To search this blog

Sunday, February 19, 2017

நாகத்தணையரங்கம் பேரன்பில்: Thiruvanbil Sri Sundararaja Perumal Thirukovil

Thiruvanbil Sri Sundararaja Perumal Thirukovil

கங்கையில் புனிதமாய் காவிரி நடுவிலே உள்ள அற்புத திவ்யதேசம் திருவரங்கம்.  பொன்னி எனப்படும் காவேரி ஆறு பாயும் பகுதிகள் எல்லாம் வளமாக இருந்தவை.  பொன்னிப்படுகையிலே வளர்ந்த சோழ நாடு வலிமையுடன் திகழ்ந்தது.  சோழர்களின் கொடி புலிக்கொடி; . சோழர்களின்  மலர் ஆத்தி.  "சோழ வளநாடு சோறுடைத்து !"  : என்றார் ஒளவையார்;  சோறு என்பதை அறிவுவளம் என்றும் கூறுவர். பிற்காலங்களில் பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது.  நிற்க !! இது சரித்திர பதிவல்லவே !!

கோவில் என்றாலே நம் திருவரங்கம் ~ இங்கே பள்ளிகொண்டு அருள்பாலிக்கும் திருவரங்கனை சேவித்தபின், அருகிலுள்ள திருவெள்ளறை, திருக்கோழி (உறையூர்); திரு அன்பில், திருப்பேர்நகர் (கோவிலடி, அப்பகூடத்தான்) திவ்யதேசங்களையும்; குணசீலம் போன்ற அபிமான ஸ்தலங்களையும்  சேவிப்பது ஸ்ரீவைஷ்ணவர்கள் இயல்பு.

ஸ்ரீரங்கத்தில் இருந்து லால்குடி மார்கத்தில் இருக்கும் 'திரு அன்பில்' ஒரு அற்புத திவ்யதேசம்.  இந்நாளில் சிறிய ஊராக காணப்படும் அன்பிலில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் நூற்றாண்டுகள் முன்பு, பெரிய கோவிலாக, நிறைய சுற்றுக்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது.  இன்றைய நிலையில், பல திருக்கோவில்கள் போலவே, நிறைய நிலங்கள் சொத்துக்கள் இருந்தும், கோவிலுக்கு பெரிய வருமானம் இல்லாததாகவும், இதனாலே, பிரம்மோத்சவம் போன்ற சிறப்பு உத்சவங்கள் நடைபெற இயலாததாகவும் அறிகிறோம். 



 திருமழிசைப்பிரான்  - 'நான்முகன் திருவந்தாதியில் : 

நாகத்தணைக்  குடந்தை  வெஃகா  திருவெவ்வுள்*,
நாகத்தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்  பாற்கடல்  கிடைக்கும் ஆதி  நெடுமால்*,
அணைப்பார் கருத்தனாவான்.  :  -  என மங்களாசாசனம் செய்துள்ளார்
எம்பெருமான் - திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டு ஸேவைஸாதிக்கப் பெற்ற திருப்பதிகளுள் சில :  திருக்குடந்தை,  திருவெஃகா, திருவெவ்வுள் (திருவள்ளூர்), தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய ஏழு தலங்களில் நாகத்தணையிலே கிடந்தருள்வது அவர்தம் பக்தர்கள் இதயத்திலே புகுவதற்க்காக  *  அணைப்பார் கருத்தனாவான் – “ என்பது : எப்போதும் எம்பெருமானோடு அணைந்தேயிருக்கவேணு மென்று ஆசையுடையார் ‘அணைப்பார்‘ என்ப்படுவர், அவர்களுடைய, கருத்தன் – கருத்திலே (திருவுள்ளத்திலே), பரம சௌலப்யனான ஸ்ரீமன் நாராயணன் எப்போதும்  பொருந்தினவானாக, ஆவான். (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய உரையில் இருந்து)

Kaliyan says of the Lord reclining on the serpent (Adisesha) in Thirukudanthai,  Thiruvekka, Thiru Evvul (Thiruvallur); the holy Thiruvarangam, Thiruppernagar (koviladi aka Appakudathan); Thiru Anbil and Thirupparkadal ~ Sriman Narayana happily reclines on Adisesha in the eternal Ocean of Milk ~ the timeless, limitless, eternally bountiful Lord is reclining only to easily get into the heart of His devotees.   – at ThiruVanbil, He gives darshan as the most beautiful Sundara Rajar (Vadivu Azhagiya Nambi).

இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருக்கோவிலிலே ரூபராஜன் எனும் வடிவழகிய நம்பியான சுந்தர்ராஜனை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.  கோவிலில் நுழைந்ததும் திரு ஆராவமுதன் பட்டர் வரவேற்று கணீர் குரலில் திருத்தலப்பெருமைகளை விளக்கி, சயனித்த திருக்கோலத்தில் இருக்கும் பெருமாளின் பாதரவிந்தங்களையும், தல வரலாற்றில் ப்ரம்மாவின் செருக்கை போக்கியதையும், மண்டூக மகரிஷி விமோச்சனம், வால்மீகி முனிவருக்கு அருளியது, ஆழ்வாரின் பாடல், என அனைத்தையும்  - இனிமையாக விளக்கினார்.  இத்திருத்தலத்தில் உத்சவர் சுந்தரராஜ பெருமாள், உபயநாச்சிமார், அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் ஆண்டாள் சேவை சாதிக்கிறார். சயனித்துள்ள பெருமாளின் திருவடிகளிலே ஸ்ரீதேவி, பூமாதேவி பிராட்டியரும், நாபிக்கமலத்தில் பிரம்மாவும், உள்ளனர். சுந்தரவல்லி நாச்சியாருக்கு தனி சன்னதி உள்ளது.

18.2.2017 அன்று பெருமாளுக்கு தங்க கருட சேவை நடை பெற உள்ளதால், திருக்கோவில் கோபுரங்கள், மின்விளக்குகளுடன் பரிமளித்தன. இக்கோவில் குறித்து பல கல்வெட்டுகள் உள்ளனவாம்.  திவ்யதேசங்களில் (இந்த ஆராவமுதன் போன்ற) பட்டர்கள், கைங்கர்யபரர்களின் உகந்த கைங்கர்யத்தால், பழமையும் பெருமையும் வாய்ந்த திருக்கோவில்களில் நித்ய ஆராதனங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதுபோன்ற கைங்கர்யங்களில் ஈடுபட்டு உள்ளவர்களை ஆதரித்தால் (அவர்களை நம்மால் முடிந்த அளவு சிறப்பாக) நம் சம்ப்ரதாயம் மேலும் சிறப்புற விளங்கும்.  இது ஒவ்வொரு ஸ்ரீ வைணவனின் கடமையாகும்.

From Srirangam divyadesam, one travels around 45 minutes in Lalgudi route to reach Anbil divyadesam.  One can also reach through Kallanai, proceed on route Thirukattupalli – reach Thiruppernagar, have darshan at divyadesam, cross Kollidam river (now there is a new broad bridge) and reach Anbil. 

Anbil is a village near Lalgudi, located on the banks of the Kollidam river, in Tiruchirappalli district. Anbil has had its share in the politics of Tamil Nadu and has temples (besides the divyadesam) of  Mariamman and Sathyavageeswarar. Anbil is considered as three separate villages by the Government of India as of the 2011 Census, namely Jangamarajapuram, Mangammalpuram and Keelanbil.

The beautiful Srivaishnava shrine, in its present form appears a small one – understand that it earlier had many rounds of fortification and had so much of landed property, which like many other temples are not yielding the revenue.  The temple is believed to have been built by the Medieval Cholas of the late 8th century AD, with later contributions from Vijayanagar kings and Madurai Nayaks. The copper plate inscriptions from Anbil indicate generous contribution by the Chola kings to the temple. The rajagopuram, the temple's gateway tower, is east facing and has a 3-tier structure.

Later day  King Sundara chola was a devotee and upon his war victories,  donated immense wealth to this temple. His prime minister Anirudha Brahmarayar is believed to be from Anbil.   The temple is located on the Northern bank of the river Kollidam, at a distance of 25 km (16 mi) from Trichy.

The presiding deity as sung by Thirumazhisai Alwar is in reclining posture on Adisesha.  Inside the sanctum sanctorum, His consort  Sridevi and Bhoomadevi are doing service at His thiruvadi while  Brahma is present from his Thirunabi.  The Uthsavar is the Smiling beautiful Ruparajar – Vaidvu Azhagiya Nambi – Sundara Raja perumal.  Besides the ubayanachimar, there is Andal in seated posture.  Thayar is Sundaravalli thayar in a separate sannathi.

Legend has it that Sage Durvasa once came to meet Mandaka Rishi but had to wait long as the latter was in deep meditation, under the river. Durvasa, who is known for his instant anger, cursed Mandaka Rishi turning him into a frog.  Mandaga’s curse was cured by Sri Sundararajar and this place is also known as Mandaka(Frog) Puri.

At every divyadesam, the antiquity, sampradhayam and rituals are taken care by the few exceptionally devoted people who live and do kainkaryam to Lord without thinking of any recompense.  Here it is Anbil Aravamudha battar who does great kainkaryam and it is the duty of all Srivaishnavaites to support people like him and ensure that our tradition is preserved.  Understand that for lack of revenue, annual Brahmothsavam has stopped for years and the battar is striving hard to make that happen.

Here are some photos of the divyadesam.

Adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]
19th Feb 2017.

Sri Sundraraja perumal photos credit : Sri Aravamudhan battar





1 comment:

  1. Adiyen Ramanuja Dasan. Worrying aspect: // இன்றைய நிலையில், பல திருக்கோவில்கள் போலவே, நிறைய நிலங்கள் சொத்துக்கள் இருந்தும், கோவிலுக்கு பெரிய வருமானம் இல்லாததாகவும், இதனாலே, பிரம்மோத்சவம் போன்ற சிறப்பு உத்சவங்கள் நடைபெற இயலாததாகவும் அறிகிறோம். //
    --
    True and need of the hour:
    திவ்யதேசங்களில் (இந்த ஆராவமுதன் போன்ற) பட்டர்கள், கைங்கர்யபரர்களின் உகந்த கைங்கர்யத்தல், பழமையும் பெருமையும் வாய்ந்த திருக்கோவில்களில் நித்த ஆராதனங்கள் தொடர்ந்து வருகின்றன. இதுபோன்ற கைங்கையரங்களில் ஈடுபட்டு உள்ளவர்களை ஆதரித்தால் (அவர்களை நம்மால் முடிந்த அளவு சிறப்பாக) நம் சம்ப்ரதாயம் மேலும் சிறப்புற விளங்கும். இது ஒவ்வொரு ஸ்ரீ வைணவனின் கடமையாகும்.

    ReplyDelete