Aadi is a great month for Srivaishnavaites, for in this month falls the birth day of Andal – the only female saintess Azhwar in our Sampradhayam. Goda devi was born at Srivilliputhur in the Tamil month Adi, with the birth-star Pooram, which is celebrated as ‘Thiruvadi puram’.
Goddess Andal was a treasure-trove infant, obtained in the Tulasi garden, in the premises of the temple of Sri Vadanathrasayee. She was found by Periyazhwar whose birth celebrations recently occurred in ‘Aani Swathi’.
Andal composed two works unique in their literary, philosophical, religious, and artistic content. One is Tiruppavai, a poem of thirty verses in which Andal imagines herself to be a cowherd girl during the incarnation of Lord Krishna. This is recited in all temples especially during the month of Margazhi. The second is the Nachiyar Tirumozhi, comprising of 143 verses.
This year Thiruvadipuram falls on 17th day of Aadi, Tuesday – 2nd August 2011. The 10 day Thiruvadipura Uthsavam commenced on 24th July 2011. Here are some photos taken during the purappadu on that day
Regards – S. Sampathkumar.
****************************************************************************************************
திருவாடிப்பூரம் ஆண்டாளின் திரு அவதாரத்தால் சிறப்பு பெற்றது. பூமிப்பிராட்டியின் திரு அவதாரமான கோதை என பெயர் பெற்ற ஆண்டாள் கலி பிறந்து தொண்ணூற்று எட்டாவது நள வருடத்தில் சுக்ல பக்ஷம் பஞ்சமி திதி கூடிய பூர நக்ஷத்ரத்தில் அவதரித்தார்.
பொங்கும் பரிவாலே என பெருமாளிடத்தில் அதீத ப்ரீதி காட்டிய வில்லிபுத்தூர் பட்டர்பிரான் என்கிற விஷ்ணுசித்தர், ஆழ்வார்களிலே பெரியாழ்வார் எனப் பெயர் பெற்ற மெய்யடியார் நந்தவனத்திலே துளசிச் செடியின் அருகே இவரை கண்டு எடுத்தார்.
கோதை என்றால் தமிழில் மாலை; வட மொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள். தனது பாமாலை களாலும் பூமாலை களாலும் பெருமாளை பாராட்டியதால் 'சூடிக் கொடுத்த நாச்சியார்" என பெயர் பெற்ற இவர் 'திருப்பாவை 30 பாடல்களையும் நாச்சியார் திருமொழி 143 பாடல்களையும் " அருளிச் செய்தார்.
தமது திருப்பாவையில் - "வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறு பெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் நடைபெறுகிறது.
இவ் உத்சவம் ஞாயிறு 24/07/2011 அன்று துவங்கியது. திருவல்லிக்கேணியில் சாயம் ஆண்டாள் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார். அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :-
இவ் உத்சவம் ஞாயிறு 24/07/2011 அன்று துவங்கியது. திருவல்லிக்கேணியில் சாயம் ஆண்டாள் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார். அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :-
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
No comments:
Post a Comment