திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம் நாள். இன்று [29th April 2013] காலை ஸ்ரீ பார்த்தசாரதி அழகு பொலிந்திட புண்ணிய கோடி விமானத்தில் புறப்பாடு கண்டு அருளினார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
சூர்ணாபிஷேகம் சிறப்பு.
சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு
சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில் எழுந்து அருளிய
களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு
உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது.
இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய
"கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்"
அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது.
29th April 2013, - Today is the 6th day of Brahmothsavam at Thiruvallikkeni Divyadesam for Sri Parthasarathi.
This morning after ‘Choornabishekam’, Sri Parthasarathi had
purappadu in ‘Punniya kodi vimanam’. In the purappadu, ‘Thiruchanda
Virutham’ composed by Sri Thirumazhisai Azhwaar was rendered. These
120 songs fall under the type ‘virutha paa’ – they are replete with numbers and
fall under a specialized category of tamil grammar called ‘enn adukki
cheyyul’.
Some photos taken during the morning purappadu are here.
No comments:
Post a Comment