To search this blog

Wednesday, March 1, 2017

Sri Azhagiya Singar theppam 2017 at Thiruvallikkeni

On the beautiful Kairavini Pushkarini [Thirukulam of Sri Parthasarathi swami temple] – theppothsavam is on.  The first 3 days were for Sri Parthasarathi and today 1st Mar 2017 was Sri Azhagiya Singar Theppam. 

Sri Azhagiya Singar was exceptionally attractive – oozing beauty.  Is He not the Lord whose anger ensured that in protection of His baktha Prahalada, the powerful Hiranya was shredded by the finger nails; in His anger, His red eyes shone like hot embers, fire came through his gaping mouth, He resembled a ferocious mighty lion. What a beautiful form it was! – at Thiruvallikkeni,  He is the most beautiful Azhagiya Singar – He is always beautiful and pleasant – for His anger is only directed at those enemies of His devotees.

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் மாசி மாதம் அம்மாவாசை முதல் தெப்போத்சவம் விமர்சையாக நடை பெறுகிறது.    முதல் மூன்று நாட்கள் ஸ்ரீ பார்த்தசாரதி; இன்று ஸ்ரீ தெள்ளியசிங்கர் தெப்போத்சவம் கண்டருளினார்.



ஸ்ரீ நரஸிம்ஹம்  என்றாலே சீற்றம் ~ பல இடங்களிலே ப்ரஹலாதனுக்காக கோபம் கொண்டவர்  உக்ரமூர்த்தியாக சேவை சாதிக்கிறார்.  அல்லிக்கேணி விஷயம் வேறு ! இங்கே மூலவர் யோகநிஷ்டையில் யோகா நரசிம்மர்.  உத்சவர் - அற்புத அழகு மிளிரும் அழகிய சிங்கர்.   இரணியனை இருகூறாக பிளந்த உருவம் சாந்த சொரூபியாகுமா என ஐயுற வேண்டா !!

இதோ நமக்கு திருமழிசைப்பிரான் அருளமுது :
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற*
இவையா எரிவட்டக் கண்கள் – இவையா*
எரிபொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்*
அரிபொங்கிக் காட்டும் அழகு.

இமையோர் பெருமான் என நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன் குறித்து ஆழ்வார் வினவுகிறார்.  நெருப்பை உமிழ்ந்த பாழி போன்ற பெரியவாய்  இவையா ? ; இவையா  கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற திருக்கண்கள் ??  இதுவா - அக்னிபோல  கிளர்ந்து தோன்றின திருமேனி ~ இதுவா அவனது திருமேனி அழகு !!!  என்ன அற்புதம் !

நரஸிம்ஹமூர்த்தி இவ்வளவு பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப் பயங்கரமேயன்றி அன்பர்கட்குப் பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக் காட்டும் அழகு“ என்று அழகிலே முடிக்கப்பட்டதென்க. [சுவாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் விளக்கம்]

Here are some photos taken during today’s purappadu
Adiyen Srinivasa dhasan [Thiruvallikkeni S. Sampathkumar]




No comments:

Post a Comment