To search this blog

Friday, August 25, 2023

Thiruvallikkeni sirappu - Ashta Prabandham - திருவல்லிக்கேணியான் சீர்

திருவல்லிக்கேணி வங்கக்கடல் ஓரத்தில் அமைந்து இருக்கும் ஓர் அற்புத திவ்யக்ஷேத்திரம் - ஆழ்வார் பாடல்களை பலமுறை கேட்டு அனுசந்தித்து ஆனந்தித்துள்ளோம்.  இன்று  வேறு ஒரு பாசுரம்.



 

திரிந்துழலுஞ் சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்

புரிந்து புகன்மின் புகன்றான் - மருந்தாங்

கருவல்லிக்கேணி யாமாக்கதிக்குக்  கண்ணன்

திருவல்லிக்கேணியான்  சீர். 

ஐம்புலன்களில் கட்டுக்கடங்காமல்,  சென்று அலைகின்ற மனத்தை, அவ்வாறு செல்லவொண்ணாமல்   நேராக நிறுத்தி,   திருவல்லிக்கேணியென்னுந் திவ்வியதலத்திழுந்தருளி இருக்கிற  கண்ணபிரானாகிய வேங்கடகிருஷ்ணனது,  அருமை பெருமைகளை   விரும்பிக் கூறுங்கள்.  அவ்வாறு புகழ்ந்துகூறினால், அது கருப்பமாகிய கொடிக்கு,  நசிக்கச்செய்யும்  ஒளஷதமாம்;  சிறந்த முத்தியுலகத்துக்கு (மாகதிக்கு) , ஏணி ஆகுமாம். மனத்தைப் பல விஷயங்களிற்செல்லாது ஒருவழிப்படுத்தித் திருவல்லிக்கேணி எம்பெருமானின்  கீர்த்தியை பாடுவதே முக்திக்கு எளியஉபாயமாகும்.  இது,  தொண்டைமான்சக்கரவர்த்தியின் பிரார்த்தனைப்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத் தனது குடும்பத்தோடு சேவைசாதித்த தலம்; இத்தலத்துப்புஷ்கரிணி - அல்லிப்பூக்கள் நிறையப்பெற்றதனால், கைரவிணியென்று வடமொழியிலும், திருவல்லிக்கேணியென்று தென்மொழியிலும் பெயர்பெறும்.  

இந்த அற்புத பாசுரத்தை நமக்கு தந்தவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவர் அழகிய மணவாளதாசர் எனவும்  தெய்வக்கவிஞர் என்று பொருள்படும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர். இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதி  அஷ்டபிரபந்தம்.   “அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்“ என்னும் பழமொழி இந்நூல்களின் உயர்வைப் புலப்படுத்தும். இவரது பாடல்கள் சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடை நோக்கும் நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன. கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.  

இவர் இருமொழி புலமைப் பெற்றவர். நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்குப் பிறகு வைணவ சமயச் சார்பாக எழுந்த இத்தொகுதியைத் திவ்விய பிரந்தசாரம் எனக் கூறுவர்.  அஷ்ட பிரபந்தங்களாவன : 

·        திருவரங்கக் கலம்பகம்

·        திருவரங்கத்து மாலை

·        திருவரங்கத்து திருவந்தாதி

·        சீரங்கநாயகர் ஊசல்

·        திருவேங்கட மாலை

·        திருவேங்கடத்தந்தாதி

·        அழகர் அந்தாதி

·        நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி. 

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி  சொல்நோக்கு பொருள்நோக்கு தொடைநோக்கு நடைநோக்கு முதலிய இனிய நோக்கங்கள்யாவும் அமைய ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் என்னும் நால்வகையிலும் திவ்வியகவிகளைப் பாடவல்ல புலவர்பெருமானாதலால், இவர்க்கு 'ஏற்றம்' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. ஏற்ற மணவாளர் என்பது எம்பெருமானது விஷயமான கவிகளைச் சொல்வதற்கு தகுதியுடைய மணவாளர் என்று உரைத்தலும் பொருந்தும்;  மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் மங்களாசாசனஞ்செய்த நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளைப் பற்றிப் பாடிய அந்தாதித்தொடையாலமைந்த நூல் என்பது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியின்  பொருள். 






Enjoying the pasuram of Pillai Perumal Iyengar on Thiruvallikkeni divyadesam,  here are some photos ot Sri Parthasarathi Emperuman taken during thiruther thirumanjanam and theerthavari purappadu during Chithirai brahmothsavam 2023.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25.8.2023 

சங்கசக்ர கதாபாணே - Emperuman standing tall at Halabedu

“சங்கசக்ர கதாபாணே துவாரகா நிலைய அச்சுத

கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதாம்”

 


சங்கையும் சக்கரத்தையும் கதையையும் கைகளில் ஸ்ரீமன் நாரணன்  தரித்திருப்பது சரணாகத  ரஷணத்துக்கு !’ தன்னை அடைந்தாரை என்றென்றும் காக்கும் உலகரக்ஷகரே தாமரை போன்ற கண்களையுடையவரே சரணடைந்த என்னைக் காத்தருளும்.

Exquisitely ornate Emperuman standing tall at Halabedu

Tuesday, August 22, 2023

Sri Azhagiya Singar Jyeshtabishekam 2023 - அவுணனை பங்கமா * இரு கூறு செய்தவன்

Today 22.8.2023 is Avani Swathi  - there would be purappadu of Sri Azhagiya Singar on every Swathi nakshathiram.  Today being Jyeshtabishekam, there was no purappadu but grand thirumanjanam for Emperuman Azhagiyasingar. 





நாரஸிம்ஹ அவதாரம் உக்கிரமானது.  எம்பெருமான் அரக்கனை அழிக்க, தன பக்தனுக்கு நேர்ந்த கஷ்டங்களை கண்டு  சினம் கொண்டு,  மிக மிக உக்கிரகமாக அவதரிக்கும் போது காட்சியளித்த எம்பெருமான் ஹிரண்யனை  வதம்  முடித்த உடனே, அவதார நோக்கம் நிறைவேறி , சாந்த ஸ்வரூபியாக மாறினான். 

நம் திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே அவன் அழைத்து அருள் செய்து  வாழ்வளிப்பவன் - மூலவர் யோகநரசிம்மனாகவும் உத்சவர் தெள்ளியசிங்கமாக அழகு ஸ்வரூபனாக அருள் பாலிக்கும் ஸ்ரீஅழகியசிங்கன்.   திருமங்கை மன்னன் தமது திருமொழி - பதினோறாம் பத்து, முதல் திருமொழி, ஐந்தாம் பாசுரத்திலே :- 

அங்கோர் ஆளரியாய் * அவுணனை  பங்கமா * இரு கூறு செய்தவன்

மங்குல் மாமதி * வாங்கவே கொலோ ? பொங்கு மாகடல் * புலம்புகின்றதே

 

ப்ரஹிலாதாழ்வான் எங்குமுளன்  கண்ணன் என்று சொன்ன அந்த கணமே, அவ்விடத்திலேயே, அரக்கன் கை காட்டிய அந்த தூணில் இருந்தே  உக்கிர நரஸிம்ஹ மூர்த்தியாக  அவதரித்து, இரணியன் எனும் அசுரனை,  பங்கம் செய்து, இரு துண்டமாக   கிழித்த  எம்பெருமான், ஆகாசத்திலே விளங்குகின்ற சிறந்த சந்திரனை தன்னிடத்தில் இருந்து அபஹரித்ததனால்  அலைகளை ஆர்ப்பரித்து பொங்கிய கடல்  கோஷிக்கின்றது! - என பக்த ப்ரஹலாதனுக்கு அருளிய வ்ருத்தாந்தத்தை விவரிக்கின்றார்.  







Here are some photos from the morning purappadu  of day 3 of Sri Azhagiya Singar thavana uthsavam on 13.3.2023

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.8.2023. 

Monday, August 21, 2023

Panoramic view of Hardiwar : Hari-ki-pauri

அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும்.  'சப்த புரி' என்றழைக்கப்படும் இந்தியாவின் ஏழு புனிதமான நகரங்களின் ஹரித்வாரும் ஒன்றும். மேலும் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய உத்தராகாண்டின் பிற புண்ணியஸ்தலங்களுக்கும் ஹரித்வார் நுழைவாயிலாக விளங்குகிறது.  மிக புண்ணிய நதியான கங்கை மலையிலிருந்து தோன்றி இங்கே ஹரித்துவாரத்தில்  சமவெளியை தொடுகின்றது. 

 

"Ayodhyā Mathurā Māyā Kāśī Kāñcī Avantikā

Purī Dvārāvatī caiva saptaitā mokṣadāyikāḥ" – Garuḍa Purāṇa I XVI .14 

Ayodhya, Mathura, Haridwar, Kasi, Kanchi, Avantika and Dwaraka are the seven holy places… .. Haridwar is mentioned here as Maya !! – mayapuri.   The legendary King, Bhagiratha, the great-grandson of the Suryavanshi King Sagar through his unstinted  penance,  brought the river Ganges down in Satya Yuga, for the salvation of 60,000 of his ancestors from the curse of the saint Kapila. ,   Sriman Narayana left His footprint on the stone that is set in the upper wall of Har Ki Pauri, where the Holy Ganges touches it at all times.

Haridwar came under the rule of the Maurya Empire (322–185 BCE), and later under the Kushan Empire (c. 1st–3rd centuries).   Haridwar is holy, peaceful, scenic, beautiful Haridwar has Ganga flowing through. A great sight and a holy place for bathing – on the foothills of Himalayas, it has ashrams and a very pious ambience enveloping all over.

The ‘Panch Tirth’ or the five pilgrimages located within the periphery of Haridwar, are Gangadwara (Har Ki Pauri), Kushwart (Ghat), Kankhal, Bilwa Tirtha (Mansa Devi Temple) and Neel Parvat (Chandi Devi).  



A panoramic view of Har-ki-paudi and Ganges at Haridwar taken way back in 2012 with Canon Powershot As1100

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.8.2023