At all divyadesam and Srivaishnava temples, Pagal pathu uthsavam commenced on 15.12.2020
and today (20.12.2020) is day 6 ~ from 25.12.20 till
3.1.2021 will be Irapathu .. and on 4th Jan 2021
is Iyarpa Sarrumurai. Today
it was Sri Paramapada Nathan thirukolam.
எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என நம் உயர்குரு மணவாள மாமுனிகள் விளம்பியபடி - அர்ச்சாவதாரம் மிக்க சிறப்பு வாய்ந்தது. எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் இருப்பிடம் 'ஸ்ரீ வைகுந்தம்', திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் என்பது மிக உயர்ந்தது. வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும். 8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும். வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும். இதனை திருநாடு என ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கின்றனர். இன்று எம்பெருமான் ஸ்ரீபரமபத நாதனாய் சேவை சாதிக்கின்றார். இங்கே திருமயிலை ஸ்ரீ மாதவப்பெருமாளின் அழகு திருக்கோலம் [சாற்றுப்படி : திரு அஷ்வின் சுந்தரராஜன் சுவாமி].
இன்று திருமொழி தொடக்கமும் கூட. திருக்கார்த்திகை முதல் திருவல்லிக்கேணியில் மூலவர் சேவை கிடையாது. எண்ணெய் காப்பு. இன்று ஸ்தல பாசுரமான 'விற்பேறு விழவும் கஞ்சனும் மல்லும்' .. .. பாசுரத்தின் போது திரை விலகி, ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் மூலவர் தர்சனம் உண்டு. இன்று முதல் வைகுண்ட ஏகாதசி வரை மூலவர் கவசங்கள் இல்லாமல், மீசை இல்லாமல் சேவிக்கலாம் என்பது ஒரு விசேஷம்.
From Thirukarthigai, there would be no darshan of moolavar at Thiruvallikkeni – on day 6 of Pagal pathu at the time of sthala pasuram ‘virperu vizhavum’ – starts darshan of Moolavar Sri VenkataKrishnan – without kavacham and without moustache. One can have this great darshan for 4 days till Vaikunda Ekadasi. Here are some photos of Paramapada Nathan thirukolam at Thirumylai Sri Madhava Perumal [sarruppadi Sri Ashwin Sundararajan battar]
திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில் நமக்கு உரைப்பது
: நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் நாராயணாவென்னும் நாமம். கல்பவ்ருக்ஷம்போல்
ஸர்வஸ்வதானம் செய்பவரென்றும் ஸர்வஜ்ஞரென்றும்
சிறப்பித்து கவிபாட ஏற்றவன் நாம் துதி பாட
வல்லன் ஸ்ரீமன் நாரணன் ஒருவனே. அவனையே நினைத்து
'நாராயணா என்னும் நாமம் பாடி நாம் அனைவரும் உய்வோமாக !'.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
20.12.2020
No comments:
Post a Comment