பேயாழ்வார் திருவவதாரம் செய்த 'ஐப்பசியில் சதயமில்' இன்று பிறந்தநாள்
கொண்டாடும் NGK மாமா
திரு NG கிருஷ்ணமூர்த்தி மாமா ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் அனைவரும் அறிந்த சிறப்பான உள்துறை கைங்கர்யபரர். இவருக்கு 84 வயது என்றால் நம்பமுடியாது !!
இன்சொல், அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம், புன்சிரிப்பு தவழும் முகம் - எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதே தம் உயிர், இலட்சியம் என வாழ்ந்து வழிகாட்டும் பிரம்மச்சாரி. திருக்கோவிலில் சகல வித உள்துறை கைங்கர்யங்களும் செய்துவரும் சாஸ்திரம் நன்கு அறிந்த மிக நல்லவர். கிட்டத்தட்ட 50 வருஷங்கள் மேலாக இவரை நாங்கள் அறிவோம். அன்று முதல் இன்று வரை நாள் தவறாமல் கோவில் கைங்கர்யம்.
Accountant General அலுவலகத்தில் பணி செய்து ஒய்வு பெற்றவர். இன்று காலை திருக்கோவில் வாசலில் அவருக்கு வாழ்த்து
சொல்லி ஆசி பெற்றது பரம சந்தோஷத்தை அளிக்கிறது.
3.11.2022
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment