On the
evening of day 1 – it is Punnai Kilai Vahanam with Lord Parthasarathi, as Sri
Krishna, the Divine Flautist.
புன்னை
கிளை வாஹனம். ஸ்ரீ பார்த்தசாரதி - கண்ணன் - முதல் நாள் மாலை வேய்ங்குழல்
ஊதும் கண்ணனாக 'புன்னை கிளை வாஹனத்தில்' குரவை ஆய்ச்சியர்களோடுவிளையாடும் திருக்கோலம். புன்னை மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள்
ஒன்றாகும். இதன் இலைகள் சற்று பெரியதாகவும்,
பளபளப்பாகவும் இருக்கும். புன்னை மரத்தின் அறிவியற் பெயர்: calophyllum inophyllum
: calophyllum என்பதன் பொருள் அழகான இலை.
பெரியாழ்வார் தனது பாசுரங்களில், கண்ணனின் குழலோசையை "தூவலம்புரியுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே" எனவும் ........
மது சூதனன் வாயில் குழலி னோசை செவியைப்பற்றி வாங்க*
நன்னரம்புடைய தும்புரு வோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து*
கின்னரமிது னங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோமென்றனரே."
என்றெல்லாம் சிறப்புற அனுபவிக்கிறார்.
கண்ணபிரானுடைய வாயில் (வைத்து
ஊதப்பெற்ற) வேய்ங்குழலினுடைய ஸ்வரமானது, காதுகளை
பிடித்திழுக்க, நல்ல வீணையைக் கையிலுடைய தும்புருமுனிவனும் நாரதமஹர்ஷியும் தங்கள் தங்களுடைய
வாத்தியங்களை இனி தொடவும் மாட்டோம் என்றனராம்.
Here are some photos of Sri
Parthasarathi in Punnai Kilai vahanam taken by me
Adiyen Srinivasadhasan
24th April 2013 - @ 11
pm.
No comments:
Post a Comment