Sri
Vaishnavam and Vaishnavaite culture dates back to centuries handed over to
us through many generations by our Acharyars. The collection of songs by Azhwars were
organised by Sri Nathamunigal. The followers of Sri Vaishnavam worship Lord Mahavishnu in his Supreme form as
Sriman Narayana and do service to all other srivaishnavaites.
Worshipping
at temples and doing kainkaryam at temples, especially in the Divyadesams
(those temples on which Azhwars have sung hymns) is of great significance.
Blessed are those who live in the punya bhoomi where Lord performed his
leelas thousands of years ago and places visited by Azhwaars and Acharyans . There
are many divyadesams in the vicinity of Tirunelveli also known as Nellai, an
ancient city with rich cultural heritage. This place is located on the
western side of Tamirabarani river and is known for its tamil literature.
Tamirabarani is known as “van poru nal” in divya prabandham.
This river originates from the famous Agastyar koodam peak in the hills
of Western Ghats and winds its way to the sea near punnaikayal.
It provides water for irrigation and the belt is rich with paddy and
plantain crops. From Nellai, one can visit the divyadesams of ‘Nava
Tirupathi’. The nava thirupathi divyadesams are located on either side of
Thamarabarani river as one travels towards Thiruchendur.
Tirunelveli
is in fact a twin city – the other now being called Palayamkottai situate on
the east bank of river Tamirabarani. This
place had been ruled at different times by the Early Pandyas, the Medieval and
Later Cholas, the later Pandyas, the Ma'bar and Tirunelveli sultanates, the
Vijayanagar Empire, the Madurai Nayaks, Chanda Sahib, the Carnatic kingdom and
the British. The Poligar War, involving Palaiyakkarars led by Veerapandiya Kattabomman
and forces of the British East India Company, was waged on the city's outskirts
from 1797 to 1801. Tirunelveli has a number of historical monuments, the
Nellaiappar Temple being the most prominent.
While
browsing read an article in Malaimalar about Sri Veerraghava Perumal temple,
not Thiruevvul, more popularly Thiruvallur but an ancient temple in Tirunelveli. Here is the same reproduced from the Tamil
newspaper.
நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்தில்
இருந்தும், பழைய பஸ்நிலையத்தில் இருந்தும் நடந்துசெல்லும் தொலைவில் வீரராகவபுரம் என்ற
இடத்தில் மிகவும் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தக் கோவில்.
பொன்திணிந்த புனல்பெருகும்
பொருநையாற்றங்கரையில் திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி திருநகரம் அமைந்துள்ளது.
பண்டைக்காலத்தில் இந்தப்பகுதியை தலைநகராக கொண்டு, சந்திரவம்சஅரசரான கிருஷ்ணவர்மா என்ற
மன்னன் செங்கோலோச்சி வந்தான். அவன் சமயபொதுவுடைமை கொண்டபண்பாளன். ஆகையால் அந்தமன்னன்,
செந்நிறமேனியனான சிவபெருமானுக்கும், அருமறை முதல்வனாம் திருமாலுக்கும் பாரபட்சம் இன்றி
திருக்கோவில்களை எழுப்பினான். ‘சிறப்பொடு பூசனை’ என்ற வான்புகழ் கொண்ட வள்ளுவபெருந்தகையின்
வாக்கிற்கிணங்க, தினவழிபாடு, சிறப்புவழிபாடு (நித்ய, நைமித்யவழிபாடு) முதலியவற்றை,
ஏழிசைபாடல் ஆடலோடு சிறப்புற நடத்திவந்தான்.
அல்லும், பகலும் மன்னன்
ஆலயத்திருப்பணியில் ஈடுபட்டு இருப்பதை கண்ட அண்டைநாட்டுமன்னன், இந்தத் தருணத்தை பயன்படுத்தி
கிருஷ்ணவர்மா ஆண்ட நாட்டின்மீது படையெடுத்துவந்தான்.அண்டை நாட்டுமன்னனின் யானைப்படை,
குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை அனைத்தும் தன்நாட்டை சூழ்ந்திருப்பதை அறிந்த மன்னன்
அதிர்ச்சியுற்றான். ஆற்றல்மிக்க அந்தப்படையோடு போரிடுவதில் அர்த்தம்இல்லை என்று உணர்ந்தான்.
எனவே தனது அரண்மனையில் கோவில்கொண்டிருக்கும், தான் நித்தமும் வழிபடும் வரதராஜப்பெருமாளை
வழிபட முன்வந்தான். ஆலயத்தின் உள்ளே இருந்தபடி இறைவனின் நாமத்தை இடைவிடாது ஜெபித்தபடி
தியானத்தில்ஆழ்ந்தான்.
தனது பக்தனின் வேண்டுதலுக்கு
மனமிறங்கிய வரதராஜபெருமாள், கிருஷ்ணவர்மாவுக்கு திருவருள்புரிய சித்தம் கொண்டார். பாற்கடலில்
பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனே, கிருஷ்ணவர்மாவின் தோற்றத்திற்கு மாறினார். பின்னர்
அமைச்சர்களையும், படைத்தளபதிகளையும் ஒன்றுதிரட்டி, பகையரனை எதிர்த்து போர்புரிந்தார்.
இறைவனின் படையை எதிர்த்து போரிட்டு வெற்றிகொள்வார் உண்டோ?..அண்டைநாட்டு மன்னன் பெரும்படையுடன்
வந்தும் தோல்வியைத்தழுவினான்.
வாகைசூடிய வள்ளலான
வரதராஜப்பெருமாள், கிருஷ்ணவர்மாவுக்கு அருளைப் பொழியும் “வீரராகவப்பெருமாளாகக்’ காட்சிகொடுத்தார். தனக்காக
இறைவனே வந்துபோரிட்டதை எண்ணி மன்னன் அகமகிழ்ந்தான். பின்னர் மன்னனின் வேண்டுகோளுக்கு
இணங்க, திருமால் அர்ச்சாவதாரமூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார் என்பது வரலாறு.
மன்னன் கிருஷ்ணவர்மா
தாமிரபரணி ஆற்றங்கரையில் கோபாலதீர்த்த கட்டத்துக் கண்மையில் வீரராகவபுரம் என்ற தீர்த்தகட்டத்தையும்,
வீரராகவபுரம் என்ற சிற்றூரையும் உருவாக்கினான். அந்த ஊரின்நடுவே அருள்மிகுவீரராகவப்பெருமாளை
பிரதிஷ்டை செய்தான். தனது அரண்மனையில் எழுந்தருளிய வரதராஜப்பெருமாளை உற்சவமூர்த்தியாக
எழுந்தருளசெய்து, வழிபாடு நடத்திவந்தான். அதன்பின் அவன்நாடு எல்லாபேறுகளையும்பெற்றுசீரோடும்,
சிறப்போடும் விளங்கியது.
நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்தில்
இருந்தும், பழையபஸ்நிலையத்தில் இருந்தும் நடந்துசெல்லும் தொலைவில் வீரராகவபுரம் என்றஇடத்தில்
மிகவும் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தக்கோவில். இத்தலத்து இறைவனின் பெயர் வீரராகவப்பெருமாள்.
இறைவியின் திருநாமம் வேதவல்லி தாயார் என்பதாகும். பெருந்தேவி தாயார் என்றபெயரில் மற்றொரு
தாயாரும் உள்ளார். இருவருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன. இதுதவிர சக்கரத்தாழ்வார்,
ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் தனித்தனிசன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. கர்நாடகசங்கீத மும்மூர்த்திகளில்
ஒருவரான முத்துசாமிதீட்சிதர், இத்தலத்து இறைவன்மீது சாரங்கா-ராகத்தில் அமைந்த “வரதராஜம்
உபாஸ்மஹே’ என்கிற பாடலை இயற்றியுள்ளார்.
இந்தக் கோவிலில் தினமும்
நான்குகால பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரைமாதம் பத்துநாட்கள் நடைபெறும் பிரமோற்சவம்
இங்கு வெகுசிறப்பாக நடைபெறும். நெல்லைசந்திப்பில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள்
அமைந்துள்ளன.
இந்தக்கோவிலில் உள்ள
சக்கரத்தாழ்வாருக்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருநாள் அன்று தங்ககவசம் அணிவித்து
சிறப்புவழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொருஆண்டும் கார்த்திகைமாதம் திருக்கார்த்திகைதினத்தன்று
சுதர்சன ஜெயந்திவருகிறது. அதாவது அன்றுதான் சக்கரத்தாழ்வாரின் பிறந்தநாள் ஆகும். எனவே
அன்று ஒருநாள் மட்டும் இங்குள்ள சக்கரத்தாழ்வாருக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்புபூஜைகள்
செய்யப்படுகிறது. அன்றையதினம் சுதர்சனபெருமாளை வழிபடுவது சிறப்புவாய்ந்ததாகும். தமிழகத்திலேயே
மூலவரான சக்கரத்தாழ்வாருக்கு தங்ககவசம் இருப்பது, இந்த கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment