To search this blog

Friday, December 10, 2021

Manikka Vasagar @ Thirumylai

Today is Karthigai Sadayam and as I rushed towards Sri Madhava Perumal thirukovil in Thirumylai – was attracted by beautiful Nataraja at Sri Veerabhadreswarar temple.  The dancing Lord is not “Nataraja” but Manikka Vasagar  in Nataraja alankaram !  Carried away by the beauty of the alankaram and photo, I had earlier wrongly posted as Gnana sambanthar. !


Sambandar,   was a child prodigy who lived just 16 years. He composed an oeuvre of 16,000 hymns in complex meters, of which 383 (384) hymns with 4,181 stanzas have survived.  These narrate an intense loving devotion (bhakti) to Lord Shiva. The surviving compositions of Sambandar are preserved in the first three volumes of the Tirumurai.

Sambandar's image is found in almost all Shiva temples of Tamil Nadu. He is depicted as a dancing child or a young teen with his right forefinger pointing upwards, reflecting the legend where he credits Parvati-Shiva for what he has. 


இன்று திருமயிலை ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோவிலுக்கு செல்லுமுன்னர் அங்கே அமைந்துள்ள ஸ்ரீவீர பத்ரேஸ்வரர் திருக்கோவிலில் அலங்காரம் கவர்ந்தது.   பெரிய அழகான ஆடும் நடராஜப்பெருமாள் கொலு வீற்று இருந்தார்.  -  ஆணையோ இவர் நடராஜர் அல்ல !!  - மாணிக்கவாசகருக்கு  - தில்லை அம்பல நடராஜர் திருக்கோல அலங்காரம்.   


சம்பந்தர் எனும்   திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (தமிழில் அறிவுசேரர்)  - அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதல்  நால்வருள் ஒருவராவார்.  சைவநெறி தழைத்தோங்க பாடுபட்டவர்களில் தேவார  பங்களிப்பு பெரிதாகும். இவர்கள் தந்த பண்சுமந்த பாடல்கள் தோத்திரப் பாக்களாக உள்ளன. இவர்கள் பாடிய தலங்கள் திருமுறைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  தேவார மூவரில் இளம் வயதிலேயே தெய்வ அருள் பெற்று பாடல்களை இயற்றியவராகத் திருஞானசம்பந்தர் விளங்குகிறார்.  

சிவபாத இருதயர்க்கும் பகவதியாருக்கும் பிறந்த ஆளுடையப் பிள்ளை தந்தையோடு நீராட சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில் குளக்கரைக்கு சென்ற ஆளுடையப் பிள்ளை அங்கு தேவி பார்வதியின் கையால் ஞானப்பால் உண்டு ஞானசம்பந்தன் எனப் பெயர் பெற்றார். 'தோடுடைய செவியன்'என தனது முதல் பதிகத்தைப் பாடினார்.பின்பு பல தலங்களைப் பாடி பல அதிசயங்களை நிகழ்த்தி இறுதியாக  நல்லூர்  பெருமணம் எனும் ஆச்சாள் புரத்தில் திருமணக் கோலத்தில் தன் தாய்,தந்தை சுற்றத்தாருடன் சிவஜோதியில் கலந்தார்.  இவரது பாசுரங்களில் - ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ:(பண்: காந்தாரப்பஞ்சமம்; ராகம்: கேதாரகௌளை) - ஓர் அற்புத பாசுரம்.  :

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து

நினைமின், நாள்தொறும்; வஞ்சகம் அற்று

அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே. 

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும் திருக்கோவையாருமாகும். இவர் 9-ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார்.  

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. 

 

Thiruvallikkeni Srinivasan Sampathkumar
10th Dec 2021. 

No comments:

Post a Comment