To search this blog

Friday, July 1, 2022

Thiruvallikkeni Kodai uthsavam day 1 - 2022

திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு வருடம் முழுவதும் பல உத்சவங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.  கோடை கால முடிவில் நடைபெறும் உத்சவம் "கோடை உத்சவம்".  முன்னாளில் பெருமாள் மாலை வேளையில் வசந்த உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளி இளைப்பாறி, பின்பு வெய்யில் தணிந்ததும் திரும்புகால் புறப்பாடு கண்டு அருள்வார். 





இப்போது 'வசந்த உத்சவ பங்களா' இல்லாத காரணத்தால் 'பெருமாள் வேங்கடரங்கம் பிள்ளை தெரு வழியாக புறப்பாடு கண்டு அருளி, "கேட் ஆம்"  என்று அழைக்கப்படும் வீடுகள் வழியாக குளக்கரைக்கு திரும்பி புறப்பாடு கண்டு அருள்கிறார்.  இவ்வுத்சவத்தில் 'ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் தனி கேடயத்திலும், உபய நாச்சிமார் தனி கேடயத்திலும்"  எழுந்து அருள்வது விசேஷம்.  

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் மிக உயர்ந்தவன் -  பழமையான வேதங்களால் முழுமுதற்கடவுளாகச் சொல்லப்பட்டவனுமான பெருமாள்.  அவர் தேன் ஒழுகுகின்ற குளிர்ந்த திருத்துழாய்மாலையை அணிந்துள்ளவன்.   அத்தகைய சிறப்பு வாய்ந்த எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கரியம் செய்வதற்கு தக்க யோக்யதையுடையவர்கள் நித்ய ஸூரிகளேயன்றோ, ஸம்ஸாரிகளான நமக்கொல்லாம் அப்பெருமானைப் பணிந்து உய்தற்கு  வாய்ப்பு கிடைக்குமோ என ஐயுற வேண்டா !!  

மிக உயர்ந்த எம்பெருமானின் திருவடிகளை அடைந்து,  அவனுக்கு அத்தாணி சேவகம் செய்வது பற்றி பொய்கையாழ்வாரின்  முதல் திருவந்தாதி பாசுரம் இங்கே :  

இயல்வாக ஈன்துழாயான்  அடிக்கே செல்ல,

முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக

நீதியால்  ஓதி நியமங்களால்  பரவ,

ஆதியாய் நின்றார் அவர். 

தனது ஞானம், குணம், பரமபக்தி ஆகியவற்றால் உன்னத நிலையை அடைந்த நித்யஸூரிகள், எம்பெருமான் வசிக்கும் பரமபதத்தில், அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில்  நித்ய கைங்கர்யங்கள் செய்து வருவர் !  நம் போன்ற சாதாரணர்களும்,  எம்பெருமானை அடைய, அதற்கு தகுந்த, க்ரமங்களுடன்,  முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து, அந்த உயர்ந்த வேதங்களின் பொருளை  உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே  முற்பட்டு சித்தராய் நிற்கும் எம்பெருமானை தொழ நமக்கும் எல்லா நலனும் கிட்டும் என்கிறார் நம் பொய்கை ஆழ்வார்.  

The 7 day long Kodai uthsavam commenced at Thiruvallikkeni today -  here are some photos of Kodai uthsava purappadu of Sri Parthasarathi perumal taken on 29th June 2022.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.6.2022  





















1 comment: