To search this blog

Friday, July 1, 2022

Bonding of Cow & calf - தாய்நாடு கன்றேபோல் தண்டுழாயானடிக்கே

 பட்டி தொட்டிகளில் எல்லாம்  - மன்னன் படத்தில், ரஜனிகாந்த் நடிக்க, வாலி இயற்றிய பாடலை ஜேசுதாஸ் குரலில் ஒலித்தது.  இளையராஜா இசையில் அப்பாடலில் அனைவரும் கேட்டு இன்புற்றனர்.

அம்மா என்றழைக்காத உயிரில்லையே !  அம்மாவை வணங்காது உயர்வில்லையே!!

நேரில் நின்று பேசும் தெய்வம் !!  -  பெற்ற தாயன்றி வேறொன்று ஏது !

பாடலின் ஜீவநாதம் - தாய்ப்பாசம், அன்னையின் உயர்வு. 


ஸம்ஸாரத்திலே ஸமாஸ்ரயணீயர் பலர் உண்டென்று பிரமிக்க வேண்டா !!  ஸம்பந்த ஞானமுண்டாகவே, நெஞ்சானது அது தானே அவனை ஆராய்ந்து பற்றும்.   நமக்கு தீர்வானது தாமோதரன் தாள்களே ! - எம்பெருமானின் திருவடி நிலைகளே - திருவடி மன அழுக்கை நீக்கும்; வினையை அகற்றும்; செல்வம் சேர்க்கும்.  இது படிக்க புரிந்து கொள்ள சற்று கடினமாக உள்ளதல்லவா !    

உலகத்தில் மனிதகுலத்துக்கு மட்டுமல்ல மற்றெல்லா உயிரினங்களிடத்தும், உயர்வாக சொல்லப்படுவது தாய்மை - தாயின் உள்ளம், பாசம்.   தாய் உள்ளம் என்பது பரிவு காட்டுவது.  கொடும் விலங்குகளின் தாய் கூட தன் குட்டிகளிடம் பரிவாகத்தான் இருக்கும். துன்பம் என்று வரும்போது தாயிடம் ஓடுவது இயல்பாக அமைகிறது. 

Every animal – be the mammoth Elephant, fiery Tiger  or the lowly dog exhibit love to their newborns.  It is more pronounced and observed in Cows.   On birth the cow licks her new-born calf removing amniotic fluids, a behaviour that is stimulated by the presence of the amniotic fluids.  The first few hours after birth are regarded as important for the development of individual specific maternal bonds.  The mother and its calf develop a great bonding – which forebodes well not only for the survival of the new born calf but displays more intense exhibition of their passionate relationship.   

Man is cruel perhaps more because, he can think !  -  in  modern dairy farms calves are routinely separated from the cow within the first 24 hours after birth. This and other matters concerning herd size and cow and calf welfare are of increasing public concern. When the cow and calf are separated – both undergo pangs of separation and sometimes could die too.  The breeders, dairy-keepers do not care – no conscience at all.  



It is not as if only humans speak and communicate.  Researchers have recorded and analysed the ways cows communicate with their young, to translate the meanings behind the "moos". They identified two distinctly different call sounds that cows make to their calves, depending on whether they are nearby or separated. They also identified a call calves make to their mothers when they want to start suckling milk. The team from the University of Nottingham and Queen Mary University of London spent ten months digitally recording the cow sounds, then a year analysing them using computers. Just as human voices differ from each other, the researchers confirmed that cows make their own unique sounds.  "A calf certainly knows its mother from other cows, and when a calf blarts the mother knows it's her calf," said  a farmer in Lincolnshire. "If they are not distressed and they are calm they will moo fairly low to the calf, almost talking to their calf. "If they are distressed, in other words they have lost their calf or are separated from their calf, it's a much higher pitched moo. "She starts bleating louder and louder because she's distressed because he's away from her." 

Move away from all these, think of Emperuman, who is our only Saviour and in case you have doubts on why one is not able to fix intent on the lotus feet of Emperuman as Azhwargal practiced ! 

முதலாழ்வார்களில் பொய்கைப்பிரான் அருளிச்செய்தது முதல் திருவந்தாதி.  ஆழ்வார்கள் எண்ணம் போலே நமக்கு   பகவத் விஷயத்திலே மனம்  ஊன்றப் பெறவில்லையே, இதற்கு என்ன காரணம்? என ஆராயவே தேவையில்லை.   அவர்கள் மனஓட்டங்களை அடக்கி எம்பெருமானோடு தமக்குள்ள உறவை  உணர்ந்து,   வேறு எவற்றையும் யாவரையும்  பற்றாமலும்  அவ்வெம்பெருமானையே பற்றிக்கொண்டவர்கள்.   இப்படி சம்பந்த உணர்வு இல்லாதவர்களுக்கு   ஒருநாளும் எம்பெருமானைக் கிட்டுதல் ஸாத்யமன்று; அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் சுலபம் என்றாராயிற்று.  

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ*, ஞானத்

தெளிதாக நன்குணர்வார் சிந்தை, - எளிதாகத்

தாய்நாடு கன்றேபோல் தண்டுழாயானடிக்கே,

போய்நாடிக் கொள்ளும் புரிந்து.  

உள்ளத்தை மற்ற விஷயங்களில் மேய விடாமல் எவ்வித கலக்கமும் இல்லாமல் தெளிவுடன் எம்பெருமானிடத்திலே  செவ்வனே நிறுத்தி, பகவத்விஷய பக்தியாலே ‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி  நன்றாக  அறிபவர்களுடைய மனமானது,  ஆநிரைகள் பல இருக்கும் பெரிய பசுக்கூட்டத்தினிடையே கூட மிக எளிதாக தம்  தாயைத் தேடிக்கொண்டு கிட்டுகிற கன்றைப்போல, குளிர்ந்த திருத்துழாய் மாலையையணிந்த எம்பெருமானது திருவடிகளையே விரும்பி, தானே சென்று தேடிச்சேரும்.  - என அற்புத உரையளிக்கிறார் நம் பொய்கை ஆழ்வார்.  




Blessed are those living at Thiruvallikkeni divyadesam – the abode of Lord Parthasarathi.  Lord Krishna was the great shepherd who showed humans the way to lead life – He mingled with cows and cowherds, showing compassion to all living things.  He is no doubt the very purpose of life – the Rajamannar – King of Kings and owner of cattle which includes all animate lives in the Universe.  

Here are some photos of calf and cows of Triplicane, Sri Parthasarathi Emperuman taken on different occasions and His Rajamannar thirukolam seen with cow and calf. 

adiyen Srinivasadhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
26th    June 2022.
   

1 comment: