To search this blog

Monday, April 29, 2013

Yaanai Vahanam [யானை வாகனம்] - Sri Parthasarathi Brahmothsavam - day 6 Eve


Today 29th April 2013 – is the sixth day of Brahmothsaam and in the evening Sri Parthasarathi had purappadu on ‘Yaanai vahanam’.
திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள் இன்று இரவு ஸ்ரீபார்த்தசாரதி கம்பீரமான  யானை வாகனத்தில் எழுந்து அருளினார். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். மிக கம்பீரமானது. வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பே பட்டரும் அமர்வது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்து, நிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும்.  யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்", "ஒய்யாளி"  என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு.  துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் ஸ்ரீபாதம்தாங்கிகள் மூன்று தடவை வேகமாக முன்னும், பின்னும் ஏளப்பண்ணும்  வைபவம் இது.  முதல் இரண்டு தடவைகள் சிறிது தூரம் ஏளப் பண்ணிய பின்னர், மூன்றாவது தடவை, முழு தெருவும் வேகமாக எழுந்து அருள்வார்.  திரும்பும் போது, மிக துரித நடையிலும், அழகாகவும் ஏளப்பண்ணுவர்கள்.  
யானை பார்க்க பார்க்க கம்பீரம். ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர்.   பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். தமிழ் இலக்கியங்களில் யானை பற்றி பல உள்ளது. ஆண்  யானைக்கு "களிறு  (கரியது); வேழம் (வெள்ளை யானை); மாதங்கம்; கைம்மா (துதிக்கையுடைய விலங்கு); குஞ்சரம்; பெருமா; வாரணம்; கும்பி; தும்பி; வயமா; மதகயம்;" என பல பெயர்களும்; பெண் யானைக்கு : பிடி; அதவை; வடவை; கரிணி; அத்தினி என்ற பெயர்களும் உள்ளன.
பெருமாள் ஸ்ரீகஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். இதையே பொய்கை ஆழ்வார் 'பிடி சேர் களிரளித்த பேராளா' என்கிறார். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார், "களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி" எனவும் ; நம்மாழ்வார் திருவாய்மொழியில் "மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க" என பெருமாள் ஒரு நாளும் மாறாத மதத்தையுடைய குவலயாபீட யானையை தந்தத்தை  உடைத்து கொன்றதையும் எனவும் பல இடங்களில் திவ்ய பிரபந்தத்தில் யானை பற்றி வருகிறது.
இன்றைய புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட   சில படங்கள் இங்கே : 
அடியேன்   ஸ்ரீனிவாச தாசன். 






 Uniqueness of this vahanam : Battar on the vahanam wearing white dress
above: Sri Parthasarathi Battar donning white robes and Sridhar Battar
below : chinna pasanga vahanam replicating the above.


3 comments:

  1. ITS A GREAT PLEASURE TO KNOW THE TAMIL NAMES OF ELEPHANTS THANK YOU

    ReplyDelete
  2. the photos of battar are super... i liked it so much - Jahnavi

    ReplyDelete
  3. the quality of writing, especially quotes of Divyaprabandam shows your vast knowledge and involvement........ but so odd times.. at temple so much ? - Vinodh

    ReplyDelete