ஏழுமலை
வாசனுக்கு கோவிந்தம் போடுவோம்
-
ஏழேழு ஜென்மத்துக்கும் கோவிந்தம் போடுவோம் !!
இன்று புரட்டாசி சனிக்கிழமை.
திருமலையப்பனுக்கு உகந்த திருநாள்.
மலையப்பனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடும் மரபு பல இல்லங்களில் உள்ளது. பச்சரிசி
அரிசி மாவு, நாட்டு சர்க்கரை, நெய்,
வாசனை திரவியங்கள், ஏலக்காயுடன்கலந்து அகல்விளக்குப் போல் பசு நெய் இட்டு ஏற்றி மலையப்பன்
முன்வைத்து பக்தியுடன் விளக்கு ஏற்றி வணங்குவோம்.
பூதத்தாழ்வார் பாசுரத்தில் இயம்பியது போல - 'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை
இடுதிரியா' என பக்தியுடன் திருவேங்கடவனை வழிபட்டு - அந்த திருவிளக்கையே
திருமலையப்பனாக தரிசித்து - திருமலை பாசுரங்கள், பாமாலை, கோவிந்த நாமம் சொல்லி
- விளக்கு நிதானமாக எரியும் நேரம் முழுவதும், அந்த திருப்பதி
பாலாஜியே நம் இல்லம் வந்துள்ளதாக பரவசத்துடன்
- "கோவிந்தா! கோவிந்தா!" என்று கோஷம்
எழுப்பி எம்பெருமானை பற்றி அவனருள் பெறுவோம்.
20.9.2o25

No comments:
Post a Comment