To search this blog

Saturday, March 18, 2017

Sri Azhagiya Singar Thavana Uthsavam 3 : 18032017

Muthalazhwaargal were naturally extolled at the golden feet of Emperumaan.  Sri Peyalwaar hails Him thus :  the golden  feet that strode the Earth are of the hue of lotus.  His body is the hue of the ocean.  His crown is the radiance of the sun.  His effulgent discus too is like the sun, Is he not beautiful beyond compare?


அடிவண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்
படிவண்ணம் பார்க்கடல் நீர் வண்ணம், - முடிவண்ணம்
ஓராழி வெய்யோன்  ஒளியும் அஃது அன்றே
ஆராழி  கொண்டாற்கு அழகு

முதலாழ்வார்கள் உலகளந்த சரிதையிலே மிகவும் ஆழ்ந்திருப்பர்களென்பது ப்ரஸித்தம்.  எம்பெருமானுடைய திருமேனியை உகப்பது  போலே, அவனது திருவடித்தாமரைகளையும் உகப்பர் பெரியோர். 

பேயாழ்வாரின் அமுத வரிகளிலே :  முன்பு உலகங்களை அளந்த  பெருமானுடைய  திருவடிகளின் நிறம், அன்றலர்ந்த  தாமரைப்போலே சிவந்திராநின்றது; திருமேனியின் நிறம் -  பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுத்துக் குளிர்திராநின்றது.;  அவன் அணிந்த கிரீடத்தினுடைய நிறம் -  ஒற்றைச்சக்கரமுடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது, அப்பெருமானுடைய  தேஜஸ் அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதேயன்றோ ~ என பொன்னிவர் மேனி மரகதப்பெருமானின் விசேஷனாதிகளை சிலாகிக்கின்றார். 


In what could be the shortest of the purappadu – one gets the greatest opportunity of worshipping Him in close quarters.  Today is day 3 of Thavana Uthsavam for Sri Azhagiya Singar – in the morning, Thelliya Singar has purappadu from His sannathi to Thavana Uthsava bungalow which could hardly be 50 mtrs or so.  In this purappadu, a single garland adorns Him and devotees could have close darshan of His Thiruvadi, Thiruvazhi, Thiruchakram, Ahvana hastham, Thirumuga mandalam and Thirukireedam.   Here are some photos taken this morning

Adiyen Srinivasa dhasan.
18th Mar 2017.








No comments:

Post a Comment