To search this blog

Sunday, February 12, 2017

Thirumazhisai Aazhwaar Sarrumurai ~ Prasadam to his Acharyan - 2017


தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.
என நம் ஆசார்யரான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள்  இந்நாள். தை மாதத்தில் மக  நக்ஷத்திரத்தில், , விஷ்ணுவானவர் தன் திருக்கையில் ஏந்தியுள்ள திவ்ய ஆயுதமான சக்கரத்தின் அம்சமாக, பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக மஹீசாரபுரம் என்னும் திவ்யக்ஷேத்திரத்தில் திருமழிசைப்பிரான் அவதரித்தார்.



திருமழிசை ஆழ்வார்   இவ்வுலகத்தில்   இருந்தது 4700 ஆண்டுகள்.  அதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக  வாழ்ந்திருக்கிறார் என்று வைணவ ஆசாரியர்கள் அருளிச்செய்த "பன்னீராயிரப்படி" வியாக்யானம் தெரிவிக்கிறது.   தனது காலத்திலே, ஆழ்வார்  சமணம், பௌத்தம், சைவம் என பல்வேறு சமயங்களையும் கற்று, அந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள் ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார். 

"சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச் சங்கரனார்
ஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்" என்று உரைத்தார்.

சைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப் போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல், பின்னர் பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, எம்பெருமானே சிறந்த தெய்வம் என்று உணர்த்தப்பெற்று, ஸ்ரீ வைஷ்ணவரானார் .

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 -  நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை "துய்ய மதி பெற்ற" என ஸ்ரீமணவாளமாமுனிகள் கொண்டாடுகிறார். 

இன்று இவரது சாற்று முறை மஹோத்சவத்தில் - திருவல்லிக்கேணியிலே - ஆழ்வார்  ஸ்ரீ தேவப்பெருமாளுடன் புறப்பாடு கண்டு அருளினார்.  வீதியில் இராமானுச நூற்றந்தாதி சேவிக்கப்பெற்றது.  திருவாய்மொழி பத்தாம் பத்து சாற்றுமுறை முன்பு - பெருமாள் அமுது செய்த பிரசாதம், அவரது ஆச்சார்யனான  பேயாள்வார் சந்நிதிக்கு குடை, திருச்சின்ன மரியாதையுடன் ஏளப்பண்ணப்  பெற்று, பேயாழ்வார் சுவீகரித்த பின்பு மழிசைப்பிரானுக்கும், அவரது பக்தர்களுக்கும் வழங்க பெற்றது.



A post on the greatness of  Sri Bakthisarar, hailed as Thirumazhisai Alwar is posted separately.  On the day commemorating his birth ‘Magam Nakshathiram in the month of Thai’ – there was purappadu of Alwar with Sri Varadharajar at Thiruvallikkeni Divyadesam. 

Bakthisarar learnt and mastered many religions including Buddhism, Jainism and practised Saivism for some time too.  In this phase, he was made to understand the supremacy of Sriman Narayana and brought back to Srivaishnava fold by Sri Peyalwar.  

At Thiruvallikkeni divyadesam, on sarrumurai day, after Periya maada veethi purappadu, the Prasadam offered to Lord Devathirajar was thence taken with all paraphernalia to the sannathi of Sri Peyalwar, considered the Acharyar of Mazhisaippiran and after submission of Peyalwar was brought to Thirumazhi alwar and thence distributed to all Sri Vaishnavas – here are couple of photos of prasadam being taken to the sannathi of Sri Peyalwar.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

11th Feb 2017.

Special thanks to Sri Nallan Chakravarthi Rangarajan Swami. [Sri Pachadi Rangarajan Swami]

No comments:

Post a Comment