To search this blog

Sunday, May 23, 2021

Acaryan Swami Sri U. Ve. Kovil Kanthadai Chandamarutham Singarachaar Swamy

ஸ்ரீ:

ஸ்ரீமதே  ராமானுஜாய நம :

ஸ்ரீ ஸ்ரீநிவாஸ மஹாகுரவே நம :

Today has dawned very differently – with a very sad news of our Acaryan attaining Emperuman thiruvadi @ 12.15 am on 23.5.2021. [midnight of 22.5.2021]

இன்று ஸ்ரீவைணவ சமுதாயத்திற்கு பேரிழப்பு .. .. .. நம்மை திருத்தி பணிகொண்டு எம்பெருமானிடம் கைங்கர்யங்கள் செய்துவைத்த நம் ஆசார்யன் ஸ்வாமி கொடிய நோயினால் வைகுந்தம் ஏகினார். அன்னாரை இழந்து இந்த ஸம்ப்ரதாயத்து சிஷ்யர்கள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர். திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களை பரமபதவாசிகள், நித்யஸூரிகள் வரவேற்பராம்.. .. இதையே -  'சேதனனுடைய  இழப்பு  ஈஸ்வரனுக்கு லாபம்' என  ஸ்ரீவசனபூஷணத்தில்  கூறப்பட்டுள்ளதாம்.  எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று ஏற்கும் சேதனனுக்கு  சதாச்சார்ய அபிமானமே என்றென்றும்  உத்தாரகம்.  பரம சௌலப்யராய் நமக்கு நம் குடிசைகளுக்கு வந்து நம்மை திருத்தி பணிகொண்ட ஆசார்யன் இன்று நம்மிடையே இல்லை என்பதை மனம் இன்னமும் ஏற்கவில்லை.  

நம் சுவாமி பரம ஞானி ... பரம சௌலப்யர் ... சிஷ்யர் தம் இல்லங்களுக்கே வந்து இன்வார்த்தைகளுடன் எப்போதும் ஆசீர்வதித்தவர். தம் முன்னோர் பொன்று கடிகை தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக்கனி எம்பெருமானுக்கு அற்புதமாக கைங்கர்யங்கள் புரிந்து வந்தவர். பெரியமலை ஸ்ரீ யோகநரஸிம்ஹர் சின்னமலை ஸ்ரீ யோகஆஞ்சநேயர் மற்றும் அக்காரக்கனி என கைங்கர்யம் கடினமான திவ்யதேசம் எனினும் இங்கே நம் ஆசார்யர் அற்புத கைங்கர்யம் செய்து வந்தார். அவரது இழப்பு அக்காரக்கனி எம்பெருமானுக்கே ஒரு பேரிழப்பு எனலாம்..  

ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் : 

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்

வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுதென்று

வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே  

ஸ்ரீ வைகுண்டத்திலே சென்று புகுந்தவளவிலே திருவாசல்காக்கும் முதலிகளானவர்கள்  “ஸ்ரீவைகுண்ட நாதனுடையார்கள் எங்களுடைய ஸ்வாமிகள், ஆகையாலே  எங்களதிகாரத்திலே புக வேணும்” என்றுசொல்லி உகந்தார்கள்;  அவ்விடத்திலே, எம்பெருமான் உறையும் வைகுந்தத்திலே  கைங்கரிய நிஷ்டராயும் குணாநுபவ நிஷ்டராயுமுள்ளவர்கள் மண்ணவர் வைகுந்தம புகுவது விதியே என்று வியந்தனர்  

எம்பெருமானின் நிர்ஹேதுக   க்ருபையினாலே ஒருவன் எம்பெருமானிடம் அத்வேஷம் முதல் எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யம் செய்யக் கூடிய பல நிலைகளை அடைகிறான். மீளாத் துயரத்தில் இருக்கும் ஒருவன் உஜ்ஜீவனத்தைக் நிச்சயமாகக் கொடுக்கும் இந்த நிர்ஹேதுக க்ருபையைக் கண்டே சாந்தி அடைகிறான்.  .. .. அந்த க்ருபையை காட்டும் எம்பெருமானிடம் நம்மை சேர்விக்கும் நமது குரு இன்று வைகுந்தம் ஏகினார்.

 



Sri Vaishnava Sampradhayam places great emphasis on following the path shown by Acharyan.  Our  Sampradhayam is proud of the rich lineage of greatest of Acharyas who have guided us towards salvation.  One can easily discern from the  Great ‘Thaniyan’ of Swami Koorathazhwaan that we observe daily - “Lakshminatha samarambaam, Nathayamuna madhyamam – Asmath Achaarya paryanthaam, vanthe Guru parambaram”.  

For a  Srivaishnavaite, Acharyar leads and guides one to ultimate  Sriman Narayana. Our Acharyar  is Cholasimhapuram Doddayachaaryar (presently Sri U. Ve. Kovil Kanthadai Chandamarutham Singarachaar Swamy).   We the Sishyas of Swami belong to the lineage, which emanated from the Holy feet of Sri Periya Perumal, Periya Pirattiar, Senai Muthalvar, Nammazhwar, Naathamunigal, Uyyakkondar, Manakkal Nambigal, Aalavanthar, Periya Nambi, Emperumaanar, Koorathazhwar, Mudaliandan, Embaar, Battar, Nanjeeyar, Nampillai,  Vadakku Thiruveethipillai, Pillai Logachariyar, Thiruvoimozhipillai, Maanavala Maamunigal, Vaanamamalai Jeeyar to  Doddacharyar (of whose lineage we have the present head – Sri Singarachaaryar Swami).  

With extreme sadness, we are coming to grips of the fact that our Swami Sri U. Ve. Kovil Kanthadai Chandamarutham Singarachaar Swamy is no more !  

நம் ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தின் அடிப்படையே - ஆசார்யர்கள் தான்.  பெரிய பெருமாள்; ஸ்ரீரங்க நாச்சியார், சேனை முதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, எம்பெருமானார் இராமானுசர், கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பிள்ளை லோகாச்சார், திருவாய்மொழிப்பிள்ளை, பெரிய ஜீயர் எனும் நம் மணவாள மாமுனிகள், வானமாமலை ஜீயர் சுவாமி,  தொட்டையங்காரப்பை சுவாமி, சண்டமாருதம் சுவாமி எனும் பெரிய சுவாமி தொட்டையாச்சர் என எங்கள் ஆச்சார்யர் குலம் நீள்கிறது.  பெரியப்பங்கார் ஸ்வாமிக்கு பிறகு அவரது திருக்குமாரர் ஸ்ரீ கோயில் கந்தாடை சண்ட  மாருதம் ஸ்ரீ சிங்கராச்சார் சுவாமி வர்த்தமான ஆசார்யர் ஆவார்.    

சில நூறாண்டுகள்  முன்பு நம் சுவாமி திருவம்சத்தில் ஸ்வாமி தொட்டாச்சார்யார் என்பவர் அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோகநரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார். பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை அவரால்  பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே  'ஸ்ரீ தேவராஜ  பஞ்சகம்' எனும்  ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகனரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார். சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளசிம்மபுரத்துக்கு  எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் இது  **ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை** என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவம்சத்திலே அவதரித்தவர் நம் ஆசார்யர்.   

Tracing back our lineage,  Swami Sri Doddachar was born in 1543 in the famous lineage of Swami Mudaliandan.  In this Kaliyuga, we know that Thirukachi Arulalar directly conversed with Acharyan Thirukachi Nambigal  … and centuries later,  Sri Devathirajar had direct interaction with our Doddacharyar Swami too.   

7th June 2014 was a great day for the sishyas as they descended at Sholinghur (Cholasimhapuram divyadesam) – On  Vaikasi Uthiram day, it was Sashtiapthapoorthi celebrations of our varthamana Acharyar - Sri Ubhaya Vedantha Kovil Kanthadai Chandamarutham Singarachar Swamy.


We are proud to follow the lineage of  Doddacharyar and follow the footsteps of our Acharyan - Sri U Ve Koil Kanthadai Chandamarutham Singarachaar Swami. Here is the thanian of our Varthamana Swami….  

ஸ்ரீமந்  ந்ருஸிம்ஹ வரதேஸிக பௌத்ர ரத்னம் *

ஸ்ரீனிவாஸ ஸூரி பதபங்கஜ  ராஜஹம்ஸம் *

ஸ்ரீமத் வாதூலகுலவாரிதி பூர்ண சந்த்ரம் *

ஸ்ரீமந்  ந்ருஸிம்ஹ  குருவர்யம் அஹம் ப்ரபத்யே ** 

Falling at the feet of Emperuman at this painful moment praying for our Acaryar and to give strength to the family of our Swami and to all of us, sishyas to bear this unbearable loss .. ..  

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!

ஸ்ரீவைஷ்ணவனுக்கு உய்ய ஒரே வழி எம்பெருமானிடம் சரணாகதி அடைந்துதிருவடிகளில் பிரபத்தி செய்வதே.  ஸ்ரீவைகுண்டத்து எம்பெருமானிடம் நம்மை சேர்விப்பவர் நம் ஆசார்யரே *** 

 

adieyn Srinivasa dhasan (Srinivasan Sampathkumar). 
23rd May 2021. [edited @ 10.46 am correcting the time to read as 12.15 am of today] 







10 comments:

  1. ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

    நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !! அரிய புகை படங்கள்!!சௌலப்யம் மிகுந்த ஸ்வாமி யின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

    ReplyDelete
  2. Acharyan Thiruvadigale Saranam

    ReplyDelete
  3. Acharyan aabimaname uttharakam🙏🙏🙏

    ReplyDelete
  4. Acharian Thiruvadikale saranam...May the Lord Emperuman grant moksham to the great noble soul of our Acharyan and may he continue to guide all of us for eternity

    ReplyDelete
  5. acharyan thiruvadigale saranam. It's an irreparable loss to ourcommunity. Om Shanti.

    ReplyDelete
  6. Adiyen rAmAnuja dAsan 🙏🏻🙇🏻‍♂️

    ReplyDelete
  7. My heartfelt condolences to our acharyan

    ReplyDelete
  8. ஸ்ரீ:
    சண்டமாருத வேதாந்த விஜயாதி ஸ்வஸூக்திபி:
    வித்யா நிதிம் விநயாதிகம்
    ப்ரபத்யேஹம் ஸ்ரீ நிவாஸ மஹா குரும்.
    க்ஷமித்தருளவும் அடியேன் தாஸன் சடகோபன் தண்டவத் ப்ரணாமம் 🙏

    ReplyDelete
  9. ஆச்சர்யன் திருவடிகளே சரணம்🙏

    ReplyDelete