Ammavaru Karthigai Brahmothsavam – Yanai
vahanam 2021.
@ Bairagi Mutt - Sri Prasanna Venkateswara swami gudi
திருமலை என்பது அற்புத திவ்யக்ஷேத்ரம் - திருமலை என்றால் அது உயர்ந்த ஏழுமலை திருவேங்கடமுடையான்,
கீழ்திருப்பதி கோவிந்தராஜர் மற்றும் திருச்சானூர்
ஸ்ரீபத்மாவதி தாயார் திருக்கோயில்களை உள்ளடக்கும். நமது சம்ப்ரதாயத்திலே பிராட்டிக்கு அற்புத இடமுண்டு. எம்பெருமானுடன் எப்போதும்கூடஇருப்பவர்; பக்தர்களுக்கு
புருஷகாரமாக அனுக்கிரஹம் பண்ணுபவள். . 'அகலகில்லேன்
இறையும் என்று" பெரியபிராட்டியார் நித்தியவாசம்
செய்கின்ற திருமார்பினை உடையவன் திருவேங்கடமுடையான்.
For a visitor – Sowcarpet area offers so many – marriage choultries, hotels,
food joints, Gold and silver jewellery, traditional shops, fruit shops,
wholesale market for garments, toys, electricals, electronics and more ..From
NSC Bose Road, Flower bazaar PS to Elephant gate area, there are so many narrow
lanes and bylanes in what is known as Sowcarpet, a sprawling neighbourhood, far
different than the other parts of North Madras. Here once existed
Kothawalchavadi, the wholesale vegetable market
There are so many temples too - Of the many temples in that area which one could walk and have darshan attending marriage in those choultries would include : Chennai PattnamKovil (Perumal Kovil and Sivan kovil adjoining), KandhaKottam, Ekambareswarar, Bairagi Mutt Balaji temple, Kalikambal temple, ChennaMalleeswarar, PavazhakkarantheruKrishnarKovil, many famous pillaiyar temples, Sri VaradharajaManavalaMamunigal temple, Mulla sahib st Sri Ranganathar temple and more .. …
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
சுவாமி நம்மாழ்வார் திருவாய்மொழி பாசுரம் :திருமலை
எனும் திவ்யத்திருப்பதி எம்பெருமான் திருவேங்கடமுடையான் மஹிமைபற்றி : எம்பெருமான் திருமலைவாழ் ஏழுமலையான் - பெரியபிராட்டியார் சற்றுநேரமும் விட்டுப்பிரியேன்
என்று நித்திய வாசம் செய்கின்ற திருமார்பினையுடையவன் ! ஒப்பில்லாதபுகழையுடையவன்! மூன்று
உலகங்களையும் தனதாக உடையவன்; நம் எல்லாரையும் ஆள்கின்றவன். ஒப்பில்லாத நித்தியசூரிகளும்
முனிவர்கள் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவன்
திவ்யசூரி - அத்தகைய எம்பெருமானை விளித்து
– ஸ்வாமி நம்மாழ்வார், வேறுகதி ஒன்றும் இல்லாத
அடியேன் உனது திருவடியிலே பொருந்தி அடைந்தேன் என்கிறார்.
ஆழ்வார் ஆசார்யர் திருவடிகளை தொழுது, எம்பெருமானையே
பற்றி அவனையே சேர்வோம். எம்பெருமான் உறையுமிடங்கள்
சென்று தரிசித்து புண்ணியம் பெறுவோம்.
Lord Srinivasa is likened to the exceptionally shining divine lamp – He is primordial; His consort Padmavathi ammavaru [Goddess Padmavathi – Sri Alarmelvallithayar] resides at Thiruchanur.The sacred and most reverred temple of Sri Venkateswara is located on the seventh peak – Venkatachala hill of Tirumala. The Lord stands tall as bestower of all boons and lakhs of people reach here to have a glimpse – a few seconds darshan of the Lord. This beautiful temple in its present form owes a lot to the works of the greatest Vaishnava Acarya Swami Ramanujar. To us ThirumalaThirupathi encompasses – the holy shrine atop the hills of Thirumala, KizhThirupathiGovindaraja swami and Thiruchanoor Sri Padmavathi thayar.
Tirukkadavuru, AlarmelMangapuram, Tirusukanur, Vadirajapuram, Tiruchhikkanur, Tiruchanur, Ammavaruthirukovil, call it by any name, goddess Padmavathi is always at the behest of her beloved devotees. The sacred pilgrim town of Tiruchanoor is the abode of the “Lotus-born” goddess Padmavathi, who is also known by the name of AlarmelMangai, and hence Alarmelmangapuram. Now is the time for Thirukarthigai Brahmothsavam for Sri Padmavathi thayarammavaru at holy Thiruchanoor and at various places including the Bairagi Mutt at Sowcarpet. On day 4 evening (4.12.2021) it was Yanaivahanam for Ammavaru.
It is stated that more
than a couple centuries ago, here lived a devotee sanyasi by name Laldas,
from some distant part of Northern India (some unsubstantiated reference in web
to Lahore !) who medidated on Tirupathi Balaji everyday. With
divine interference, he installed the idol of Lord Venkateswara in standing
posture and this temple of Prasanna Venkatesa Perumal in General Muthiah Street
is popularly known as ‘Bairagi Mutt Balaji Mandir’.
The Mutt of Laldas reportedly more than 400 years old was a choultry with
accommodation for yatris. Decades later, idols of Thiruvenkadavan with Sridevi
& Bhoodevi were found in the garden and they too were installed in the
sanctum sanctorum.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
6th Dec 2021.
No comments:
Post a Comment