To search this blog

Tuesday, June 27, 2017

Thiruvallikkeni Kodai Uthsavam 4 : 2017 : செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்

செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்.



செவிக்கு இன்பம் ஆவது  புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே; அந்த இனிய திருநாமமே  இப்பூவுலகில்  வசிப்பவரெல்லாம் கவலையற்று  ஒதுங்குவதற்கு  இடமாகவும் அமையும்.  மகா புருஷனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் மட்டுமே பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருப்பவன் .  அவனையே தெய்வாதீனமாக அடையப்பெற்றேன், ஆராய்ந்து பார்த்தால் வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.

எம்பெருமானைத் தவிர்த்து மற்றையோரைச் கவிபாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் திருடித் திருடிக் கவிபாட வேண்டும். அங்ஙனன்றிக்கே எம்பெருமான் கவிக்கு நிறைந்த பொருளாயிருப்பன், என்கிறார் நம் திருமழிசைப்பிரான்




On day 4 of Kodai Uthsavam, it was chinna mada veethi Kulakkarai purappadu for Sri Parthasarathi who was exceptionally beautiful adorning another different crown. 

Nanmukan Thiruvanthathi of Thirumazhisai Alwar was rendered.  Alwar tells us : - the sweetest music to ears if the name of Lord Sriman Narayana who has beautiful red eyes; He and His feet are the  refuge of all humanity, whom I have arrived and praising with poetry.  He is the centric of all poetry, worthy of it (for praising others, one would only make wrong exaggerated comparisons) -   Come to think, it is the very substance of the Vedas.

Here are some photos of today’s purappadu





-adiyen Srinivasadhasan

27th June 2017

1 comment: