில் வென்ற அரசனைப் புகழ்வதையும், பகைவர் நாடு அழிவதற்காக வருந்துவதையும் பொருளாகக் கொள்ளும் இத்துறை "கொற்றவள்ளை" எனப்பட்டது.

Periya thiruvadiyin Thiruvadi

 

கொற்றப் புள்ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின்றாளால்,

வெற்றிப்போர்  இந்திரற்குமிந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் –

என்பது திருமங்கை மன்னன் வாய்மொழி.   

வெற்றி பொருந்திய ஒரு கருடப் பறவையை மேற்கொண்டு திருவீதியிலே எழுந்தருளுகிறான்; ஜயசீலமான யுத்தத்திலே மஹேந்திரனை ஒத்திருப்பன் என்கின்றாள்; என்னுமிடத்திலே எம்பெருமானை கருடவாஹனனாய் பராங்குசநாயகி வரித்து அனுபவிக்கின்றாள்.  

Here are some photos of Periya Thiruvadi taken during Masi Magam purappadu at Thiruvallikkeni on 24.2.2024

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.2.2024 




No comments:

Post a Comment