பருங்
கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச்
சாடிப் புக்கு*
ஒருங்க
மல்லரைக் கொன்று* பின் கஞ்சனை உதைத்தவன் உறை
கோயில்*
மிக
அழகான யானை வாகனங்கள் –
ஸ்ரீ
வண் புருடோத்தம பெருமாள் திருக்கோவில், நாங்கூர் திவ்யதேசங்கள்
பருத்த துதிக்கையையுடைய (குவலயா பீடமென்னும்) யானையினது தந்தங்களை பிடுங்கிக்
கொன்று, அந்த யானையின் பாகனையும் உயிர் தொலைத்திட்டு
உள்ளே நுழைந்து மல்லர்களை ஒன்றுசேர முடித்திட்டு, அதற்குப் பிறகு கம்ஸனை முடித்தருளிய
கண்ணபிரான் நித்யவாஸம் பண்ணுமிடம்; கருப்பஞ்சோலைகளின் இடையே ஓங்கி வளரானின்ற செந்நெற்
பயிர்கள் விளையப்பெற்ற கழனிகளில் நிறைந்திருக்கிற நடைவாவிகளினுடைய - "வண்புருடோத்தமம்" எனும் திருத்தலம்.
Photo taken on 24.3.2024
.jpg)
No comments:
Post a Comment