To search this blog

Sunday, September 10, 2023

falling at the feet of Krishna ! - நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்



பெரியாழ்வார் எப்பொழுதும் எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனையே  தம் சித்தத்தில் கொண்டிருந்தவர்.  பூமாலையோடு பாமாலைகளையும் சூட்டியவர்.  உடலை வருத்தும் நோய்கள் பற்றி இதோ இங்கே அவரது பாசுரம். தம்மிடத்து எம்பெருமான் விரும்பிப் புகுந்ததனால் நோய்களை  அகலும்படி ஆழ்வார் கூறுதல்,  அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.   நமது உடம்பில் பல நோய்கள் ஒவ்வொன்றாக வரிசையாக வந்து சேருகின்றன. நெய்க்குடத்தில் எறும்புகள் வரிசையாக வந்து அப்பிக்கொள்வதுபோல நமது உடம்பிலும் நோய்கள் வரிசையாக அப்பிக் கொள்கின்றன.

 

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்போல்

நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்.

காலம்பெற உய்யப்போமின் மெய்க்கொண்டு வந்து

புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் பைக்கொண்ட

பாம்பணையோடும் பண்டன்று பட்டினம்காப்பே.

 



நெய் வைத்துள்ள குடத்தில் எப்படி எறும்புகள் ஏறுமோ, அப்படி உடம்பாகிய குடத்தில் எல்லா இடத்திலும் பரவி நிற்கும் நோய்களே! சீக்கிரமே விட்டு விலகி,பிழைத்துப் போங்கள்!  வேதத்திற்கு அதிபதியான எம்பெருமான், படங்களுடன் கூடிய பாம்பின் படுக்கையோடு கூட, உடம்பில் புகுந்து விருப்பத்தோடு படுத்திருக்கிறார். இது பழைய உடம்பு இல்லை. இந்த சரீர-ஆத்மா என்கிற பட்டினம் இப்பொழுது எம்பெருமானால் காக்கப்பட்டுள்ளது!

 


Some photos from Kannan purappadu at Thiruvallikkeni in the morning of today

 
adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar                        
8th Sept 2023. 

No comments:

Post a Comment