To search this blog

Friday, September 5, 2025

திருதெற்றியம்பலத்தென் செங்கண் மாலே.

 

நாங்கூர் திவ்யதேசங்களில் அழகான ஒன்று - திருத்தெற்றியம்பலம்.  திருமங்கைமன்னன் தமது மங்களசாஸனத்தில் :

 

இலங்கிய  நான்மறையனைத்தும் அங்கமாறும்

ஏழிசையும் கேள்விகளும் எண் திக்கெங்கும்,

சிலம்பிய  நற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்

திருதெற்றியம்பலத்தென் செங்கண் மாலே.

 


- என உயர்த்தி பாடிய திருக்கோவில்.  நான்கு வேதங்களும், (வியாகரணம் முதலிய) ஆறு அங்கங்களும்,  ஸப்தஸ்வரங்களும், இதிஹாஸ புராணங்களும் - ஆகிய இவை யாவும்,  எட்டுத் திசைகளிலுமெல்லாம்  கோஷம் செய்யப்பெற்றதும் அளவற்ற செல்வம் விளங்கப் பெற்றதுமான நாங்கூர், திருத்தெற்றியம்பலத்துள் உறையும் என் செங்கண்மால் என்கிறார் கலியன்.

No comments:

Post a Comment