To search this blog

Friday, July 7, 2017

Yoga Narasimhar Thirukolam - Sri Thelliya Singar Brahmothsavam day 5 2017

Sri Azhagiya Singar – Yoga Narasimhar Thirukolam – Day 5
During Brahmothsavam at Thiruvallikkeni,  before evening purappadu there will be ‘Pathi Ulavuthal’ whence Perumal beautifully decorated in various postures is  taken around the path leading to the Vahana Mantap.  On 5th day of Sri Azhagiya Singar Brahmothsavam today (7th July 2017), it is the very special – Yoga Narasimhar Thirukolam – Uthsavar Sri Azhagiya Singar resembling the Moolavar as ‘Yoga Narasimhar’.


ஸ்ரீ வைஷ்ணவ திருத்தலங்களில் பத்தி உலாவுதல் மிகவும் விசேஷம்.  பிரம்மோத்சவ புறப்பாட்டின் முன்பு பெருமாளை வாகன மண்டபத்துக்கு ஸ்ரீ பாதம் தாங்கிகள் மிக அழகாக ஏளப்பண்ணுவர் .  பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாற்றுப்படியில் அற்ப்புதமாக சேவை சாதிப்பார்.   ஐந்தாம் நாள் ஆன இன்று மிகவும் விசேஷம் இன்று தெள்ளியசிங்கருக்கு  'யோகா நரசிம்ஹர்"  சாற்றுப்படி.

ஸ்ரீநரசிம்ம அவதாரம் பக்தர்களுக்கு உதவின ஒரு திருவவதாரம். ஸ்வாமி நம்மாழ்வார்  ப்ரஹ்லாதாழ்வானுக்கு  கூப்பிட்ட குரலுக்கு அளந்திட்ட தூணிலே நரசிங்கமாய் வந்து தோன்றி உதவியருளின பெருமான் தனக்கு  உதவுகின்றிலனேயென்று பெண்பிள்ளை வருந்துவதாகத் திருத்தாய் சொல்லுகிறாள்.  திருவாய்மொழி பாசுரத்தில்ஆழவார் :  **ஆடியாடி அகம்கரைந்துஇசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கிஎங்கும் நாடிநாடி நரசிங்காவென்று.... .. .. **



திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் நரசிம்ஹர் மேற்கு நோக்கி யோகாசனத்தில் பிணி தீர்க்கும் பெருமாளாக சேவை சாதிக்கிறார்.  இப்பெருமாளுக்கு தனி த்வஜஸ்தம்பம்  ~பிரம்மோத்சவம்  உண்டு.  இன்று அழகிய சிங்கர் உத்சவர் மூலவரைப் போன்று 'சங்கு சக்கரங்களுடன் யோக நரசிம்ஹர் சாற்றுப்படியில் சேவை  சாதித்தார்.

சில நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

07.07.2017 @ 8.00 pm.






No comments:

Post a Comment