To search this blog

Sunday, October 16, 2022

Role of Saiva atheenangal in enriching Tamizh language - தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி

 Role of Saiva Atheenams in enriching Tamil language.

"தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு" தேசியக் கருத்தரங்கம் 2022 என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்வில் 20 ஆதீனங்களும் ஒரே மேடையில் தமிழ் வளர்ச்சிகளை பகிர்ந்துகொண்டனர்.   சென்ற மாதம் மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 'தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு' தேசிய கருத்தரங்கு, நடந்தது.   

பல்கலையின் தமிழ் பேராயம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.ஆர்.எம்., வளாக நிர்வாகி அருணாசலம் வரவேற்புரை வழங்கினார். எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தரும், பெரம்பலுார் எம்.பி.,யுமான பாரிவேந்தர் தலைமை ஏற்றார். கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலம் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீனம், ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆதீனங்கள் பங்கேற்றனர்.


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்

Video from the twitter page of - @tskrishnan :  https://twitter.com/i/status/1581449566385475584

No comments:

Post a Comment