இதை விட ஓர் அற்புத சேவை இம்மண்ணுலகில் உண்டா ? - ஞாநியர்களும் மஹனீயர்கள் எல்லாம் அவனை அடையவும், தரிசனம் கண்டருளவும், வேண்டி நிற்க எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் ஆலையில் ஆனந்தமாக துயில் கொண்டான், அவனே கிருஷ்ணாவதாரத்தில் மாடுகள் மேய்த்தவன், வீடுகள் தோறும் வெண்ணை திருடியவன், ஆய்ச்சியர் விரட்டும்போது ஓடி ஒளிந்தவன் .. .. அவ்வெம்பெருமானை பெரியாழ்வார் தனது மனமார,
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா *
ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்*
பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!* - என மங்களாசாசனம்
செய்கிறார்.
இவ்வுலகம்
தோன்றிய காலத்திற்கு முன்னமிருந்தே, எண்ணிலடங்கா யுகங்களாக, உலகிலுள்ள அனைத்து உயிரினங்கள்
மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது, ஊழிப் பேரழிவின்
போது அவற்றையெல்லாம் தன் அழகிய வயிற்றினுள் வைத்து பாதுகாக்கின்ற பரம்பொருளே! சின்னஞ்சிறிய
ஆலிலை மேல் மெல்ல சயனித்து அறிதுயில் கொண்ட முழுமுதற் கடவுளாம் நம் ஸ்ரீமன் நாரணன் இங்கே 'பாற்கடலில் ஆதிசேஷனின்
மீது பாலகனாக சேவை' சாதிக்கின்றான்.
திருவல்லிக்கேணி
ருக்மணி ஹால் - திரு ஹேமாத்ரி பொம்மை கடையில் இன்று மாலை எடுக்கப்பட்ட படம்.
adiyen Srinivasa
dhasan
Mamandur
Veeravalli Srinivasan Sampathkumar
25.9.2023
No comments:
Post a Comment