Today 13.4.2019 is Sri Rama
Navami ~ and in the evening there would be purappadu of Sri Rama in Hanumantha
vahanam at many divyadesams. Here is a
divyadesa perumal on Hanumantha vahanam .. .. I have recently posted about this divyadesam ‘Thiruvanparisaram’
– as could be seen from the photos, the vahanams here are much different
that what we see in Thondamandalam.
ஆழ்வார்களால் மங்களாசாசனம்
செய்யப் பெற்ற 108 திவ்யதேசங்களில் 13 திவ்யதேசங்கள் மலை நாட்டு
திருப்பதிகள் - இவை அனைத்துமே கேரள மாநிலத்தில்
இருப்பதாக நம்மில் பலரும் நினைத்துள்ளோம். திருவண்பரிசாரம் எனப்படும் திவ்யதேசம் மலை
நாட்டு திருப்பதிகளில் ஒன்று. சுவாமி நம்மாழ்வார்
தமது திருவாய்மொழியில் : எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழியில் இத்தலத்தை மங்களாசாசனம்
செய்துள்ளார். :
வருவார்
செல்வார் வண்பரிசாரத்து இருந்த * என்
திருவாழ்மார்வற்கு
என் திறம் சொல்லார் செய்வது என் ? *
உருவார்
சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு *
ஒரு
பாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே * -
என
பாடப்பெற்ற பெருமாளை சேவித்து இருக்கிறீர்களா !!
- பலர் கன்னியாகுமரி சென்று
இருப்பீர். திருவண்பரிசாரம் எனும் இத்திவ்யதேசம் மலைநாட்டுத் திருப்பதி ஆக அறியபட்டாலும் நம் தமிழகத்திலேயே உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மார்க்கத்தில் - முப்பந்தல் எனும்
இடத்தில உள்ள நூற்றுக்கணக்கான விசை காற்றாடிகளை [wind
electricity generators] கடந்து செல்லும் வழியில் நாகர்கோவிலுக்கு மிக அருகாமையில்
இந்த திவ்ய தேசம் உள்ளது.
கோவில் வாசலில் பெரிய
குளம் ஒன்று உள்ளது. தொண்டை மண்டல கோவில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு
உள்ளது இந்த கோவில். கோவில் முகப்பு கேரள பாணியில் உள்ளது. சில கோவில்களில் பெரிய கதவு
முழுமையாக திறக்கப்படுவதில்லை. கதவுக்குள் உள்ள சிறிய கதவு தான் திறந்து இருக்கும்.
கோவில் மலையாள போத்திகளால் நிர்வகிக்கப்படுகிறது. நாங்கள் சென்ற சமயம் அவர் அழகாக
திருவாய்மொழி பாடலை உச்சரித்து சேவை பண்ணி வைத்தார்.
மூலவர் : சுமார்
ஒன்பது அடி உயரமுள்ள மூலவர் கடுசக்கரை எனும் கடுகு மற்றும் வெல்லத்தில் செய்யப்பட்ட
மூலவர் என்பதால் திருமஞ்சனம் கிடையாதாம். அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும்
"திருக்குறளப்பன்" - ஸ்ரீ லக்ஷ்மி பகவானின் திருமார்பில் நித்ய வாசம் செய்வதால்
'திருவாழ்மார்வன்" என திருநாமம்.
தாயார் : கமலவல்லி நாச்சியார். பெருமாள் மார்பில் வாசம் செய்வதால் தாயாருக்கு தனி சன்னதி
இல்லை. சுவாமி நம்மாழ்வாருக்கு சன்னதி உள்ளது. இராமர் சன்னதியில் குலசேகர ஆழ்வாரும்
எழுந்து அருளி உள்ளார்.
திருவண்பரிசாரம் - திருப்பதிசாரம்
என இங்கே அழைக்கப்படுகிறது. இது நாகர்கோவிலில் இருந்து சுமார் 5 கி மீ தொலைவில்
உள்ளது. சுசீந்தரம் இங்கிருந்து செல்ல முடியும். நம்மாழ்வாரின் தாயார் உடயநங்கை
அவதரித்த தலம் இது. இங்கே உடைய நங்கை விரதம் இருந்து, வைகாசி விசாகத்தில் நம்மாழ்வார்
அவதரித்து திருக்குருகூர் புளியமரத்தில் யோகத்தில் அமர்ந்தார்.
The photo
at the start is that of ‘Thiruvazh marban’ of Thirupathisaram i.e., Thiruvanparisaram – the divyadesam. There is a huge tank
in front of the temple. The temple is in Kerala style of
architecture. Though it has a big door, a smaller door only was found
open at the time of our visit. Nammazhwaar has sung about this Lord in Thiruvaimozhi
{8-3-7 (3475)}. Udaya Nangai, mother of Swami Nammazhwaar hailed from
this place and it is believed that Udaya Nangai underwent 41 days penance
before the Lord here and conceived Nammazhwaar. The idol of the chief deity is
9 feet tall and made specially of Katusarkara Yogam (Mustard and Jaggery
paste). There will be no thirumanjanam for the moolavar for this
reason. There are paintings on the walls inside.
அடியேன்
ஸ்ரீனிவாச தாசன். Srinivasan
Sampathkumar
13th Apr 2019.
Pic credit : my
colleague Mr V Thiruvambalam who hails from this place. Special thanks to
Mr Thiruvazhi Velayutham Pillai and Mr Sundar.
In the present era of WA, FB live, Instagram,
there are so many photos on the web – every purappadu of Thiruvallikkeni,
Thirukachi, Thiruvarangam, Thirumalai get uploaded so much – there are some
divyadesam of which there are not much photos.
Thiruvanparisaram too does not have many !
Swami Nammalwar !!
No comments:
Post a Comment