To search this blog

Tuesday, September 8, 2020

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் - மிகுநர் இலன் - Kaisika Dwadasi 2016

As part of the phase-wise unlocking of activities, the ministry of health and family welfare issued the standard operating procedures (SOPs) for partial reopening of secondary and senior secondary schools and preventive measures to contain spread of COVID-19 in skill or entrepreneurship training institutions, higher educational institutions conducting doctoral courses and post graduate studies on Tuesday. The SOPs are based on the activities permitted by the ministry of home affairs under “Unlock 4”, the order for which was issued on August 29. 


The first batch of the Sputnik V vaccine against Covid-19, developed by Russia’s Gamaleya National Research Center of Epidemiology and Microbiology and the Russian Direct Investment Fund (RDIF) has been released into civil circulation, regional deliveries are planned in the nearest future, the Russian health ministry informs. President Donald Trump has accused the Biden campaign of politicising the search for a Covid-19 vaccine, and said Democratic vice presidential candidate Kamala Harris “will never be president.” Trump insisted that a vaccine may be ready “even before a very special date”, referring to November 3, the Election Day. “So now they’re saying, ‘Wow, Trump has pulled this off. Okay, let’s disparage the vaccine’,” he said, adding, “That’s so bad for this country.” 

WE pray to our Emperuman, the eternal Saviour Sriman Narayana that the dreaded Corona virus is sooner conquered and Covid becomes a thing of the past – humanity is able to resume its activities in normal manner as they did prior to the dawn of 2020. 

Of the pasurams, Swami Nammalwar’s Thiruvaimozhi is hailed as ‘Dravida Veda sagaram’.  In the first decad – Maran, Sadagopan acclaims Emperuman Sriman Narayana as the only matchless great Lord who  cleanses the heart, makes it blossom and grow, the One who is  beyond the realm of thought, feeling and senses, the One who is pure consciousness, all goodness, and eternal. HE  has no peer or superior, He pervades  all our souls. 




ஒப்பிலார் இல்லா உயர்வானவன் எவன் - நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே ! .. .. எம்பெருமானின் பெருமைகளை போற்றி சீராட்டும் ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி,  தமிழ் வேதம் எனப் போற்றப்படுகிறது.   இதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன.   பரன்’ ஆகிய இறைவனைத் தன்னுடைய அன்பு என்கிற அங்குசத்தால் கட்டியவர் மாறன். ஆகவே, அவரைப் ‘பராங்குசன்’ என படித்துள்ளேன்.   எம்பெருமான் மீது அன்புகொண்ட பெண்ணாகத் தன்னை எண்ணிக்கொண்டு பல அருமையான பாடல்களைப் பாடியதால் ‘பராங்குச நாயகி’ என்றும்  ஆழ்வாருக்கு பெயர்.  தொண்டர்க்கு அமுதமாகவும், அனைவருக்கும் ஆனந்தத்தை அளிப்பதாகவும், ஆயிரக்கணக்கான சாகைகளை உடைய உபநிஷ்த்துக்களின் திரட்சியாகவும் இருக்கும் நம்மாழ்வாருடைய அருள்வாக்கான தமிழ் வேதக் கடலை அடியேன் ஸேவிக்கிறேன்" என்கிறார், வைணவ குருபரம்பரையின் முதல் ஆச்சார்யரான நாதமுனிகள்.  

இவ்வாறாக ஆழ்வார்களால் பூஜிக்கப்படும்  ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் எல்லாரையும் விட உயர்ந்தவன், அனைத்துக் கல்யாண குணங்களையும் உடையவன்,   ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஸம்ஸாரம் ஆகிய இரு உலகங்களுக்கும் தலைவன், வேதத்தாலே முழுவதுமாகக் காட்டப்பட்டவன், எல்லாவிடத்திலும் வ்யாபித்திருப்பவன்.  அந்த திவ்ய ஸ்வரூபமானது சித்து அசித்து என்கிற இரண்டு தத்துவங்களிற்காட்டிலும் விலக்ஷணமாயிருக்கிறபடியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.  மிகுநரைஇலன்= மிகுநர் என்றால் தன்னைப்பார்க்கிலும் மேற்ப்பட்டவர்; எம்பெருமான்தானே ஸர்வஸ்மாத்பரனாகையாலே அவனுக்கு மேற்பட்டார் ஆருமில்லையென்கிறது. அவனுக்கு ஸமானமானவர்களே இல்லை என்ற முடித்தபின்பு, அவன் மட்டுமே மிக உயர்ந்தவனாக எங்கும் வியாபித்துள்ளான்.   

மனன  கமலமற மலர்மிசை எழுதரும்

மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்

இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்

இனனிலன், எனனுயிர், மிகுநரையிலனே. 

மனனகம் எனும் மனத்திலேயிருக்கிற கெட்டவையான காமம் கோபம் முதலிய  தீக்குணங்கள் கழிய அதனால் மலர்ந்ததாகி மேலே மேலே விருத்தியடைகிற மாநஸ ஜ்ஞான மென்கிற யோக உணர்ச்சியால்,  அளப்பரியனும், மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் வெளியிந்திரியங்களின் ஞானத்தினால் அளவிடப்படாத’வனுமாய்  பரிபூர்ண ஞானானந்த ஸ்வரூபியும், எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகாலம் என்ற மூன்று காலங்களிலும்  ஒப்பு இல்லாதவனும், தனக்கு சமமாவானவர் கூட இல்லாததால் என்றென்றும் மேற்பட்டவரில்லாதவனுமாயிருப்பவன்  எனக்கு நல்ல ஆத்மா - அவரே நாம் புகழும் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் என்பது ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி முதல் பத்து முதல் திருவாய்மொழி பாசுரத்தில் ஒன்று. 

பாசுர விளக்கம் : அற்புத சம்பிரதாய களஞ்சியம் - திராவிடவேதா இணையம்.  கச்சி ஸ்வாமிகள் ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை. 

Here are some photos of Sri Parthasarathi Perumal purappadu on the occasion of Kaisika Dwadasi on 11.12.2016.  


adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
08.09.2020



Add caption





 

1 comment: