Recently had darshan of Namperumal at Srirangam. Thiruvarangam is the first amongst all
divyadesams and ‘Kovil’ refers to Thiruvarangam only.
Srirangam is an island.
The temple is surrounded by 7 lengthy walls and is a fortress. Expanding to 600 acres of land, it has 21
Gopurams. On 28th Apr 2012
was the ‘Poocharru’ Uthsavam. On this
day, the flowers given by all devotees adorn Uthsavar Namperumal. On all other days, all the flowers that adorn
the Lord come exclusively from the garden of ‘Madhurak Kavigal’.
அண்மையில் திருவரங்கத்தில் அரங்கனை சேவிக்கும்
பாக்கியம் வைத்தது. 28.04.2012 அன்று ' பூச்சாற்று' உத்சவம். ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் குவிந்து இருந்தனர்.
'சூழ் புனல் காவிரித் தென்னரங்கம்' என காவிரி ஆற்றினால் சூழப்பட்ட திருவரங்கம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலையாய
திவ்யதேசம். 'கோவில்' என்றாலே அது ஸ்ரீரங்கத்தையே
குறிக்கும். அரங்கநாதர் பள்ளிகொண்ட
திருவரங்கம் ஏழு மதில்களுடன் 600 ஏக்கர் பரப்பளவு
கொண்ட ஒரு தீவு நகரம். இச் சுற்று மதில்களில்
வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத் திவ்யதேசத்தில் பெருமாளுக்கு 'மதுரகவிகள்
நந்தவனத்தில்' இருந்து வரும் மாலைகள் மட்டுமே
சாற்றப்படுகின்றனவாம் ! பிரதி வருடமும்
கோடை காலத்தில் நடைபெறும் பூச்சாற்று உத்ஸவத்தின்போது
மட்டும் தரும் மலர்மாலைகள் பெருமாளுக்கு சாற்றப்பெறுகின்றனவாம்.
மாலை நம்பெருமாள் சன்னதியில் இருந்து சிங்க
நடையில் வெளிப் பிரகாரத்தில் எழுந்து அருளி, தாயார் சன்னதி, மேட்டு அழகியசிங்கர் வழியாக
ஆயிரங்கால் மண்டபம், வெள்ளை கோபுரம் முன்பு உள்ள மணல் வெளியில் உலா வந்த அழகை சேவிக்க
முடிந்தது.
அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே:
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
beautiful description; wonderful photos - Great blog : Hema
ReplyDeletesimply superb swami - Adiyen Rangan
ReplyDelete