To search this blog

Friday, December 24, 2021

sleep! awakening ! - Praying Sreeman Narayana : "தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய !!"

Ever heard of – ‘l’avenir appartient à ceux qui se lèvent tôt’ !?!?.. ..  in my childhood, my mother used to say daily – ‘the future, and all good things’ belong to those who wake up early.   What you read is an exxpression created by Henry Gauthier-Villars, referring to the fact that since electricity was not very widespread at that time, those who rose with the sun had an advantage over others. 


நீங்கள் தினமும் எவ்வளவு நாழி உறங்குகிறீர்கள் ? - படுத்த உடனேயே உறக்கம் வருமா ? - எது போன்ற கனவுகள் காண்பீர்கள் !!  

The modern children are mostly sleep depraved – there is enough of distraction.  Gone are those days of school, play at grounds, back home, study for a while, dinner, milk and hitting the bed.  Even for the adults the days now are ‘extending work culture, pinging phones, Netflix / TV watch/ computer games’ and life stress points adding up.  Then came the pandemic, that changed the way people had been living.  Still not many created the right life style – to a large % of population, sleep became worser after the pandemic struck.   After almost 21 full months, we are used to ‘new normal’ – yet sleep is not perhaps normal.  When do you hit bed daily ~ how long and how well do you sleep !! ~ it is close to 11 pm as I post this and perhaps this is not good for health !!! 

Sleep is a naturally recurring state of mind and body, characterized by altered consciousness, relatively inhibited sensory activity, reduced muscle activity and inhibition of nearly all voluntary muscles during rapid eye movement (REM) sleep, and reduced interactions with surroundings.  Sleep is an important part of your daily routine—you spend about one-third of your time doing it.  Quality sleep – and getting enough of it at the right times -- is as essential to survival as food and water.   Sleep is important to a number of brain functions, including how nerve cells (neurons) communicate with each other.  In fact, your brain and body stay remarkably active while you sleep.   Everyone needs sleep, but its biological purpose remains a mystery.  Sleep affects almost every type of tissue and system in the body – from the brain, heart, and lungs to metabolism, immune function, mood, and disease resistance. Sleep is a complex and dynamic process that affects how you function in ways scientists are now beginning to understand.     

Certainly not any post on sleep, its depravity and ill-effects but more on awakening; not exactly the spiritual awakening, physical one too .. .. getting up early and praying Emperuman Sriman Narayana with Thiruppavai pasurams, the month being special, Margazhi.

 



இது மார்கழி ! - "திருப்பாவை மாதம்"  இன்று  24.12.2021 மார்கழியில் 9ம் நாள் - வெள்ளிக்கிழமை, மக நக்ஷத்திரம். ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை - பாவை நோன்பின் அற்புத சிறப்பை விளக்குவது.  கோதைப்பிராட்டி, வீடு வீடாக சென்று அதிகாலையில் தன தோழியினரை எழுப்புகின்றார்.   இன்றைய பாசுரம் "தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய !!" 

தூமணி மாடம்’  ஒரு அற்புத சொல்லாடல்.   தூமணி-தூயமணி என்பதன் மரூஉ.  தூய்மை சிறப்பானது, எந்த விதமான அந்நிய கலப்பும் இல்லாத தன்மையே  தூய்மை. புற அழுக்குகள் ஓட்டுவதால் ஒரு பொருளின் தூய்மை கெட்டுவிடாது. செம்பு கலக்காத தங்கம் அப்பழுக்குடன் இருந்தாலும் அதன் தூய்மை குறையாதிருக்கும். கங்கை, காவிரி போன்ற  புண்ணிய நதிகள்  மக்களால் அசுத்தபடுத்தப்பட்டாலும் அவை தனது புனிதத்தின் தூய்மையை இழப்பதில்லை.  

நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடியும் தூய்மை இந்தியா இயக்கத்தை தனது பேச்சின் மூலமும், நடவடிக்கைகளின் மூலமும் மக்களிடையே பரப்பி வருகிறார். வாரணாசியில் அவரே தூய்மைப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டார். வாரணாசியில் உள்ள அசிகாட் என்னுமிடத்தில் அவரே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை தூய்மையாக்கினார். இதில், அங்குள்ள மக்கள் பலரும் பங்கேற்றனர். சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அப்போது எடுத்துக் கூறியதோடு, சுகாதாரம் இல்லாமல் போனால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்றும், அவர்களை தங்களது இல்லங்களில் கழிப்பறைகளை அமைப்பது அவசியம் என்றும் கூறினார்.  மக்களின் பேராதரவு தூய்மை இந்தியா திட்டத்திற்கு கிடைத்துள்ளதால் இது மக்களின் இயக்கமாக மாறியுள்ளது. இந்தியாவை தூய்மைப்படுத்த மக்கள் திரளாக தங்கள் பகுதிகளை தூய்மைப்படுத்துகிறார்கள். தூய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்ட பின்னர் தெருக்களை சுத்தப்படுத்துவது, குப்பைகளை அகற்றுவது, சுத்தம் சுகாதாரத்தை மேற்கொண்டு, சுற்றுப்புற தூய்மையை காப்பது போன்றவற்றிற்கு தற்போது முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 

இதோ இங்கே ஆண்டாளின் பாசுரம்: 

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;

மாமீர்!  அவளை எழுப்பீரோ? உன் மகள்தான் -

ஊமையோ? அன்றிச் செவிடோ  அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

 



ஆண்டாள் இன்று எழுப்புவது தனது தோழி ! -  மாமான் மகளே- என உறவு பற்றி அழைக்கிறாள். ஸ்ரீவைணவ இல்லங்கள் அழகானவை - பக்தி மனம் கமழுமவை.  இங்கே :   தூமணி மாடம், சுற்றும் விளக்கு, மணம் கமழும் பஞ்சணை-  யாவும்  செல்வ வாழ்க்கையை விவரிக்க வந்தன.  அந்த அழகான திருமாளிகையில் பல சுற்றுக்கள் இருந்தன;  தாழ்வாரம், முற்றம், படிக்கட்டு, பால்கனி ..  எங்கெங்கும், எல்லாவற்றிலும் விளக்குகள் எரிந்துகொண்டு பிரகாசமாக இருக்கிறது.  

மார்கழி நோன்பு,  பாவை நோன்பு -  நோற்பதற்காக ஒவ்வோர் இல்லமாகச் சென்று இன்னொரு பெண் பிள்ளையை ஆண்டாள் எழுப்பும் திருப்பள்ளி எழுச்சி பாசுரம் இது.  அவ்வில்லத்தில் ஓர் பெண்பிள்ளை எந்த கவலையுமே இல்லாமல் ஆழ்ந்து  உறங்குகிறாள்.   அவள் தன்னைச் சொத்தாகவும் தனக்கு உரிமை உடையவனாக பெருமாளையும் கருதுகிறாள். அதனால் தன்னைக் கொண்டு போவது அவன் கடமை என்று அவள் கவலையின்றி உறங்குகிறாள்.  நாம் கவலை இல்லாமல் உறங்க  மாடமாளிகை, பஞ்சு மெத்தை, அமைதியான சூழ்நிலை என்பன தேவையில்லை !!  சிலர் சோம்பலில் நீண்ட நேரம் உறங்குவர்; சிலர் வேலை களைப்பில், சிலர் தூங்குவதே பழக்கமாக !!   அவ்வாறு நித்திரையில் கிடப்பவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான ஸ்ரீவைகுண்டமே நிலையானது என்பதை உணர வைக்க வேண்டும்.  அங்கவ்விடம் செல்ல, அந்த எம்பெருமான் பரமபத நாதனது  திருநாமங்களைச் திரும்ப திரும்ப உரக்க வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து  சொல்ல வேண்டும்.  

In our Sreevaishnava  philosophy, Emperuman is Supreme, the great benevolent Supreme master who takes care of us all.  He is one capable of ‘Yoga Nidhra’ – ie., providing care and comfort to all His followers, even when He is asleep.  Yoga nidra is a state of consciousness between waking and sleeping, like the "going-to-sleep" stage, typically induced by a guided meditation. 



                                 Sooner, the English New year 2022 will be born and from 5.1.2022, Andal Neeratta uthsavam is scheduled to commence.  Last year, there was purappadu from day 2 of the uthsavam.  6.1.2021 dawned beautifully as there was Andal thiruveethi purappadu .. .. pray that this year too at least from Andal Neeratta uthsavam, there would be regular thiruveethi purappadu and life as normal as it was in earlier years.  Reminiscing the glorious past, here are some photos from Sri Godhapiratti neeratta uthsavam of year 2014. 

Adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24th Dec 2021.

  

No comments:

Post a Comment