"சங்க நாதம் – தமிழர் மரபிலும் திருக்கோயில் வழிபாட்டிலும்!"
சிறப்பானது. ஸ்ரீமன் நாராயணனின் திருக்கரங்களில்
எப்போதும் வீற்றிருக்கும் சங்கத்தை ஆண்டாள் திரு பாஞ்சஜன்யம்
என விவரிக்கிறார். சைவ திருக்கோவில்களில்
சங்கு ஒலி வழிபாட்டு சமயங்களில் ஒலிக்கும்.
சங்க
நாதம், கோவில் மணி, காதுக்கினிய பஜனைகள் போன்ற இசையை கேட்டால், அவை நல்லதிர்ஷ்டத்தை
தரும். இந்த புகைப்படம் திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் திருக்கோவிலில் சில வருஷங்கள்
முன்னர் எடுக்கப்பட்டது.
வீளை குரலும் விளி சங்கு ஒலியும் விழவின் ஒலி ஓவா
மூளை தலை கொண்டு அடியார் ஏத்தப் பொடியா மதிள் எய்தார்
ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின்
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே.
இந்த
தேவாரப் பாடல் திருஞானசம்பந்தர் அருளிய பாடல். இதில் சங்கநாதம் பற்றிய ஒரு அழகான திருவிழாக்
காட்சி இடம்பெறுகிறது. வீளை (ஊதுகருவி) எழுப்பும் ஒலியும், விளிசங்கு முழங்கும் ஒலியும்,
திருவிழாவின் பிற ஒலிகளும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அடியார்கள் தலையைத் தாழ்த்தி இறைவனைப் போற்றிப்
புகழ்கின்றனர். திரிபுரங்களை எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமான் உறையும் திருத்தலம்
- திருப்பழனம்-
திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் என்பது திருநாவுக்கரசரால் தேவாரம்
பாடல் பெற்ற சிவத்தலம். சோழ நாடு காவிரி வடகரைத்
தலங்களில் அமைந்துள்ள தலம். இச்சிவாலயத்தின் மூலவர் ஆபத்சகாயர். தாயார் பெரிய
நாயகி. இச்சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில்
உள்ள திருப்பழனம் எனும் ஊரில் திருவையாறுக்குக்
கிழக்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றி அருள் பாலிக்கிறார்.
இவ்வூர்
அப்பூதி அடிகள் அவதரித்த புனிதமான இடமாகும்;
கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இஃது தஞ்சாவூர் அரண்மனை இலாகாவுக்குச்
சொந்தமான திருக்கோயிலாகும். திருவையாறு சப்தஸ்தானத்தில்
இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் : திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம்
7.11.2026

No comments:
Post a Comment