To search this blog

Wednesday, November 30, 2022

Karthigai Thiruvonam - Sri Parthasarathi Emperuman - karumugai - கருமுகை பூக்கள்

நறுமுகை  என்றால் என்ன ?  - கருமுகை என்றால் என்ன ??  நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்  நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை.    .. .. and can you identify this flower / flowering plant ?!?!?

 

Cananga odorata may not exactly ring a bell !!  it  is a tall tree growing typically up to a height of 30–70 feet.  The fruit is greenish-black in color initially turning to yellow on maturity. It produces a  highly fragrant flower, greenish-yellow initially turning to deep yellow/yellowish-brown on maturity. The flowers are axillary and umbellate in shape with three sepals and six petals of about 8 cm in length.  

Cananga odorata, known as ylang-ylang is a tropical tree that is native to the Philippines, Malaysia, Indonesia, New Guinea, the Solomon Islands, and Queensland, Australia.  It is valued for the essential oils extracted from its flowers (also called "ylang-ylang"), which has a strong floral fragrance. In India, it is grown in gardens and is known by different local names such as Karumugai, Chettu sampangi, and Apurvachampaka !!  he name ylang–ylang is a translation of the Philippine expression “Along-Ilang” which means hanging or fluttering item. As the flowers of this tree droop, the tree was named ylang–ylang.  This flower finds a mention in Sangam literature and in Divyaprabandham too.  

அதிகம் ஓடாத இருவர் என்ற பட பாடல் நினைவிருக்கலாம்.  பாடல் வரிகள் :  நறுமுகையே நறுமுகையே… நீயொரு நாழிகை நில்லாய்…  அற்றைத் திங்கள் அந்நிலவில்…  நெற்றிதரல நீர்வடிய… கொற்றப் பொய்கை ஆடியவள்  -  “அற்றை திங்கள் என்றால் என்ன?”  

Confusion !!  -  long long ago or Once upon a time   என்பதை சங்கத் தமிழில் சொல்வதுதான் இந்த அற்றைத்திங்கள்.   இது ஒன்றும் மெட்டுக்கு பாட்டு போடும் புலவர் சொந்தமல்ல !!  

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்; எந்தையும் உடையேம்

எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின் –  வென்றெரி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே  

சங்க இலக்கிய புறநானூறு பாடல் வரிகள் -  இப்பாடலைப் பாடியவர்கள் பாரி மகளிர் ஆவர்.  பாரி மகளிர் இருவர் - அங்கவை, சங்கவை என்று  கூறுவர்  - அத்தகைய அழகிய தமிழ் வல்லுனர்களை - தமிழ் பட்டி மன்ற முதியவர் கூட நடிக்க படு கேவலமாக,  நகைச்சுவை என்ற பெயரில் மிக ஆபாச வசனத்தை காட்டியது ஒரு பிரபல தமிழ் படம்.     “மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்”.  மூவேந்தர் ஒன்று கூடித் தம் தந்தையை வஞ்சித்துக் கொன்றதை உணர்த்த வென்றெறி முரசின் வேந்தர் என இகழ்ச்சியாற் குறித்தனர் பாரி மகளிர்.   

நிற்க இது சினிமா பதிவல்ல !!  .. .. ஒரு நறுமலரை (கருமுகை) பற்றிய பதிவு !!

'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளது ஒன்று  உண்டு'  திருக்குறள் : 1274 - கற்பியல் 

என்ற குறளில் மலரின் நறுமணத்தை, நாற்றம் என்ற சொல்லில்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார். மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல இப்பெண்ணினது நகைமொக்குள் ஒரு குறிப்பு உண்டு - அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது., என்பது பாடலின் பொருள். நறுமணத்தை குறிக்கும் வேறு சொற்கள், வாடை, நறுநாற்றம், வாசனை. 

அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற ஸ்ரீமன் நாரணன் மட்டுமே உபாதாந காரணம்;  திருப்பாற்கடலில் சயனித்து இருக்கும்  பரமபுருஷன் மட்டுமே நம்மை காக்கவல்லன்.  


இன்று  (29.11.2022) திருவோணம் - திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான்   அழகு பொலிந்திட திவ்யமான நகைகளுடன்  தோளுக்கு இனியானில் புறப்பாடு கண்டு அருளினார்.  மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, கனகாம்பரம் என மிக அழகிய நறுமண மாலைகளோடு சேவை சாதித்தார்.   பெருமாளுக்கு முதல் வரிசையில் முல்லை மொட்டுகள் இடையே சற்று வித்தியாசமான மஞ்சள் பூக்களை இன்றைய படங்களிலே காணலாம்.  அவை மிக மிக மனமானவை. மற்றைய மலர்களுடன் – கருமுகைப்பூ  [மஞ்சள் வர்ணத்தில் உள்ள புஷ்பம்],   மலர்கள் மம் வீசி பொலிவுற்றன.

காட்டு சம்பகம் அல்லது கருமுகை   மலர்களுக்கே உரிய வண்ணங்களில் இல்லாமல், இலைகளைப் போலவே பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மலர்கள் அதன் நிறத்தால் அல்லாமல் மணத்தாலே பூச்சிகளைக் கவருகின்றன. இம்மலர்க்கொடியில் பச்சைப் பாம்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பூக்கள் அழகானவை; அழகானவை; நறுமணம் தர வல்லன !  எம்பெருமானுக்கு பலர் நல்ல மணம் தரும் பூக்களை மாலையாக கோர்த்து சமர்பிக்கின்றனர்.  பெரியாழ்வார் தமது பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார் - கானகமெல்லாம் திரிந்த கரிய திருமேனி வாட திரியும் தேனிலினிய பிரானுக்கு -  செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பச்சை தமனகம், மரு, தமனகம், செங்கழுநீர்ப்பூ, புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ, கருமுகைப்பூ  - என பற்பல மலர்களை ஆயர்கோனுக்கு பட்டர்பிரான் சமர்பிக்கின்றார்.  

·        முகை என்ற பெயர்ச்சொல்லுக்கு : மொட்டு, அரும்பு என பொருள்.  மலர்களின் பருவநிலையை பைந்தமிழில் : அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை

·        நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை

·        முகை - நனை முத்தாகும் நிலை

·        மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)

·        முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்

·        போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

·        மலர் - மலரும் பூ

·        பூ - பூத்த மலர்

·        வீ - உதிரும் பூ

·        பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை

·        பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்

·        செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை என விளக்குகின்றனர் [விக்கிப்பீடியாவில் இருந்து]

 

இதோ இங்கே நம் பெரியாழ்வாரின் ஒரு அற்புத பாசுரம் :

அண்டத்தமரர்கள் சூழ அத்தாணி  உள்ளங்கிருந்தாய்

தொண்டர்கள் நெஞ்சிலுறைவாய் தூமலராள்  மண வாளா

உண்டிட்டு உலகினை யேழும்   ஓராலிலையில் துயில்கொண்டாய்

கண்டு  நான் உன்னையுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்.

 

மிக உயர்ந்த பரமபதத்திலே  தேவர்கள் சூழ்ந்திருக்க மிக சிறந்த அரியாசனத்தில் வீற்றிருப்பவனே! உந்தம் அடியார்களுடைய ஹ்ருதயத்தில் அதைவிட சிறப்பாக வசிப்பவனே!; பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாகவுடைய பிராட்டிக்கு கொழுநனே!   ஏழு உலகங்களையும் உண்டுவிட்டு  ஓர் ஆல் இலையில் யோக நித்திரை கொண்டவனே!  நான் நீ பூச்சூடி வரும் அழகை ரசித்து  மகிழும்படி 'கருமுகைப்பூ' சூட்டவாராய் என பலக்கண்ணனை பரிவன்புடன் அழைக்கின்றார் நம் பெரியாழ்வார்.

               இன்று திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்   சூடியுள்ள பல மலர்களையும் முக்கியமாக மஞ்சள் வண்ணத்தில் திகழும் கருமுகை பூக்களாலான மாலையும் கண்டு களியுங்கோள்.  இன்று மாலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட படங்கள் சில இங்கே. 

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
29.11.2022 

  

3 comments:

 1. கருமுகை பூ /கருமாமுகில் பூ / சிறு வயதில் பூத்து பார்த்திருக்கிறேன். 🙏🙏🙏🙏

  ReplyDelete
 2. One more Thirukkural on various stages of flowering.

  காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
  மாலை மலரும் இந்நோய்

  என்று காதலை அழகாக விளக்குகிறார்  ReplyDelete
 3. Arumai ... beautifully written. Solomon Pappaiah and Vivek comedy on Ankavai was disgusting .. ..these people will sell anything, if they get some money - Dhivya

  ReplyDelete