மாடுகள் மேய்த்திடும் மாயக்கண்ணன் மதுர கானம் பொழியும் கண்ணபிரானை, பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதியில்:
கோவலனாய்
ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,-
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
என மணிநீர்நிற கண்ணபிரான் இடையனாய்ப் பிறந்து, ஆநிரைகள் கூட்டங்களை புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று மேய்த்தவனாயும், அரக்கர்கர்களை அழித்து - நல்லவர்களை ரட்சித்த குணங்களையும் பாராட்டுகிறார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் - ஸ்ரீபார்த்தசாரதியாக அருள் பாலிக்கும் திருவல்லிக்கேணி
மாட வீதிதனில், இன்று 29.6.2022 கோடை உத்சவ புறப்பாட்டில் - அருளிச்செயல் கோஷ்டியினரும், ஒரு அழகான பசுவும்.
No comments:
Post a Comment