To search this blog

Saturday, May 12, 2012

Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam - Kuthirai Vahanam


11th May 2012 was the 8th day of Sri Parthasarathi Brahmothsavam.  Morning it was ‘Vennaithazhi Krishnan”.  In the evening there was the purappadu in Kuthirai vahanam..  this is very special – not only for the ‘aesal (oyyali)’ that occurs at Car Street but more so for the ‘Thirumangai Mannan Vaibhavam’. 

Kaliyan comes chasing on his ‘adalma’.  Neelan, kaliyan – known by various other names was a local chieftain’ who used to feed thousands everyday.  Not finding enough resources he had to resort to robbery and Sriman Narayanan in his various Leelas chose to play with him, by getting robbed, making him realize his folly and turning him to his trusted devotee.  Kaliyan understanding the significance became Thirumangai Azhwaar and rendered Periya Thirumozhi;  in Naalayira Divyaprabandham, Thirumangai mannan has contributed  1137 hymns. 

This divine act is recalled and as stated in the ‘sthala puranam of Thiruvallikkeni’ – Perumal and those accompanying Him lose their valuables.  The entire act is read out in a sanctimonious rite called ‘pattolai’ (literally the verses in palm leaves covered with silk) – which is rendered by Dr M.A. Venkatakrishnan Swami.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பிரம்மோத்சவத்தில்  எட்டாம் திருநாள் [11th May 2012]  ஒரு சிறப்பு நாள் -   காலை 'வெண்ணை தாழி கிருஷ்ணன் திருக்கோலம்'.  மாலை குதிரை வாஹனம்.  மற்ற வாகனங்களுக்கு இல்லாத சிறப்பு குதிரைக்கு மட்டும் என்ன ?

கருட, யானை, குதிரை வாகனங்களில் ஏளும் நாட்களில் ஏசல் (ஒய்யாளி) உண்டு.  குதிரை வாகன ஏசல், தேரடித் தெருவில் நடக்கும்.  குதிரை வாகன புறப்பாட்டில், திருமங்கை மன்னனின் திருவவதார மகிமையை விளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  கலியன், நீலன் என பலவாறு பெயர்பெற்ற திருமங்கை ஆழ்வார், ஒரு மன்னர். தினமும்  1008 பெருமாள் அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் திருடி அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார். அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பெருமாள், திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, "திருமங்கையாழ்வார்' என்று பெயர்பெற்றார்.   திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு  புறப்பாடு காண்கிறார்.  

பெருமாளுடன் வரும் கொத்து பரிசாரங்களையும் மிரட்டி அவர்களிடம் உள்ள எல்லா பொருட்களையும் கவர்கிறார்.   ஸ்ரீமான் நாராயணன்ஆலி நாடரை கலியனாக ஆட்கொண்டு  "ஓம் நமோ நாராயணா" என்னும்  அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார்அருள் பெற்ற ஆழ்வாரும்,  "திருமொழி"பாசுரங்களை "வாடினேன் வாடி வருந்தினேன்" என தொடங்குகிறார்.  

ஒவ்வொரு ஊரிலும் தல புராணங்களில் சில வித்தியாசங்கள் இருப்பது உண்டு. திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் எட்டாம் நாள் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருள்கிறார். சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே, ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை படித்தல் நடைபெறுகிறது.   பெருமாள் பரிவட்டத்துடன் ஸ்ரீ உ.வே. வேங்கட கிருஷ்ணன் சுவாமி தனது கணீர் குரலில் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை படித்தார்.அனைத்து பக்தர்களும் அதை கேட்டு மகிழ்ந்தனர்.  இந்த புராணத்தில், எம்பெருமான்,பிராட்டியார் மற்றும் அவருடன் வந்த கொத்து பரிசனங்களும் மங்கை மன்னனிடம் தங்கள் தங்க நகைகளை இழந்தனர். அந்த நகைகளின் விவரங்களும் மதிப்பும் வாசிக்கப்படுகின்றன. அந்த ஊரின் தலையாரி தலைவன், பெருமாளை வணங்கி, குற்றம் புரிந்த ஆலி நாடனை துரத்தி சென்று பிடித்து, தண்டனை வழங்குவதாக தல புராணத்தில் உள்ளது.

ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், கலியனது பங்கு அதீதம்.  பெரிய திருமொழிதிருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்  என 1137 பாசுரங்கள் நமக்கு அளித்துள்ளார்.  சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் இரண்டு படைப்புகளிலும் தன்னைத் தலைவியாக உருவகித்த நிலையில் அவர் பாடல்களைப் புனைந்துள்ளார்.

திருமாலடியார்களுக்கும் அவர் தமக்கு தொண்டு செய்பவர்களுக்கும், என்றென்றும் சகலவிதமான செல்வங்களும் பெருகும்; அவர்களுக்கு எல்லா நன்மையையும் நடக்கும்.  நாம் செய்ய வேண்டியது எல்லாம் - ஸ்ரீமான் நாராயணன் திருவடிகளில் ஈடுபாடு கொண்டு, அவனது அடியார்களுக்கு எல்லா கைங்கர்யங்களும் செய்ய வேண்டியது மட்டுமே! திருமங்கை மன்னனின் 'பெரிய திருமொழி - முதற்பத்து - முதல் திருமொழியில்' உள்ள இப்பாடல் நம் இல்லங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும்.
  
குலந்தரும் செல்வம் தந்திடும்* அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் *
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் *அருளோடு பெருநிலமளிக்கும் *
வலந்தரும் மற்றும் தந்திடும் * பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் * நாராயணா என்னும் நாமம். 

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் அது.

 அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 






 Kaliyan on his 'aadal maa'
 Dr MAV - pattolai

No comments:

Post a Comment